For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னமும் விடை கிடைக்காத பாஜிராவ் மஸ்தானி காதல் கதையைச் சுற்றியுள்ள மர்மங்கள்!!!

By Super
|

பாஜிராவ் I என பரவலாக அறியப்படும் பாஜிராவ் பல்லால் பாலாஜி பட் என்பவர் பாலாஜி விஸ்வநாத் மற்றும் ராதாபாய் தம்பதியினரின் தலைமகன் ஆவார். இவர் நான்காம் சத்திரபதியான (பேரரசர்) ஷஹு ராஜே போன்ஸ்லேவிடம் பிரதம மந்திரியாக (பேஷ்வா) பணியாற்றினார். இவருடைய போர்கள மூர்க்கத்தனம் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.

காதல் மற்றும் துயரம் நிறைந்த கதை: தேவலோக அழகி ஊர்வசியும்... புருரவாவும்...

பாஜிராவ் பிறவியிலேயே குதிரைப்படைத் தலைவராக பிறந்தவர். புகழ்பெற்ற பேஷ்வாக்களின் நீண்ட பட்டியலில் பாஜிராவ் பல்லாலின் தைரியத்திற்கும், அவரது சாதனைகளின் அளவுக்கும் மதிப்பிற்கும் ஈடு இணையே கிடையாது.

மகாபாரதத்தில் வரும் மிகவும் புகழ்பெற்ற காதல் கதைகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவ பக்தர்

சிவ பக்தர்

41 முக்கியமான போர்களில் சண்டையிட்ட அவர் எதிலுமே தோற்றதில்லை. அவருடைய வெற்றிக்கு பின்னணியாக இருந்த முக்கிய காரணம், அவர் உருவாக்கிய வலுவான புலனாய்வு துறை. எதிரிகளின் இருப்பிடங்கள் பற்றிய அனைத்து தகவல்களையும் பெறும் அளவிற்கு அவருடைய புலனாய்வு துறை மிகவும் வலுவானதாக இருந்தது. போர்களத்தில் தன் படைகளை ஊக்குவிப்பதிலும், தனித்துவமான வழக்கத்தைப் பின்பற்றி வந்தார்; மிக உயரமாக, தியாகத்தை வலியுறுத்தும் காவி நிற கொடியை பறக்க விட்டார். அதனுடன் 'ஹர ஹர மகாதேவா' என முழக்கமிடவும் செய்வார்.

இரவு என்பது தூங்குவதற்கு அல்ல

இரவு என்பது தூங்குவதற்கு அல்ல

பயமில்லா போர்வீரரான பாஜிராவ் ஒரு முறை தன் சகோதரனிடம், "இரவு நேரம் என்பது தூங்குவதற்கு இல்லை. உன் எதிரியின் பிரதேசத்தை தாக்க, அது கடவுளால் படைக்கப்பட்ட நேரமாகும். இரவே உன் கேடயமாகும்; வலிமையான எதிரி படைகளின் பீரங்கிகள் மற்றும் வாள்களில் இருந்து நம்மை பாதுகாக்கும் திரையாகும்." தன் 20 வருட தொழில் அனுபவத்தில் ஒரு போரில் கூட தோல்வியை சந்திக்காத ஒரே போர் வீரன் மற்றும் பிரதம மந்திரி இவர் மட்டும் தான். என்றென்றும் வெற்றியை மட்டுமே கண்டவர் இவர்.

போர்கள மூலோபாயங்களுக்கு ஈடு இணையே கிடையாது

போர்கள மூலோபாயங்களுக்கு ஈடு இணையே கிடையாது

அவருடைய அரசியல் மற்றும் இராணுவத் தலைமை இணையற்றதாக அமைந்தது. டெக்கான் பகுதியில் இருந்து வட இந்தியாவின் பல பகுதிகள் வரை மாரத்தா ராஜ்யத்தை விரிவாக்கம் செய்ய இது உதவியது. இதனால் இந்தியாவின் பெரும் பகுதி மாரத்தா ராஜ்யத்தில் பேரரசர் ஷஹு I அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இன்று வரை பாஜிராவ் எந்த ஒரு போர்களத்திலும் தோற்றதில்லை என அவரின் இடைவிடாத போர்கள பண்பைப் பற்றி தன் எழுத்தின் மூலம் ஜெனரல் மாண்ட்கோமெரி உறுதி செய்துள்ளார்.

காஷிபாய் மற்றும் மஸ்தானி

காஷிபாய் மற்றும் மஸ்தானி

களத்தில் பெற்ற புகழைப் போலவே, அவரது சொந்த வாழ்வும் கூட அனைவரும் புகழும்படியாக பேசும் வண்ணத்தில் இருந்தது. சுத்தமான இந்துவாக இருந்தாலும் கூட பாஜிராவ் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். தன் முதல் மனைவியான காஷிபாய் மற்றும் இரண்டாம் மனைவியான மஸ்தானி மூலமாக குழந்தைகளையும் அவர் கொண்டிருந்தார். இந்து மகாராஜா சட்ரசால் அவர்களின் புதல்வியும், பாஜிராவ்வின் இரண்டாவது மனைவி மஸ்தானியை பேஷ்வா குடும்பத்தினர் முழு மனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கடுமையான காதல் காவியத்திற்கு பல்வேறு கோணங்களும் தோற்றங்களும் உள்ளது.

முதல் பார்வையில் காதல்?

முதல் பார்வையில் காதல்?

தந்தை சட்ரசால் அவர்களின் சபையில் நடன கலைஞராக இருந்தார் மஸ்தானி என கூறப்படுகிறது. சட்ரசாலை முதன் முதலில் பாஜிராவ் சந்திக்க வந்த போது மஸ்தானி மீது காதலில் விழுந்தார். தாக்குதலில் இருந்து காப்பாற்றி தன் அரியணையை தனக்கு மீட்டு தந்ததற்கு நன்றிக்கடனாக தான் தன் மகளை பாஜிராவிற்கு மணம் முடித்து வைத்ததாக சில வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். சட்டப்படி திருமணமான மனைவி தான் என்றாலும், பாஜிராவிற்கு அவர் வைப்பாட்டியாக இருந்து வந்தார் என்றும் சில கருத்துக்கள் நிலவுகிறது.

கடுமையான காதல் கதை

கடுமையான காதல் கதை

தங்கள் காதலுக்கும், திருமணத்திற்கும் சமூக எதிர்ப்பு இருந்தாலும், பாஜிராவும் மஸ்தானியும் மிக ஆழமான புரிதலை கொண்டிருந்தனர். அவர்களின் காதலின் அடையாளமாக, மஸ்தானி மூலமாக பிறந்த அவருடைய மகனான ஷம்செருக்கு 'பந்தாவின் ஜாகிர்'-ஐ வழங்கினார். புகழ்பெற்ற நாட்டுப்பாடலின் படி, பாஜிராவின் மரணச் செய்தியை அறிந்த உடனேயே தான் அணிந்திருந்த மோதிரத்தில் இருந்த விஷத்தை அருந்தி, மஸ்தானி தற்கொலை செய்து கொண்டார். தன் கணவரின் இறுதி சடங்கில், அவருடைய நெருப்பு சிதையில் இறங்கி உயிரை மாய்த்துக் கொண்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இதனை உறுதி செய்யும் ஆவணங்கள் எதுவும் இல்லை.

குடிக்கு ஆட்பட்டவர்

குடிக்கு ஆட்பட்டவர்

இதய பக்கவாதத்தின் தாக்கத்தால் தான் பாஜிராவ் இறந்தார் என இன்றளவும் நம்பப்படுகிறது. குடிக்கு ஆட்பட்டவர் அந்த பழக்கத்தை கைவிடும் போது ஏற்படும் அவதிகளுக்கு இணையாக இருந்தது பாஜிராவின் மோசமான உடல்நல அறிகுறிகள் என்பது பலராலும் அறியப்படாத தகவலாகும். வீட்டு காவலில் இருந்து மஸ்தானியை விடுவித்து, அவரை பாஜிராவிடம் மீண்டும் அனுப்ப வேண்டுமானால், மது குடிக்கும் பழக்கத்தை கைவிட வேண்டும் என பாஜிராவின் தாய் ராதாபாய் சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனால் மஸ்தானி இல்லை என்ற செய்தியை அறிந்த அவர் ஏப்ரல் 28, 1740-ல் உயிரை துறந்தார்.

மஸ்தானியின் மரணம்

மஸ்தானியின் மரணம்

பாஜிராவின் மரணத்தை கேட்ட பிறகு தான் மஸ்தானி இறந்தார் என பாரம்பரிய கட்டுக்கதைகள் கூறுகிறது. ஆனால் உண்மையில், மஸ்தானியே முதலில் இறந்துள்ளார். பேஷ்வா குடும்பத்தில் 'ஜானே புஜன்' விழாக்களில் 1740 மார்ச் மாதத்தில் முடியும் வரை அவரின் மரணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இந்த விழா முடிந்த பிறகு தான் இச்செய்தி பாஜிராவின் காதுகளுக்கு எட்டியது. மாற்றாந்தாய் இளைய சகோதரர்களுடன் பூணூல் அணியும் விழாவில், பாஜிராவ் மற்றும் மஸ்தானியின் மகனான கிருஷ்ணாராவ் (எ) ஷம்ஷேருக்கு அனுமதி அளிக்க பாஜிராவின் தாய் ராதாபாய் மறுத்துவிட்டதை எதிர்த்து, அனைத்து விழாக்களையும் புறக்கணித்தார் பாஜிராவ்.

இரண்டு உலகங்களிலும் சிறந்தது

இரண்டு உலகங்களிலும் சிறந்தது

மஸ்தானி இஸ்லாமிய நடனப்பெண் என கூறி வரலாற்றாசிரியர்கள் அவரை இழிவு படுத்தியுள்ளனர். ஆனால் உண்மையில், பண்டேல்கந்த்தின் இளவரசியும், சட்ரசால் பண்டேலா மகராஜாவின் மகளுமாகிய அவர் ஒரு க்ஷத்ரியை ஆவார். இஸ்லாமியத்தையும், இந்து மதத்தையும் ஒன்றாக கொண்டு வரும் பிரணமி நம்பிக்கையின் முதன்மை பரப்பியாக திகழ்ந்தவர் இவர். கிருஷ்ணரின் பக்தையான இவர், தன் பக்தியில் மூழ்கினால் எழுந்து நடனமாடுவார், விரதமும் ரோஸாவும் இருப்பார், பஜனையும் பாடுவார், நமாஸும் செய்வார்.

காதலுக்கு எல்லைகள் இல்லை

காதலுக்கு எல்லைகள் இல்லை

பாட்டும் நடனத்திலும் புலமை பெற்றவராக இருந்த அவருக்கு, அனைத்து தற்காப்பு கலைகள், அரசியல் மற்றும் அரசியல் தந்திரம், அனைத்து வீட்டு வேலைகள் மற்றும் புலனாய்வு துறையிலும் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. மக்களின் அநீதிகளுக்கு அவர் இரையானார். ஒரு மருமகளாக பணம், நிலம், அறிவு, படைக்கு ஆதரவு போன்ற வகையிலான சீதனம் பேஷ்வாக்களை மிகவும் சக்தி வாய்ந்த படையாக மாற்றியது. இதனால் பாஜிராவ்-மஸ்தானி காதல் கதை காலம் கடந்தும் அனைவராலும் நினைவு கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Conspicuous Theories Around Bajirao Mastani Love Story That Still Have No Answers!

Conspicuous Theories Around Bajirao Mastani Love Story That Still Have No Answers. Take a look...
Desktop Bottom Promotion