For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலும் வந்த முக்கிய கதாப்பாத்திரங்கள்!!!

By Ashok CR
|

ராமாயணமும். மகாபாரதமும் இந்து மதத்தில் உள்ள இரண்டு மகா காவியங்களாகும். பல தலைமுறைகளாக அவை வழிபடப்பட்டு வருகிறது. இந்துக்கள் இவைகளை வெறும் கதைகளாக மட்டும் பார்ப்பதில்லை. மாறாக இதனை ஒரு இதிகாசமாக பார்க்கின்றனர். இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகள் உண்மையாகவே நடந்த சம்பவங்களாகவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பாத்திரங்கள் ஒரு காலத்தில் இந்த பூமியில் இரத்தமும் சதையுடன் கூடிய உயிராக வலம் வந்தனர் எனவும் நம்புகின்றனர்.

மகாபாரதத்தில் அர்ஜுனன் ஏன் துரோணாச்சாரியாரின் விருப்பமான சீடன் என்பது தெரியுமா..?

ராமாயணம் நடைபெற்றது திரோதா யுகத்தில் (இரண்டாவது யுகம்). மகாபாரதம் நடைபெற்றது துவாபர யுகத்தில் (மூன்றாவது யுகம்). இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே மிகப்பெரிய கால இடைவெளி (லட்சக்கணக்கான வருடங்கள்) இருக்கிறது. ஆனாலும் கூட சில பாத்திரங்கள் இரண்டு காவியத்திலும் இடம் பெற்றுள்ளன.

மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?

சில பாத்திரங்கள், அந்த மகா யுகம் முடியும் வரையில் உயிருடன் இருக்க வேண்டி வந்த கடவுள்களாக இருந்த போதிலும், மற்றவர்கள் அனைவரும் மனிதர்களே. சரி, இப்போது இந்த இரண்டு காவியத்திலுமே தோன்றி, இரண்டு கதைகளிலுமே முக்கிய பங்கினை வகித்த 6 கதாபாத்திரங்களை இப்போது பார்க்கலாமா? இந்த கதாபாத்திரங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். நாங்கள் யாரையாவது குறிப்பிடவில்லை என நீங்கள் நினைத்தால் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அனுமான்

அனுமான்

சுக்ரீவனின் அமைச்சராக இருந்த அனுமான், மிகப்பெரிய ராம பக்தன் ஆவார். ராமயணத்தில் உள்ள முக்கிய கதாபாத்திரங்களில் இவரும் ஒருவர். இவர் மகாபாரதத்திலும் வருகிறார்.

அனுமானின் சகோதரரான பீமன் (வாயு அவர்களின் தந்தையாக கருதப்படுகிறார்) சுகந்திகா மலரை பறிக்கச் சென்று கொண்டிருந்த போது, தன் பாதையை ஒரு கிழ குரங்கு தன் வாலால் மறைத்திருப்பதை கண்டான். கடும் கோபம் கொண்ட அவன், பாதையில் இருந்து வாலை எடுக்குமாறு குரங்கிடம் கேட்டான். தனக்கு வயதாகிவிட்டதென்றும் வாலை தூக்க தனக்கு தெம்பில்லை என்றும் கூறியது. அதனால் அவனையே அதன் வாலை நகற்றி வைக்க சொன்னது. ஆனால் தன் பலம் மற்றும் சக்தியின் மீது கர்வம் கொண்ட பீமனாலேயே அதன் வாலை தூக்க முடியவில்லை. கர்வம் உடைந்த பீமன், தாங்கள் உண்மையிலேயே யார் என அந்த குரங்கிடம் கேட்டான். அதற்கு அந்த கிழ குரங்கு, தான் தான் அனுமான் என கூறி, பீமனை ஆசீர்வாதம் செய்தது.

ஜாம்பவான்/சம்பவத்

ஜாம்பவான்/சம்பவத்

கரடி போன்று இருப்பதாக விவரிக்கபப்ட்டுள்ள சம்பவத் ராமாயணம், மகாபாரதம் என இரண்டிலுமே வருகிறார். சுக்ரீவனால் தலைமை தாங்கப்பட்ட ராமரின் படையில் பணியாற்றினான் ஜாம்பவான். சீதையை பார்க்க அனுமனை கடலை கடக்க சொன்ன போது, ஒரு சாபத்தால் தான் கொண்டிருந்த சக்தியை அனுமான் மறந்திருந்தார். அவரால் கடலை கடந்து இலங்கையில் உள்ள சீதாவை கண்டுபிடிக்க முடியும் என அவருக்கு நினைவூட்டியது ஜாம்பவான் தான்.

மகாபாரதத்தில், கிருஷ்ணரின் உண்மையான அடையாளம் தெரியாமல் அவருடன் ஜாம்பவான் சண்டையிட்டார் என கூறப்படுகிறது. தானும் ராமரும் ஒன்று தான் என அவர் தெரிவித்ததும், ஜாம்பவான் மனிப்பு கேட்டான். தன் மகளாகிய சம்பவதியை கிருஷ்ணருக்கு மனம் முடித்தும் வைத்தான்.

விபீஷணன்

விபீஷணன்

ராவணனின் சகோதரனான விபீஷணன் ராமரின் பக்கம் நின்று சண்டையிட்டான். போர் முடிந்தவுடன், இலங்கையின் மன்னனாக விபீஷணன் மகுடம் சூட்டப்பட்டான்.

மகாபாரதத்தில், பாண்டவர்கள் ராஜசூய யாகத்தை நடத்திய போது, அவர்களின் அழைப்பை விபீஷணன் ஏற்றுக்கொண்டு, விலைமதிப்புமிக்க பரிசு பொருட்களை அவர்களுக்கு அனுப்பி வைத்தான் என நம்பப்படுகிறது.

பரசுராமன்

பரசுராமன்

ராமாயணத்தில் ராமரிடம் சண்டைக்கு வருமாறு சவால் விட்டதாக பரசுராமன் அறியப்படுகிறான். சீதாவின் சுயம்வரத்தில் சிவபெருமானுக்கு சொந்தமான அம்பை ராமர் உடைத்து விட்டார் என அவன் வருத்தத்தில் இருந்தான். ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பதை அறிந்த அவன், ராமரிடம் மன்னிப்பு கேட்டு, ஆசியும் பெற்றான்.

மகாபாரதத்தில், பீஷமர் மற்றும் கர்ணனுக்கு குருவாக பரசுராமன் அறியப்படுகிறார்.

மாயசுரா

மாயசுரா

ராமாயணத்தில் மண்டோதரியின் தந்தையாக மாயசுரா அறியப்படுவதால், அவர் ராவணனின் மாமனார் ஆவார்.

மகாபாரதத்தில், பாண்டவர்களால் தண்டக வனம் எரிக்கப்பட்ட போது, இவர் மட்டுமே உயிர் பிழைத்தவர். கிருஷ்ணரும் கூட இவரை கொல்ல நினைத்தார். ஆனால் அவரோ அர்ஜுனனிடம் அடைக்கலம் புகுந்தார். தன் உயிருக்கு ஈடாக, இந்திரபிரஸ்த மாய சபையை அவர் கட்டிக் கொடுத்தார்.

மகரிஷி துர்வாசா

மகரிஷி துர்வாசா

ராமயாணத்தில் மகரிஷி துர்வாசா பிரபலாமானவர். இவர் தான் சீதா மற்றும் ராமனின் பிரிவை கணித்தவர்.

மகாபாரதத்தில், ஐந்து பாண்டவர்களின் பிறப்புக்கு வழி வகுத்த மந்திரத்தை குந்தி தேவியிடம் கொடுத்த முனிவரே இந்த மகரிஷி துர்வாசா.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Characters That Appear Both In Mahabharata And Ramayana

Mahabharata And Ramayana had a huge gap of time in between (supposedly, millions of years) but still, it is seen that there are a few characters that appear in both.
Story first published: Monday, September 14, 2015, 11:53 [IST]
Desktop Bottom Promotion