For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அய்யய்யயோ... ஆனந்தமே!!! ஆஸ்திரேலியா அறிஞர்கள் கண்டுப்பிடித்துள்ள புது வகை ஆணுறை!!!

|

மாற்றம் மட்டுமே மாறாதது! தினசரி ஏதேனும் ஒரு அறிவியல் கண்டுப்பிடிப்புகளின் அப்-டேட்டுகள் வந்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஹேர் பின், சேஃப்டி பின், ஆணுறை போன்ற சிலவன தான் அப்டேட் கலாச்சாரத்தை விட்டு ஒதுங்கி இருந்தன.

காண்டம் பயன்படுத்துவதனால் ஏற்படும் பக்க விளைவுகள் - ஷாக் ரிப்போர்ட்!!!

மனிதனுக்கு அதிகபட்ச சுகத்தைக் கொடுப்பதே உடலுறவு தான். ஆனால், அதற்கான பாதுகாப்பு கருவியாக இருக்கும் ஆணுறையே பல சமயங்களில் தடையாகிப் போகிறது என்பதை உணர்ந்து விரக்தி அடைந்த ஆஸ்திரேலியா அறிவியல் அறிஞர்கள், ஹைட்ரோஜெல் கொண்டு தயாரிக்கப்பட்ட புது வகையிலான ஆணுறையைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

ஆணுறையை தவிர்க்க ஆண்கள் சொல்லும் 10 சாக்கு போக்குகள்!!!

இது, மனித தசையைப் போலவே உணர்வை தரக் கூடியதாம். இதனால், அதிக இன்பமடைய முடியும் என்கின்றனர் இதைக் கண்டுப்பிடித்த அறிவியல் அறிஞர்கள். மேலும், இதைப் பற்றி விரிவாக தெரிந்துக்கொள்ள தொடர்ந்துப் படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹைட்ரோஜெல்

ஹைட்ரோஜெல்

மிக வலிமையையும், வளைந்துக் கொடுக்கும் தன்மையும் உடைய ஹைட்ரோஜெல் எனும் மூலப்பொருள் கொண்டு இந்த ஆணுறைத் தயாரிக்கப்பட்டுள்ளது.

சுய உராய்வு

சுய உராய்வு

ஆணுறை பயன்படுத்தும் போது தடை ஏற்பட்டால் லூப்ரிகென்ட் (Lubricant) எனப்படும் எண்ணெய் போன்ற பொருள்கள் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்து புது வகை ஆணுறை சுய உராய்வு (Lubricant) தன்மைக் கொண்டுள்ளதால் அவைத் தேவைப்படாது என்று ஆஸ்திரேலியா அறிஞர்கள் கூறுகின்றனர்.

மனிதத் தசை போன்ற உணர்வு

மனிதத் தசை போன்ற உணர்வு

ஹைட்ரோஜெல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த புது வகை ஆணுறை உங்களுக்கு மனித தசைப் போலவே உணர்வை அளிக்கக் கூடியது என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

கிழிதல் ஏற்படாது

கிழிதல் ஏற்படாது

பொதுவாக சில சமயங்களில் உடலுறவுக் கொள்ளும் போது ஆணுறைக் கிழிதல் ஏற்படும். இந்த புது வகை ஆணுறையில் அவ்வாறு கிழிதல் ஏற்படாது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பானது

பாதுகாப்பானது

கிழிதல் ஏற்படாத அளவுப் பாதுகாப்பு இருப்பதனால், இந்த ஆணுறைப் பயன்படுத்துவதன் மூலம் பால்வினை நோய்களின் தாக்கத்தில் இருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும் என்று இந்த புது வகை ஆணுறையைக் கண்டுப்பிடித்த அறிஞர்கள் கூறியிருக்கின்றனர்.

வோல்லோங்கோங் பல்கலைகழகம் (University of Wollongong)

வோல்லோங்கோங் பல்கலைகழகம் (University of Wollongong)

ஆஸ்திரேலியாவில் உள்ள வோல்லோங்கோங் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் தான் இந்த புது வகை ஆணுறையைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

Image Courtesy

$100,000 டாலர்

$100,000 டாலர்

ஆணுறையின் அடுத்தத் தலைமுறை என்று கூறப்படும் இந்த ஆணுறையைக் கண்டுப்பிடித்தமைக்கு $100,000 டாலர்கள் பரிசாக வென்றுள்ளார்கள் வோல்லோங்கோங் பல்கலைகழகத்தை சேர்ந்த அறிவியல் அறிஞர்கள்

பயோமெட்ரிக் சோதனை

பயோமெட்ரிக் சோதனை

தற்போது இந்த புது வகை ஆணுறை பயோமெட்ரிக் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.

விற்பனைக்கு வரவில்லை

விற்பனைக்கு வரவில்லை

இந்த புதுவகை ஆணுறை இன்னும் விற்பனைக்கு வரவில்லை. அனைத்துப் பரிசோதனைகளும் முடிந்த பிறகு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Australian Scientists Designing A Revolutionary Condom That Could Feel Better

Scientists from the University of Wollongong are designing ultra-durable condoms they claim could feel even better than nothing at all.
Story first published: Monday, April 13, 2015, 12:28 [IST]
Desktop Bottom Promotion