For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய இராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் உண்மைகள்!

|

ஊழலும், லஞ்சமும் தலைவிரித்தாடும் கொடுமையிலும் நமது நாடும், நாட்டு மக்களும் கொஞ்சம் நிம்மதியாய் இருகின்றனர் என்றால் அதற்கு காரணம் எல்லையில் தங்களது பந்தம், பாசம், குடும்பங்களை எல்லாம் மறந்து, நாட்டுக்காக மட்டும் போராடும் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் தான்.

இந்திய விடுதலைக்கு வித்திட்ட சுபாஷ் சந்திர போஸ் பற்றி மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

தாயுள்ளம் கூட தனது பிள்ளைகளுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால், நமது இந்திய ராணுவ வீரர்கள் நம் தேசம் மட்டுமின்றி. பிற நாடுகளில் ஏதேனும் இயற்கை சீற்றங்கள் உண்டாகியிருந்தாலும் கூட, அங்கும் சென்று தங்களது பணியை செம்மையாக செய்து பல உயிர்களை காப்பாற்றி நற்காரியங்களைச் செய்துள்ளனர்.

கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!

எத்தனயோ பிரிவுகளில் சாதனைகள், வியக்க வைக்கும் தகவல்கள் என கண்டிருக்கிறோம். ஆனால், நமக்காக, நமது தேசத்திற்காக போராடி வரும், நமது வீரர்களின் சாதனை மற்றும் அவர்களை பற்றிய வியக்க வைக்கும் தகவல்கள் பற்றியும் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா....

இந்திய சட்டப்புத்தகத்தைப் பற்றிய சில திகைப்பான தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது

உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது

உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டு[ப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.

தன்னார்வம் அதிகம்

தன்னார்வம் அதிகம்

உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.

மலை பகுதிகளில் சிறந்த செயல்பாடு

மலை பகுதிகளில் சிறந்த செயல்பாடு

மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.

ஆப்ரேஷன் ராஹத்

ஆப்ரேஷன் ராஹத்

கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.

கப்பல் படை

கப்பல் படை

கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.

பழம்பெரும் படை

பழம்பெரும் படை

உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

பெய்லி பாலம் (Bailey Bridge)

பெய்லி பாலம் (Bailey Bridge)

இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.

1971 இந்தியா பாகிஸ்தான் போர்

1971 இந்தியா பாகிஸ்தான் போர்

கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.

உலகிலே மூன்றாவது பெரிய ராணுவம்

உலகிலே மூன்றாவது பெரிய ராணுவம்

உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.

அக்னி ஏவுகணை

அக்னி ஏவுகணை

உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.

வேகமான ஏவுகணை

வேகமான ஏவுகணை

ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.

இந்திய ராணுவம் தொடங்கப்பட்ட நாள்

இந்திய ராணுவம் தொடங்கப்பட்ட நாள்

இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.

பெரிய பட்டாளம்

பெரிய பட்டாளம்

உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.

கொரில்லா முறை தாக்குதல்கள்

கொரில்லா முறை தாக்குதல்கள்

போரில் காட்டில் மறைந்திருந்து மரங்களில் இருந்து தாவி போரிடும் முறையான கொரில்லா போர் முறையில் நம் நாட்டவர்கள் சிறந்து செயல்படக் கூடியவர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Facts About The Indian Army That Will Make You Proud

Do You Know The Amazing Facts About The Indian Army That Will Make You Proud? Read here.
Desktop Bottom Promotion