For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரை நீங்கள் கேட்டிராத இயற்கையான 7 அதிசயங்கள்!!!

By Ashok CR
|

கிராண்ட் கேன்யன் மற்றும் எவரெஸ்ட் மலையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். கண்டிப்பாக அவைகள் பிரமிக்கத்தக்க இடங்கள் தான். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இந்த பூமியில் அவைகளை போலவே பிரமிக்கத்தக்க இன்னும் பல இடங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆனால் அந்த இடங்களுக்கெல்லாம் அதற்கான அங்கீகாரம் கிடைக்காமல் உள்ளது ஒரு மிகப்பெரிய சோகமாகும். இதுவரை நீங்கள் கேட்டிராத, அசத்தலான சில இயற்கையான அதிசயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜேஜு தீவு, தென் கொரியா

ஜேஜு தீவு, தென் கொரியா

கொரியா நாட்டின் கடற்கரையில் உள்ள மிதவெப்ப தீவான ஜேஜு தீவு (Jeju Island), இதுவரை யாருமே கால் பதித்திடாத, உலகத்தில் உள்ள மிக அழகிய காடுகளை கொண்டுள்ளது. அடர்ந்த மக்கள் தொகையை கொண்ட தென் கொரியா போன்ற நாட்டிலே இப்படி ஒரு இடமா என ஆச்சரியமாக உள்ளதா? இந்த அரை வெப்பமண்டல தீவில் உள்ள புகழ்பெற்ற விஷயங்களில் ஒன்று தான், இந்த நாட்டை சேர்ந்த ஹேன்யியோ பெண்கள். குளிர்ந்த நீரில் மீன் பிடிக்க எந்த ஒரு ஆழ்கடல் கருவிகளையும் பயன்படுத்தாமல் மணிக்கணக்கில் கடலில் முக்குளிப்பார்கள். இந்த தீவின் அழகு அச்சுறுத்தலில் உள்ளது. இருப்பினும் தென் கொரிய அரசாங்கம் ஜேஜுவின் தென் கரையோரப் பகுதிகளில் கடற்படையை வளர்த்துக் கொண்டிருக்கிறது.

புர்டோ பிரின்சஸா நிலத்தடி ஆறு, பிலிப்பின்ஸ்

புர்டோ பிரின்சஸா நிலத்தடி ஆறு, பிலிப்பின்ஸ்

கிட்டத்தட்ட 8.2 கிலோமீட்டருக்கும் அதிகமாக உள்ள மிக நீளமான நதியான புர்டோ பிரின்சஸா நிலத்தடி ஆறு (Puerto Princesa Underground River), முழுமையாக செல்லக்கூடியவையாகும். இந்த நதி நேரடியாக கடலில் கலப்பதாலும், அதன் மேலுள்ள மலைகள் இந்த வட்டாரத்திலேயே, ஏன் இந்த கண்டத்திலேயே இல்லாத அளவிற்கு அழகான காடுகளை கொண்டுள்ளது. இந்த குகைகளில் மட்டும் 8 விதமான வவ்வால்கள் குடி கொண்டிருக்கின்றன. கடலிலும் காட்டிலும் பள்ளிகள், முதலைகள், ஆமைகள் மற்றும் இதர நீர்வாழ் விலங்குகள் பலவற்றை பார்க்கலாம்.

Image Courtesy

அலெஜாண்ட்ரோ டி ஹம்போல்ட் தேசிய பூங்கா, கியூபா

அலெஜாண்ட்ரோ டி ஹம்போல்ட் தேசிய பூங்கா, கியூபா

கரீபியன் பகுதிகளில் உள்ள மிக அழகிய மலைக்காடு என்பதற்கு உதாரணமாய் அலெஜாண்ட்ரோ டி ஹம்போல்ட் தேசிய பூங்கா (Alejandro de Humboldt National Park)விளங்குகிறது. இந்த தேசிய பூங்கா பல்வேறு தனித்துவம் வாய்ந்த மிருக வகைகளுக்கு வீடாகத் திகழ்கிறது. இங்கே தனித்துவம் வாய்ந்த செடிகள் 1,300 உள்ளது. அதில் 300 வகைகளை இந்த வட்டாரத்திலும், இங்குள்ள பூங்காவிலும் பரவலாக காணலாம். இதுப்போக ஆபத்தான பறவை இனங்களையும் கூட இங்கே காணலாம்.

சொகோட்ரா தீவுகள், ஏமன்

சொகோட்ரா தீவுகள், ஏமன்

கெட்டியான, தரிசு நிலப் பாலைவனங்கள் போன்றவைகளுடன் தொடர்புடைய வட்டாரம் என்றால், இந்த சொகோட்ரா தீவினை (Socotra Islands) உதாரணமாக சொல்லலாம். சொல்லப்போனால், உயிரியல் சார்ந்த வேறுபாடுகள் நிறைந்த இடங்களில் இதுவும் ஒரு இடத்தை பிடிக்கும். அதன் நாட்டில் இருந்து பல ஆண்டுகளாக தனித்து இருக்கும் இந்த சொகோட்ரா தீவே ஒரு பெரிய இடமாக அமைந்துள்ளது. உயர்ந்த மலைகள் மற்றும் மணல் கடற்கரைகளை கொண்ட இந்த தீவும் தனித்துவமான குணத்தை கொண்டுள்ளது. இங்கே எண்ணிலடங்காத தாவர வகைகள் உள்ளது. இதில் ட்ராகன் ப்ளட் மரங்களும் அடக்கம்.

கிழக்கு ரென்னெல் தீவு, சாலமன் தீவுகள்

கிழக்கு ரென்னெல் தீவு, சாலமன் தீவுகள்

தென் பசிபிக் நாட்டின் சாலமன் தீவுகளில் உள்ள, சிறிதாக அறியப்படும் இந்த கிழக்கு ரென்னெல் தீவானது (East Rennell Island) அற்புதமான காடு மற்றும் வட்டாரத்தின் மிகப்பெரிய ஏரிளால் சூழ்ந்துள்ளது. இந்த ஏரியைச் சுற்றி, இதுவரை மனிதர்கள் கால் தடம் பதியாத அடர்ந்த காடு உள்ளது. இங்கே மட்டுமே பல வகையான அரிய தாவரங்களும், மிருக வகைகளையும் காணலாம். இதில் பறவைகள், வவ்வால்கள் மற்றும் நில நத்தைகளை கூட காணலாம்.

Image Courtesy

ட்சிங்கி டி பெமரஹா தேசிய பூங்கா, மடகஸ்கார்

ட்சிங்கி டி பெமரஹா தேசிய பூங்கா, மடகஸ்கார்

ட்சிங்கி டி பெமரஹா தேசிய பூங்காவில் (Tsingy de Bemaraha National Park) பல்வேறு வகையான சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளது. மலைக் காடுகள் முதல் வனாந்தர பகுதிகள் வரை இங்கே மிக பரவலாக காணப்படும் ட்சிங்கி டி பெமரஹா 600 சதுர மைல் பரப்பளவை கொண்டுள்ளது. மூச்சடைக்க வைக்கும் சுண்ணாம்புக் கல் உருவாக்கங்கள், சதுப்பு நிலக் காடுகள் மற்றும் மடகஸ்கார் என்பதால் நரி போன்ற முகம் கொண்ட லெமூர் மிருகங்கள் போன்றவைகள் இந்த தேசிய பூங்காவை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றியுள்ளது. யூனேஸ்கோ உலக ஹெரிடேஜ் தளம் என்ற பதவிக்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது இது.

ப்ளிட்வைஸ் ஏரிகள் தேசிய பூங்கா, க்ரோஷியா

ப்ளிட்வைஸ் ஏரிகள் தேசிய பூங்கா, க்ரோஷியா

மிகவும் அழகிய மற்றும் அருமையான இயற்கை ஏரிகள், அருவிகள், குகைகள், நீரோடைகளை கொண்ட இந்த அருமையான ப்ளிட்வைஸ் ஏரிகள் தேசிய பூங்கா (Plitvice Lakes National Park) ஐரோப்பாவில் உள்ளது. அரிய வகையான பல பறவை இனங்கள், ஓநாய்கள் மற்றும் கரடிகள் இதனை தங்கள் வீடாக கொண்டுள்ளது. அடர்ந்த காட்டை கொண்டுள்ள இந்த இடத்தில் புங்க மரம் மற்றும் ஃபிர் மரங்களை மிக உயரத்தில் காணலாம். அதன் கீழே பரணி, மேப்பில் மற்றும் குட்டையாக வளரும் புதர் செடிகளையும் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Natural Wonders You Haven’t Heard Of

Here are some of the most stunning natural wonders you’ve never heard of. Take a look...
Desktop Bottom Promotion