For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொபைல் ஃபோன் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்கள்!!!

|

நமது வீட்டிலும், வாழ்க்கையிலும் தினசரி இடம் பெற்றிருந்த காலேண்டர், கடிகாரம், டார்ச் லைட் மற்றும் பல பொருட்களை விரட்டி அடித்துவிட்டு நமது கைகளில் செல்லமான குழந்தை போல தவழ்ந்துக் கொண்டிருகிறது மொபைல் ஃபோன். முதன் முதலாக கடந்த 1973 ஆம் ஆண்டு மோட்டோரோலா நிறுவனத்தில் பணிப்புரிந்து வந்த ஜான் மற்றும் கூப்பர் ஆகிய இருவர் தான் கையில் சுலபமாக பயன்படுத்தப்படும் வகையிலான மொபைல் கருவியை கண்டுப்பிடித்தனர். ஆயினும் இது சந்தையில் பரவலாக விற்பனைக்கு வந்தது என்னவோ 1983 ஆம் ஆண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நமது வாழ்வின் ஒரு அங்கமாக குடியமர்ந்து நம்மை ஆட்டிப் படைக்கும் இந்த மொபைல் ஃபோன் பற்றி நீங்கள் அறிந்திராத பல தகவல்கள் உங்களுக்காக...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொபைல் ஃபோனின் தந்தை

மொபைல் ஃபோனின் தந்தை

மோட்டோரோலாவின் முன்னாள் நிறுவனரும் மொபைல் ஃபோனை கண்டிப்பிடுத்தவருமான டாக்டர்.மார்டின் கூப்பர் தான் மொபைல் ஃபோனின் தந்தை என குறிப்பிடப்படுகிறார்.

 முதல் ஸ்மார்ட் ஃபோன்

முதல் ஸ்மார்ட் ஃபோன்

1993 ஆம் ஆண்டு முதல் முறையாக ஐ- ஃபோன் நிறுவனத்திற்கு முன்பே ஐ.பி.எம் என்ற மொபைல் நிறுவனம் ஸ்மார்ட் ஃபோனை வெளியிட்டது. இதில், ஃபேக்ஸ், காலேண்டர், டார்ச் லைட் மற்றும் தொடுதிரை போன்ற சிறப்பம்சங்களாக சேர்க்கப்பட்டிருந்தன.

அதிகம் விற்கப்பட்ட மொபைல்

அதிகம் விற்கப்பட்ட மொபைல்

மொபைல் ஃபோன் வரலாற்றிலேயே அதிகமாக விற்கப்பட்ட மொபைல் என்ற பெருமை நோக்கியா 1100 சார்ந்துள்ளது. இந்த மொபைல் போல வாழ்நாள் திறன் உள்ள மொபைல் வேறு எந்த மொபைலும் தர இயலாது. 2016ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவணும் இந்த மொபைலை ஸ்மார்ட் ஃபோனாக வெளியிட உள்ளது என்பது துணுக்கு செய்தி.

அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டப்பட்ட மொபைல் பில்

அதிகமாக வசூலிக்கப்பட்ட கட்டப்பட்ட மொபைல் பில்

ப்ளோரிடா மாகணத்தில் வசித்து வந்த செலினா ஆரோன் என்பவர் கனடா சென்ற போது இரண்டு வாரம் மொபைல் உபயோகித்த காரணத்தினால் அவரது மொபைல் எண்ணுக்கு 1,42,000 யூரோ கட்டணமாக வசூலிக்க பில் அனுப்பப்பட்டது தான் இன்றளவிலும் அதிகபட்சமான மொபைல் பில்லாக கருதப்படுகிறது.

மொபைலில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்

மொபைலில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம்

1997ஆம் ஆண்டு ஃபிலிப் என்பவர் தனக்கு குழந்தை பிறந்ததை புகைப்படம் எடுத்து தனது நண்பருடன் பகிர்ந்தது தான் உலகிலேயே முதல்முறையாக பகிரப்பட்ட புகைப்படமாகும்.

மொபைல் திருட்டு

மொபைல் திருட்டு

ஐரோப்பியாவில் உள்ள லண்டன் மாநகரில் ஒரு நிமிடத்திற்கு மூன்று மொபைல்கள் திருடப்படுகிறது. இது தான் உலகிலேயே அதிகமாக மொபைல் திருடப்படும் இடமாக கருதப்படுகிறது.

அதிக பயன்பாடு

அதிக பயன்பாடு

மொபைல் செய்தி அனுப்பு அதிகம் பயன்படுகிறதா? அல்ல அழைப்புகளுக்கு அதிகம் பயன்படுகிறதா? என்றால் இரண்டுமே அல்ல. நேரம் பார்ப்பதற்காக தான் அதிகமாக மொபைல் ஃபோன் பயன்படுத்தப்படுகிறது.

 குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் மொபைல்

குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் மொபைல்

உலகிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் மொபைல் ஐ-ஃபோன் தானாம். இதன் அளவிற்கு சிறப்பம்சங்களை துல்லியமான திறனுடன், தொழில்நுட்பத்துடன் வேறு யாரும் தயாரிப்பதில்லை என்பதே காரணம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

40 Years Of The Mobile Phone Top Facts

Do you want to know about the 40 years of the mobile phone top facts? then read here
Desktop Bottom Promotion