For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னமா நீங்க இப்படி பண்றீங்களே? - ஆண்கள் வருத்தப்படுகிற விஷயங்கள்!

|

பெரியதாக விபத்துகள் ஏற்பட்டுவிட்டாலோ, தேர்வில் தோல்வி அடைந்துவிட்டாலோ, அம்மா, அப்பா தங்களை திட்டிவிட்டாலோ அல்லது ஆசை காதலி சண்டையிட்டு பிரிந்துவிட்டாலோ இந்திய ஆண்கள் வருத்தப்படுவார்கள் என யாராவது நினைத்தால், சாரி அதுக்கெல்லாம் நாங்க கண்கலங்க மாட்டோம் என காலரை தூக்கிவிட்டபடி நடப்பவர்கள் இந்திய ஆண்கள். ஆனால், எல்லோரும் எல்லா விஷயத்திலும் ஜாலியாக இருப்பார்கள் என்று நாம் நினைத்துவிட கூடாது. இந்திய ஆண்களுக்கும் மனதிருக்கிறது அவர்களது கண்களும் சிவக்கும், கன்னங்கள் துடிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சச்சின் 90 களில் ஆட்டமிழக்கும் போது, தனக்கு பிடித்த நடிகரின் திரைப்படத்திற்கு முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காத போது, அப்படியே அடித்து பிடித்து டிக்கெட் வாங்கிக்கொண்டு போனாலும் தனக்கு கிடைக்காத வரமாய் தனது நண்பனின் அருகே ஒரு அழகு மயில் அமர்வது என அவர்களது இளமை நாட்களில் அவர்கள் வருந்தாதே நாட்களே இருந்ததில்லை. அப்படிப்பட்ட நாட்களை கொஞ்சம் புரட்டி பார்க்கும் ஒரு சரித்திர கதையின் பின்னோட்டம் தான் இந்த கட்டுரை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தை பருவம்

குழந்தை பருவம்

இருபதில் இருந்து அறுபது வரை உள்ள அனைத்து ஆண்களும் நினைத்து வருந்துவது, மன ஏங்குவது மீண்டும் ஒரே ஒரு நாள் அந்த குழந்தை பருவம் கிடைக்குமா என்பதற்காக தான். விவரம் தெரியாத அந்த நாட்களை போல இனிமையானது இன்றே உலகே அறிந்திருந்தும் கிடைப்பதில்லை என்பது தான் உண்மை.

தேர்வு முடிவுகள்

தேர்வு முடிவுகள்

கண்டிப்பாக நாம் நூற்றுக்கு நூறு எடுக்க போவதில்லை என தெரியும் ஆனால் நாம் எதிர்பார்த்த அந்த ஜஸ்ட் பாஸ் மதிப்பெண் கூட போடா மறுத்து நம்மை வெறுப்பேற்றும் ஆசிரியர்கள் மீத தீராத பகை வளர்க்க ஆரம்பித்த நாட்கள் அவை. இதில் சிலர் முட்டை வறுத்துவிட்டு வருத்தமே இல்லாமல் சுற்றுவது தான் உச்சபட்ச அட்டகாசம்.

போலி காய்ச்சலும் ஜாலி நாட்களும்

போலி காய்ச்சலும் ஜாலி நாட்களும்

கண்டிப்பாக பள்ளி நாட்களில் காய்ச்சல் வருகிறது என்றால், ஒன்று அது திங்கள்கிழமையாக இருக்க வேண்டும் அல்ல இந்திய அணியின் கிரிக்கெட் போட்டி நாளாக இருக்க வேண்டும் இல்லையேல் கடைசி பட்சத்தில் நமக்கு (நம்மை) பிடிக்காத வாத்தியார் தேர்வு வைத்த நாளாக இருக்க வேண்டும்.

சிறுவயது பொழுதுபோக்கு

சிறுவயது பொழுதுபோக்கு

நமக்கு இப்போது ஷாப்பிங் மால் செல்வது, வெளியூர் செல்வது பைக்கில் ஊர் சுற்றுவது என பல பொழுதுபோக்குகள் இருக்கலாம். ஆனால், அந்த சின்ன வயதில் நம் வயதுடைய சிறுவர்களோடு கில்லி தாண்டு, கோலி குண்டு, மேடு பள்ளம், இரவில் கண்ணாமூச்சி என எண்ணற்ற விளையாட்டுகளை போல இன்று ஒரு பொழுது கூட அமைவதில்லை.

பிடிக்காத வேலை

பிடிக்காத வேலை

ஆண்கள் மிகவும் வருந்துவது பிடிக்காத வேலையை தினமும் செய்வது. ஆனால், இந்த சமூகம், அந்தஸ்த்து, பணம் போன்றவையின் காரணங்களினால் பல ஆண்கள் அவர்களுக்கு பிடிக்காத வேலைகளையே தினமும் செய்ய வேண்டிய கட்டயாத்தில் இருகின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

ஒவ்வொரு ஆணும் வாழ்க்கையையே வெறுத்து போகும் நாள், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை பார்க்க முடியாது போகும் தருணங்கள். அதிலும் கரண்ட் கட் காரணமாக இருந்தால் மின்சார வாரியத்தை கழுவி ஊற்றிவிடும் அவர்களது வார்த்தை அர்ச்சனைகள்.

ஆங்கிலம்

ஆங்கிலம்

கல்லூரி முடிக்கும் வரை ஆங்கிலம் என்ற ஒன்றை ஓட ஓட விரட்டிய ஆண்களை, வேலைக்கு சென்ற பிறகு ஆங்கிலம் பழிவாங்க தொடங்கும் உலக எல்லைகள் எந்த மூலைக்கு சென்றாலும் விடாத கருப்பாய் துரத்தும். இது ஆண்களை வலுவாக வருந்தவைக்கும் நிகழ்வாகும்.

தொலைந்து போன பள்ளி நண்பர்கள்

தொலைந்து போன பள்ளி நண்பர்கள்

நம்முடன் சுற்றித்திரிந்து, திருட்டு மாங்காய் அடிப்பதில் இருந்து நம்மளை ஏறெடுத்து பார்க்காத பெண்ணோடு சேர்த்துவைக்கும் வரை நமக்கு துணையாய் இருந்த அந்த பள்ளி தோழன், திடீரென நாம் நினைவில் மட்டும் தோன்றுவான் முப்பதுகளில் நாட்களை புரட்டி பார்க்கும் போது. அந்த தோழர்களை ஆண்களால் வாழ்நாள் முழுதும் மறக்க இயலாது.

முதல் காதல்

முதல் காதல்

எந்த ஆணும் அவனது முதல் காதலை மறக்க முடியாது, அவளுடன் பேசிட ஒரு வாய்ப்பாவது கிடைக்காத என ஆயிரம் முறை வாய்ப்புகள் தவறவிட்ட பின்னும் ஏங்கும் ஆண்களின் அந்த பருவ காதல் என்றும் வாடாத பூவாய் அவர்களது மனதில் நிலைத்திருக்கும்.

காதலி

காதலி

வீடு, நிலம், தோப்பு என எத்தனை இருந்தாலும் தனக்கென ஒரு காதலி இல்லாத ஆண்கள், தங்களை இந்த உலகத்திலேயே மிகவும் வருத்தமுடையவர்களாக பாவித்துக் கொள்வார்கள். இது, ஆண்களுக்கு மட்டுமே வாய்க்கும் மிக மோசமான நோய்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things Every Indian Regrets

Do you know there are 10 things every Indian regrets, read here.
Desktop Bottom Promotion