For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களால் உண்ணப்படும் சில விசித்திரமான கடல் உணவுகள்!!!

By Babu
|

நீங்கள் இவ்வுலகில் உள்ள பன்முகத்தன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், அவற்றில் முதலில் இடம் பெறுவது உணவுகள் தான். ஆம் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் உண்ணும் உணவின் சுவை வேறுபடும். அப்படி வேறுபடும் போது, சில மக்கள் யாரும் நினைத்து பார்க்க முடியாதவாறான சில உணவுகளையெல்லாம் உட்கொள்கின்றனர்.

சிலருக்கு இவ்வுலகில் புதிய அனுபவங்களைப் பெற பல புதிய முயற்சிகளில் ஈடுபடுவார்கள். அப்படி உண்ணும் உணவுகளில் வித்தியாசமான அனுபவத்தைப் பெற ஆசையா? அதிலும் கடல் உணவுகளில் விசித்திரமான உணவுகளை சுவைக்க வேண்டுமா? அப்படியெனில் தமிழ் போல்ட் ஸ்கை கடல் உணவுகளில் சில வித்திரமான உணவுகளைப் பட்டியலிட்டுள்ளது.

சுவாரஸ்யமான வேறு: உலகில் உள்ள விசித்திரமான உயிரினங்கள்!!!

இந்த உணவுகளையெல்லாம் உலகில் உள்ள மக்கள் உட்கொண்டு வருகின்றனர். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபுகு (Fugu)

ஃபுகு (Fugu)

ஃபுகு என்பது மிகவும் விஷமிக்க ஒரு மீன். இந்த மீனில் மிகவும் ஆபத்தான விஷமான டெட்ரடோடாக்ஸின் உள்ளது. ஆகவே இதனை சமைக்கும் போது, விஷம் நிறைந்த பகுதியை நீக்கி பின்பு சமைத்து சாப்பிட வேண்டும். மேலும் இந்த உணவுத் தயாரிப்பானது ஜப்பான் மற்றும் இதர நாடுகளில் கடுமையான சட்டத்தின் கீழ் அனுமதி பெற்று சமைக்கப்படுகிறது. ஏனெனில் இதனை சமைக்கும் போது விஷத்தை முற்றிலும் வெளியேற்றாவிட்டால், அது உயிரையே பறித்துவிடும்.

புளித்த சுறா (Fermented shark)

புளித்த சுறா (Fermented shark)

சுறாவை உண்பது என்பது அசாதாரணமானது அல்ல. ஆனால் புளித்த சுறாவை உண்பது தான் வித்திரமானது. இந்த முறையில் சுறாவை கொன்று வெட்டி, அதனை புதைத்து, ஆறு மாதம் கழித்து உருளைக்கிழங்கு ஒயினுடன் சேர்த்து பரிமாறப்படும். இதனை பிளாக் டெத் என்று சொல்வார்கள்.

மீனின் கண்கள் (Fish eyes)

மீனின் கண்கள் (Fish eyes)

மீனின் கண்களை பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் சாப்பிடுவார்கள். அதிலும் இந்த உணவில் உள்ள விசித்திரம் என்னவென்றால், மீனின் கண்களில் உள்ள சாற்றினை உறிஞ்சி சாப்பிடுவதாகும்.

உயிருள்ள இறால் (Live shrimp)

உயிருள்ள இறால் (Live shrimp)

உங்களுக்கு ஒயினில் மிதக்கும் உயிருள்ள இறாலை சாப்பிட ஆசையா? அப்படியானால் சீனாவிற்கு செல்லுங்கள். அங்கு தான் ஒயினில் உயிருள்ள இறாலைப் போட்டு, இரண்டு குச்சிகளை வைத்துக் கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும் போது, குச்சிகளால் இறாலைத் தூக்கி, இறாலின் தலையை முதலில் கடித்து, பின் உடலை சாப்பிட வேண்டுமாம்.

ஆக்டோபஸின் நகரும் கால்கள் (Moving tentacles of octopus)

ஆக்டோபஸின் நகரும் கால்கள் (Moving tentacles of octopus)

இது ஒரு கொரியன் டிஷ். இந்த டிஷ்ஷின் ஸ்பெஷல் என்னவென்றால், உயிருள்ள ஆக்டோபஸின் கால்களை சாப்பிடுவது தான். சிலருக்கு இந்த டிஷ் பிடிப்பதற்கு காரணம் என்னவென்றால், இந்த கால்களை உட்கொள்ளும் போது, அது நகர்வதால் மிகவும் பிடிக்குமாம்.

ட்ரங்கன் இறால் (Drunken shrimp)

ட்ரங்கன் இறால் (Drunken shrimp)

இது மற்றொரு விசித்திரமான கடல் உணவுகளில் ஒன்று. இது ஒரு சைனீஸ் ரெசிபி. இதில் இறாலை வெள்ளை ஒயினில் ஊற வைத்து சாப்பிடுவார்கள். சிலர் இந்த இறாலை சமைத்து சாப்பிட விரும்புவார்கள்.

கடல் அர்சின்ஸ் (Sea urchins)

கடல் அர்சின்ஸ் (Sea urchins)

இதுவும் ஒருவிதமான வித்தியாசமான கடல் உணவுகளில் ஒன்றாகும். கடல் அர்சின்ஸ் என்பது சிறியதாக, கூர்மையாக மற்றும் குமிழ்வடிவமுள்ள உயிரினம். இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். சிலர் இதனை வெட்டிய உடனேயே சாப்பிட ஆசைப்படுவார்கள்.

நண்டின் வளை நகங்கள் (crab claws)

நண்டின் வளை நகங்கள் (crab claws)

நண்டின் வளை நகங்களை சாப்பிடுவது ஒரு வித்தியாசமான உணவாக இல்லாவிட்டாலும், இந்த நண்டின் நகங்களை எடுக்கும் முறை வித்தியாசமானதாக இருக்கும். அது என்னவென்றால், நண்டின் வளை நகங்களை எடுக்கும் போது, நண்டுகள் உயிருடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல், ஒரு சிறப்பான முறையைப் பயன்படுத்தி நகங்களை எடுத்தப் பின்னர், அதனை மீண்டும் நீரில் விட்டு, அதன் நகம் மீண்டும் வளர வைக்கிறார்கள்.

இகிசுகுரி (Ikizukuri)

இகிசுகுரி (Ikizukuri)

இகிசுகுரி என்பதும் மிகவும் விசித்திரமான உணவுகளில் ஒன்று. இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது மீன், ஆக்டோபஸ், இறால் மற்றும் நண்டு போன்றவைகள். இதன் சிறப்பம்சம், உயிரினங்களை பச்சையாக உயிருடன் இருக்கும் போதே அப்படியே சாப்பிடுவதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion