For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீய சகவாசத்தை அறிந்து கொள்ள சில வழிகள்!!!

By Ashok CR
|

நல்ல நண்பர்கள் உடையவர்கள் நீண்ட ஆயுளோடு, அதிக சந்தோஷத்துடன், கடினமான சவால்களை சுலபமாக சந்திப்பார்கள் என்று சமீபத்திய ஆய்வுகள் பல தெரிவித்துள்ளது. சரி நல்ல நண்பனுக்கும் கெட்ட நண்பனுக்கும் உள்ள வேறுபாடுகளை எப்படி அறிவது? நல்ல நண்பன் என்பவன் உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவி, உங்கள் சுய-மரியாதை மேம்படுத்தி, கஷ்ட காலத்தில் அதனை எதிர்கொள்ள உங்களுக்கு தைரியத்தை அளிப்பான்.

ஆனால் கெட்ட நண்பன் என்பவன் இவ்வாறான கஷ்டமான சூழ்நிலைகளில் உங்களை தவிக்க விட்டு அவன் விலகிக் கொள்வான். யாரையெல்லாம் உங்களின் உயிர் நண்பர்களாக நினைக்கிறீர்களோ, அவர்கள் எல்லாம், நீங்கள் எதிர்ப்பார்க்காத நேரத்தில் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்து உங்களை துயரத்தில் ஆழ்த்தி விடலாம்.

சுவாரஸ்யமான வேறு சில: தனிமையில் வசிப்பவர்களுக்கான டாப் 10 யோசனைகள்!!!

கெட்ட நண்பர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையை உணர்ச்சி ரீதியாகவும் மன ரீதியாகவும் உறிஞ்சி விடுவார்கள். அதனால் அவர்களின் உறவை துண்டிப்பதே சிறந்தது. உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி கெட்ட நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். மேலும் முகத்தை மட்டுமே பார்த்து யாரையுமே நம்பி விடாதீர்கள். கெட்ட நண்பர்களா என்பதை கண்டு பிடிக்க சில அறிகுறிகளை உங்களுக்காக நாங்கள் விவரித்துள்ளோம்.

Ways To Recognise A Bad Friend

ஆதிக்கம்

நண்பர்கள் என்றால் அன்பையும், பாசத்தையும் பரிமாறி கொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர் உங்களை எப்போதுமே ஆதிக்கம் செய்பவராக இருந்தால், அது கெட்ட நண்பனுக்கான அறிகுறியாகும். உங்கள் நண்பன் தொடர்ச்சியாக உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்தால் அந்த நண்பனை அனுசரித்து கொண்டு அப்படி ஒரு நட்பை வளர்க்க வேண்டிய அவசியமில்லை.

தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது

கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் உங்கள் நண்பன் உங்களை அசிங்கப்படுத்தி அனைவரின் முன்பாக உங்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தி விடுகிறாரா? அவர்களுடைய இந்த மனிதாபிமானமற்ற செயல்களை வைத்து அவர்கள் கெட்ட நண்பர்கள் என்பதை அறிந்துக் கொள்ளலாம். உங்களை கூனிக் குறுக செய்கிறாரா உங்கள் நண்பன்? அனைவரின் மத்தியிலும் உங்களை கேவலப்படுத்துகிறாரா உங்கள் நண்பன்? உங்கள் தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறாரா உங்கள் நண்பன்? இவைகள் அனைத்தும் கெட்ட நட்பிற்கான அறிகுறியே.

எப்போதும் பிஸி

நீங்கள் உங்கள் நண்பனிடம் எப்போதுமே பேசுவீர்களா? ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள நேரம் ஒதுக்கி, உங்கள் இருவரின் வாழ்க்கையை பற்றி கலந்துரையாடுவீர்களா? ஒரு நண்பன் என்றால் உங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுத்து உங்கள் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சந்தோஷங்கள், கஷ்டங்கள் அல்லது கருத்துகளின் மீது உங்கள் நண்பன் அக்கறை கொள்ளாமல் உங்களுக்காக நேரம் ஒதுக்குவதே இல்லையா? அப்படியானால் கெட்ட நட்பிற்கான அறிகுறி தான் இது. இவைகளை வைத்து கெட்ட நண்பனை அடையாளம் கண்டு விடலாம்.

கீழ்தரமான நண்பனிடம் இருந்து விலகியே இருங்கள்

உங்கள் நண்பன் உங்களுடன் கீழ்தரமாக நடந்து கொண்டு உங்களை எப்போதுமே மட்டம் தட்டி கொண்டே இருக்கிறாரா? அப்படியானால் கெட்ட நண்பனுக்கான தெளிவான அறிகுறி இது. கீழ்தரமான நண்பன் மற்றவர்கள் மத்தியில் உங்களை எப்போதுமே கேவலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். உங்கள் நட்பையும் நல்ல குணத்தையும் அவர்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள இப்படி பயன்படுத்திக் கொள்வார்கள். உங்கள் சாதனைகளை பற்றி கூட குறைவாக மதிப்பிட்டு பேசுவார்கள். கெட்ட நண்பனுக்கான பொதுவான அறிகுறிகள் இவைகள்.

பொறாமை

நீங்கள் மற்றவர்களிடம் நட்புடன் பழகுவது உங்கள் நண்பனுக்கு பிடிப்பதில்லையா? நீங்கள் மற்ற நண்பர்களிடம் பேசி பழகுவதை பார்த்து, ஒரு கெட்ட நண்பன் பொறாமை படுவான். அதற்கு காரணம் புது நண்பர்களுடன் பழுகுவதை அவன் விரும்புவதில்லை. கெட்ட நண்பனை அடையாளம் காண இதுவும் ஒரு அறிகுறியே.

ஊர்க்கதை பேசும் நண்பன்

நீங்கள் இயல்பாக குணம் மாறாமல் இருப்பதையே ஒரு உண்மையான நண்பன் விரும்புவான். மேலும் உங்களை பற்றி நல்ல விதமாகவே பேசுவான். இந்த பாசம் மற்றும் நேர்மை நீங்கள் அருகில் இல்லாத போதும் இருக்க வேண்டும். நீங்கள் போன பிறகு உங்களை பற்றி மற்றவர்களிடம் கேவலாமாக பேசக் கூடாது. ஒரு கெட்ட நண்பனை கண்டுப்பிடிக்க இதுவும் ஒரு முக்கிய அறிகுறி.

உங்களுக்கு தீமையை விளைவித்து உங்களை பற்றி தவறாக பேசும் எந்த ஒரு நண்பனையும் யாருமே நண்பனாக வைத்துக் கொள்ள விரும்ப மாட்டார்கள். நண்பர்கள் என்றால் நல்லவர்களும் இருப்பார்கள், கெட்டவர்களும் இருப்பார்கள். உங்களுக்கு கேட்டது செய்யும் நண்பர்களை விட்டு விலகி இருப்பதே நல்லது.

English summary

Ways To Recognise A Bad Friend

Bad friends can suck the life out of you emotionally and mentally, and it is really best to cut them off. Here are some signs of a bad friend that can help you get rid of them.
Desktop Bottom Promotion