For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்திலுள்ள மிக அதி பயங்கரமான 6 எரிமலைகள்!!!

By Ashok CR
|

கணக்கிட முடியாத பேரழிவையும் ஆபத்தையும் உண்டாக்குபவை தான் எரிமலைகள். நாடறிந்த இந்த விஷயத்தைப் பற்றி பெரியளவிலான விளக்கம் தேவையில்லை. முதலில் எரிமலை என்றால் என்னவென்றும் அது ஏன் ஏற்படுகிறது என்பதை பற்றியும் பார்க்கலாம். எரிமலைகள் என்பது கொதிக்கும் எரிமலைக்குழம்பு கக்குவதனால் ஏற்படுவது. அது ஏற்படுவதற்கு புவி ஓடு தகர்வே காரணம்.

தீக்குழம்பு அறையில் இருந்து தீக்குழம்பு வெளிவருவதால், மலையின் உச்சியில் இருந்து எரிமலைக்குழம்பு பீறிட்டுப் பெருகி வழியும். அப்படி இந்த உலகத்தில் உள்ள மிக அதி பயங்கரமான 6 எரிமலைகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். உலகத்தில் உள்ள இந்த அதி பயங்கரமான எரிமலைகள் உடனடியாக தோன்றியது அல்ல. ஆனாலும் கூட இவைகள் மிகவும் ஆபத்தானதாக விளங்குகிறது.

அப்படிப்பட்ட அதி பயங்கரமான 6 எரிமலைகளைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெசுவியஸ் மலை, இத்தாலி

வெசுவியஸ் மலை, இத்தாலி

சமீப காலமாக ஏற்பட்டுள்ள சில எரிமலை கக்குதல்கள், இத்தாலியில் உள்ள கம்பக்நியா என்ற இடத்திலுள்ள வெசுவியஸ் மலையை மிகவும் ஆபத்தான எரிமலையாக ஆக்கியுள்ளது. 20 வருடத்திற்கு ஒரு முறை வெசுவியஸ் மலையில் எரிமலை கக்குதல் நடைபெறுமாம். மேலும் மிகவும் அடர்ந்த ஜனத்தொகை வாழும் இடத்திலுள்ளது இந்த வெசுவியஸ் மலை. இதனை சுற்றி கிட்டத்தட்ட 30 லட்ச மக்கள் வசிக்கின்றனர். அதனால் தான் என்னவோ உலகத்தில் மிகவும் நெருக்கமான ஜனத்தொகையை கொண்ட இடமாக விளங்குகிறது வெசுவியஸ் மலை.

ஜப்பானில் உள்ள சகுரஜிமா

ஜப்பானில் உள்ள சகுரஜிமா

சகுரஜிமா என்ற தனிப்பட்ட தீவில், 1914-ல் தொடர்ச்சியான பல எரிமலை கக்குதல்கள் மற்றும் எரிமலைக்குழம்பு வழிதல்கள் நடந்த பிறகு, அது நிலப்பகுதியில் இணைந்தது. சகுரஜிமாவில் ஒவ்வொரு வருடமும் சிறிய வெடித்தல்கள் நூற்றுக்கணக்கில் நடக்கிறது. இதனால் இந்த எரிமலையும் உலகத்தில் உள்ள ஆபத்தான எரிமலைகளில் ஒன்றாக விளங்குகிறது.

கலேராஸ், கொலம்பியா

கலேராஸ், கொலம்பியா

கொலம்பியாவில் உள்ள கலேராஸ் என்ற இடம் எக்குவடோர் எல்லைக்கு அருகில் உள்ளது. இந்த எரிமலையை பற்றி ஒரு சுவாரசியம் அடங்கியுள்ளது. அதாவது இது கடந்த 10 லட்ச வருடமாக உள்ளது. உலகத்தில் உள்ள பழமையான எரிமலைகளில் ஒன்றான இது, 1978-ல் செயலற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் 10 வருடம் கழித்து, 1988-ல், மீண்டும் இது பொங்கத் தொடங்கியது. 2000-ல் இதனை சுற்றியுள்ள பகுதியில் தீக்குழம்புகளை மிகவும் ஆவேசமாக கக்க தொடங்கியது.

நியரன்கொங்கா மலை, DRC

நியரன்கொங்கா மலை, DRC

உலகத்தில் உள்ள சக்தி வாய்ந்த எரிமலைகளில் ஒன்றான இது, ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள நியரன்கொங்கா மலையில், காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளது. இந்த இடம் இங்குள்ள எரிமலைக்குழம்பு ஏரிகளுக்காக புகழ் பெற்றுள்ளது. உலகத்தில் உள்ள பயப்பட வைக்கும் எரிமலைகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. மேலும் இந்த வட்டாரத்தில் வாழ்பவர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த எரிமலை.

டால் எரிமலை, பிலிப்பைன்ஸ்

டால் எரிமலை, பிலிப்பைன்ஸ்

1600-களில் டால் எரிமலையில் கிட்டத்தட்ட 30 பெருத்த வெடித்தல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வெடித்தல்களால் மகத்தான அளவிலான எரிமலைக்குழம்பு வெளிவந்துள்ளது. இந்த எரிமலை ஒவ்வொரு முறை எரிமலைக்குழம்பு கக்கும் போது, கிட்டத்தட்ட 6000 பேர்களின் உயிர்களை பறித்துள்ளது.

மௌனா லோ, ஹவாய்

மௌனா லோ, ஹவாய்

ஹவாயில் உள்ள மௌனா லோ என்ற இடத்தில் உள்ள எரிமலை மிகவும் ஆபத்தான எரிமலையாக கருதப்படுகிறது. 2000-ல் உலகத்தில் உள்ள மிக ஆபத்தான எரிமலைகளை விஞ்ஞானிகள் பட்டியலிட்ட போது, இந்த எரிமலை தான் முதல் இடத்தை பிடித்தது. பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஹவாய் தீவு உருவாவதற்கு காரணமாக விளங்கிய 5 சக்தி வாய்ந்த எரிமலைகளில் இதுவும் ஒன்றாகும். கடந்த 700,000 வருடங்களாக இந்த எரிமலையில் அடிக்கடி எரிமலை கக்குதல்கள் நடைபெற்று கொண்டே இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 6 Deadliest Active Volcanoes In The World

In this article, we look at the top 6 deadliest active volcanoes in the world. Some of these deadliest volcanoes in the world haven't erupted in a while but remain to be sinister.
Desktop Bottom Promotion