For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய பயனுள்ள காரியங்கள்!!!

By Boopathi Lakshmanan
|

உங்கள் ஒய்வு நேரத்தில் அல்லது ஃப்ரீயாக இருக்கும் நேரத்தில் இந்த தருணத்தை எவ்வாறு செலவு செய்வது என்று எப்போதாவது எண்ணியதுண்டா? மக்கள் எப்போதும் கூறுவது இதுதான். 'என்னப்பா சொல்றிங்க! ஃப்ரீயாக இருப்பதா? எப்பவுமே வேலை தான் எனக்கு'. ஒரு வேளை சிறிது நேரம் கிடைத்தால் அதை முடிக்காத சில வேலைகளை முடிக்க பயன்படுத்திக் கொள்ள முடியும். நமக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது நாம் எப்போதும் ஏதாவது பாதியில் விட்டுப் போன வேலைகளை செய்து முடிப்பதையே வேலையாக எடுத்துக் கொள்வோம்.

மிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள்!!!

நீங்கள் பொதுவாக நினைக்கும் விஷயம் 'நமக்கு ஏன் ஓய்வெடுக்க நேரமே கிடைப்பதில்லை?' இது தவறு. எப்படிப்பட்ட வேலையாக இருந்தாலும் நமக்கு பிடித்த விஷயங்களை செய்ய நாம் நிச்சயம் நேரத்தை கண்டறிய முடியும். அந்த நேரத்தை ஆனந்தமாகவும் பயனுள்ளதாகவும் வைத்துக் கொள்ள முடியும். உங்களது சிறிதளவு முயற்சியும், விருப்பமும் இருந்தால் போதும் நிச்சயம் இதை நிறைவேற்றி விட முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தினமும் செய்யும் வேலைகளை புதிதாக ஏதேனும் முயற்சி செய்வது

தினமும் செய்யும் வேலைகளை புதிதாக ஏதேனும் முயற்சி செய்வது

சமைப்பது, தோட்டத்தை பராமரிப்பது மற்றும் வீட்டை சுத்தம் செய்வது ஆகியவை நமக்கு பொதுவாக இருக்கும் வேலைகள். ஒரு முக்கியமான விஷயம் என்ன தெரியுமா? நாம் தினந்தோறும் செய்யும் வேலைகளையே மிக சிறப்பாக மற்றும் சிறிதளவு நேர்மறை மாற்றங்களுடன் செய்ய முடியும். உங்கள் ஓய்வு நேரத்தில் ஏதேனும் புதிய செடிகளை வாங்கி நட்டு வைக்கலாம் அல்லது உங்கள் தோட்டத்து செடிகளுடன் சிறிது நேரத்தை செலவு செய்யலாம். கதவு மற்றும் ஜன்னல்களுக்கு புதிய திரைகளை தைத்து போடலாம். இத்தகைய செயலகள், நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தை பயனுள்ளதாக மட்டுமல்லாமல், வீட்டையும் மிக அழகாக அமைக்க உதவுகின்றது. அவ்வப்போது வீட்டில் உள்ள பொருட்களை இடம் மாற்றி வைத்து வேறு வேறு பாணியில் அலங்கரிப்பதும் கூட ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய எளிய மற்றும் சிறந்த வேலைகளில் ஒன்றாகும்.

செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுதல்

செல்லப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுதல்

உங்கள் ஒய்வு நேரத்தில் செய்யக்கூடிய முதல் 10 காரியங்களில் செல்லப் பிராணிகளை பராமரிப்பதும் ஒன்று. ஒரு மனிதனைப் போல் தான் பிராணிகளும். அவைகளும் உங்களுடன் நேரம் செலவு செய்ய ஆசைப்படும். ஆகையால் அவைகளை கவனித்து, அவற்றின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதை பூர்த்தி செய்து வைக்க வேண்டியது உங்கள் கடமையாகும். அது மட்டுமல்லாமல் உங்கள் நேரத்தையும் அவைகளுக்கு கொடுப்பது சிறந்தது. இதை செய்யும் போது வேறு எந்த வேலைக்கும் இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது. இது ஃப்ரீயாக இருக்கும் போது என்று மட்டுமல்லாமல் அவ்வப்போது அவைகளை பார்த்துக் கொள்ள வேண்டியதும் நமது கடமையாக அமைகின்றது.

படிக்கும் பழக்கம்

படிக்கும் பழக்கம்

ஓய்வு நேரத்தில் செய்யக்கூடிய முதல் 10 வேலைகளில் புத்தகம் படிப்பதும் ஒன்று. நீங்கள் ஒரு வேளை ஏதேனும் புத்தகத்தை நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கலாம். அதை வாங்கி படியுங்கள். இதை செய்வது ஐ பாட் மற்றும் போனில் விளையாடுவதை விட சிறந்ததாக இருக்கும்.

வெளியே செல்லுதல்

வெளியே செல்லுதல்

ஓய்வு நேரத்தில் மிகவும் மகிழக்கூடிய ஒரு காரியம் நண்பர்களை காணச் செல்வது. ஓய்வு நேரத்தில் நாம் களைப்பாக இருக்கும் போதும் அல்லது சோர்வாக இருக்கும் போதும் உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்யலாம் என்பதை மறந்துவிடக் கூடாது. இதற்கு கொஞ்சம் பணம் தேவைப்படலாம். இல்லை என்றால் அவர்கள் வீட்டிற்கு சென்று பேசி வருவதால் நேரம் மட்டுமல்ல பல காரியங்களை பற்றி பேசி மகிழ முடியும்.

தூங்குதல்

தூங்குதல்

எதையும் செய்யக் கூடிய மன நிலையில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் ஓய்வு நேரத்தில் இளைப்பாரும் வகையில தூங்கலாம். இதுவும் முதல் 10 காரியங்களில் உள்ள ஒரு செயலாகும்.

அமைதியாக அமர்ந்திருத்தல்

அமைதியாக அமர்ந்திருத்தல்

ஒரு சில சமயங்களில் வேலைக்கு சென்று வரும் போது இத்தகைய ஃப்ரீ டைம் கிடைப்பது அரிதாக அமைகின்றது. அப்போது நமக்காக நாம் நேரத்தை செலவு செய்வதும் மிக முக்கியமானதாகிறது. நம்மைப் பற்றி நாம் யோசித்து மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காரியங்களில் உடனடியாக முடிவெடுத்து மாற்றுவது போன்ற விஷயங்களை யோசிப்பதற்கு இதுவே சிறந்த நேரமாக உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things To Do In Your Free Time

You might be wondering that you don’t actually find a time to relax and where do I find some time to do things I enjoy. But this is not the case; you can actually make free time irrespective of your schedule. It is your will and a little effort that is going to make it work
 
Desktop Bottom Promotion