For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் உள்ள அதி பயங்கரமான 5 தீவிரவாத அமைப்புகள்!!!

By Ashok CR
|

தீவிரவாதத்திற்கு ஒரு பெரிய வரலாறே உள்ளது. இது உலகத்தில் உள்ள பாதிக்கப்படக்கூடிய பல நாடுகளை பெருவாரியாக பாதித்துள்ளது. ஃபிரெஞ்ச் புரட்சியின் போது இந்த வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் எட்மண்ட் புர்கே. பேரழிவையும் கணக்கிட முடியாத அளவிலான மனக்கசப்பையும் உண்டாக்கும் கொடிய கருத்தமைவான தீவிரவாதம், தற்போதைய காலத்தில் ஒரு காட்டுத்தீ போல் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அப்படிப்பட்ட மிக ஆபத்தான தீவிரவாத அமைப்புகளை பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்.

உலகத்தில் உள்ள மிகவும் ஊழல் மிக்க காவல் துறைகள்!!!

நாங்கள் கூறப்போகும் தீவிரவாத அமைப்புகள அனைத்தும் இன்றைய தேதி வரை தங்களின் செல்வாக்கு, பலம் மற்றும் செயல்களால் சுறுசுறுப்புடன் இயங்கி கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களினால் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்து கொண்டே தான் போகிறது. பகை நாட்டு போர் வீரர்களை கொல்வது முதல் பாலியல் ரீதியான அடிமைத்தனம் மற்றும் குழந்தை போராளிகளை சேர்ப்பது வரை, அவர்களின் அட்டகாசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 11 நாடுகள்!!!

சரி இந்த உலகத்தில் உள்ள மிக ஆபத்தான 5 தீவிரவாத இயக்கத்தை பற்றி இப்போது பார்க்கலாம். தொடர்ந்து படியுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹமாஸ்

ஹமாஸ்

மேற்கு பகுதியின் மிகப்பெரிய பிரிவு மற்றும் இஸ்ரேல், ஹமாஸ் இயக்கத்தை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்துள்ளது. பாலஸ்தீனிய அமைப்பான இவர்கள் சுதந்திர பாலஸ்தீனியத்திற்காக போராடுகிறார்கள். மனித வெடிகுண்டுகளுக்கு பெயரெடுத்தவர்கள் இந்த ஹமாஸ் இயக்கத்தினர். 1897-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், இஸ்ரேலுக்கு எதிராக தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முக்கிய காரணமே இஸ்ரேலிடம் அடிமையாக இருக்கும் பாலஸ்தீனியத்தை காப்பாற்றுவதே.

ஹெஸ்பொல்லா

ஹெஸ்பொல்லா

ஹெஸ்பொல்லா என்ற அரசியல் சார்ந்த இயக்கத்தை தீவிராத அமைப்பாக மேற்கு பகுதியின் மிகப்பெரிய பிரிவும் இஸ்ரேலும் முத்திரை குத்தியுள்ளது. மிடில் ஈஸ்ட் நாடுகளால் மிகவும் அஞ்சப்படுகிற இயக்கமாக இவர்கள் செயல்படுகிறார்கள். பல மிடில் ஈஸ்ட் நாடுகளின் எல்லையில் பணமாற்றல் மற்றும் ஆயுத வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிரியா, லேபோனன் மற்றும் ஈரான் நிதியுதவி அளித்து வருகிறது.

தாலிபான்

தாலிபான்

தாலிபானை மேற்கு நாடுகள் மட்டுமல்லாது ஐக்கிய நாடுகளும் சேர்ந்து தீவிரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் இயக்கத்துடன் முடிவில்லா யுத்தத்தை அமெரிக்கா நடத்திக் கொண்டு வருகிறது. வன்முறை மற்றும் பயத்தினை பரப்பி, அதன் மூலம் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை கையகப்படுத்துவதே அவர்களின் நோக்கமாகும். பல நாடுகளால் தேடப்பட்டு வரும் முல்லா ஓமர் என்ற கொடிய தீவிரவாதி தான் இந்த இயக்கத்தின் தலைவராகும்.

அல் கொய்தா

அல் கொய்தா

எகிப்து நாட்டின் அய்மன் அல் சவாஹிரி என்பவரால் தலைமை வகிக்கப்படும் மிகப்பெரிய தீவிரவாத இயக்கம் தான் அல் கொய்தா. உலகத்தின் பல இடங்களில் தன் கிளையை வைத்திருக்கும் இந்த இயக்கம், மிடில் ஈஸ்ட் நாடுகளின் அதிக பிரிவுகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள பிற தீவிரவாத இயக்கங்களுக்கும் இவர்கள் நிதியுதவி அளித்து வருகின்றனர். இதன் தலைவரான ஒசாமா பின் லேடன் 2011-ல் கொல்லப்பட்டாலும், இவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

ஐஎஸ்ஐஎஸ்

ஐஎஸ்ஐஎஸ்

தற்போது உலகத்தில் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும் அதி பயங்கர தீவிரவாத இயக்கமாக செயல்படுவது ஐஎஸ்ஐஎஸ் அல்லது ஐஎஸ்ஐஎல் இவர்களின் நோக்கம் ஒரு இஸ்லாமிய நாட்டை உருவாக்குவதே. இவர்கள் ஈராக் மற்றும் சிரியாவில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். இவர்களின் ஆதிக்கம் சமீபத்தில் மேலோங்கி இருக்கிறது. கொத்து கொத்தாக கொலைகள், கற்பழிப்புகள் மற்றும் பாலியல் அடிமைத்தனம் ஆகிய அரக்கத்தனமான போர் குற்றங்களை புரிந்த குற்றங்கள் இவர்கள் மீது சாட்டப்பட்டுள்ளது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The 5 Most Dangerous Terror Groups In The World

Here are the 5 most dangerous terror groups in the world. Read on...
Desktop Bottom Promotion