For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் செயின் ஸ்மோக்கர் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

By Ashok CR
|

புகைப்பிடிப்பவர்கள் பலரும் இந்த பழக்கத்தை தங்கள் விடலை பருவத்திலேயே தொடங்கி இருப்பார்கள். அடுத்தவர்களின் முன்னால் கெத்தை காட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த புகைப்பிடிக்கும் பழக்கம், நாளடைவில் விட முடியாத ஒரு பழக்கமாகவே மாறிவிடும். புகைப்பிடிப்பவர்களிலேயே தொடர்ச்சியாக புகைப்பிடிக்கும் செயின் ஸ்மோக்கர் தான் மிகவும் மோசமானவர்கள். இவர்களுக்கு புகைக்கும் தொடர்பான பல வியாதிகள் விரைவில் வருவதுடன், இதனால் விரைவிலேயே மரணத்தையும் தழுவுவார்கள்.

ஒரு சிகரெட் மாற்றி மற்றொன்றாக புகைக்கும், இந்த மோசமான புகைப்பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? இதனை நிறுத்தவோ குறைக்கவோ முடியவில்லையா? அப்படியனால் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை காத்திருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 20 அல்லது அதற்கு அதிகமான சிகரெட் அல்லது ஒரு வருடத்திற்கு 20 அல்லது அதற்கு மேலான சிகரெட் பாக்கெட் புகைப்பது தான் அதிகமாக புகைப்பிடிப்பது என ஆய்வுகள் கூறுகிறது. நீங்கள் புகைப்பவராக இருந்தால், நீங்கள் செயின் ஸ்மோக்கரா இல்லையா என்பதற்கான சில அறிகுறிகள், இதோ!

Signs That You Are A Chain Smoker

1. நீங்கள் வருவதை சுலபமாக மோப்பம் பிடித்து விடலாம்

புகைப்பிடிப்பவர்கள் என்றால் தனியாக அவர்கள் மீது ஒரு வாசனை ஏற்படும். அது அவர்கள் செல்லும் இடமெல்லாம் அவர்களை பின் தொடர்ந்து செல்லும். ஒரு கூட்டத்தில் உங்கள் வருகையை உங்கள் நண்பர் சுலபமாக மோப்பம் பிடித்து விட்டார் என்றால் அது உங்கள் மீது வரும் சிகரெட் வாசனையில் தான்.

2. மஞ்சள் நிறத்தில் இருக்கும் உங்கள் நக முனைகள்

அளவுக்கு அதிகமாக நெயில் பாலிஷ் உபயோகிப்பதால், பெண்களின் கை நகங்கள் மஞ்சளாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை. விரல் நகங்கள் காலம் முழுவதும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். மஞ்சள் நிற நகங்களை நீக்க நீங்கள் ஒரு வார காலமாவது காத்திருக்க வேண்டி வரும். நிகோட்டினால் கறைப்படும் விரல் நக முனைகள் பார்ப்பதற்கு கோரமாக இருக்கும்.

3. பயணத்திற்கு விமானத்தை விரும்ப மாட்டீர்கள்

வெளியிடத்தில் கூறப்படும் அனைத்து விதிமுறைகளும் உங்களுக்கு பிரச்சனை இல்லாமல் இருக்கலாம்; ஆனால் உங்களுக்கு பிடித்த சுற்றுலா தளத்திற்கு விமானத்தில் செல்ல உங்களுக்கு விருப்பமில்லை என்றால், அதற்கு காரணம், நீண்ட நேரம் உங்கள் சிகரெட் பாக்கெட்டை திறக்காமல் உங்களால் இருக்க முடிவதில்லை.

4. பப் போன்ற இடங்களுக்கு செல்கையில் புகைப்பிடிக்கும் இடத்தை நீங்கள் தேடுகிறீர்களா?

புகைப்பிடிக்கும் அறையை தேடி அதற்குள் நுழைகிறீர்கள் என்றால், உங்கள் பழக்கத்தை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். புகைப்பிடிக்கும் பழக்கம் என வந்து விட்டால், அது தான் உங்கள் முதல் முன்னுரிமையாக இருக்கும். அதை விட்டு யாராலும் உங்களை இழுக்க முடியாது.

5. உங்களிடம் இருப்பு குறையவே குறையாது

உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்து, ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு முறை புகைப்பிடிக்கிறீர்களா? அப்படியானால் உங்களிடம் கூடுதல் சிகரெட் வாங்கிக் கொள்ள உங்களை தேடி சிலர் வருவார்கள். ஏனென்றால் உங்களிடம் தான் இருப்பு எப்போதுமே குறையாதல்லவா?

6. உங்கள் பல் மருத்துவர் உங்களை சுலபமாக தெரிந்து கொள்வார்

புகைப்பிடிக்காத நண்பர்கள் உங்களுக்கு குறைவாக இருக்கலாம். அப்படியே இருந்தாலும் கூட அது உங்கள் பல் மருத்துவராக தான் இருக்க முடியும். நீங்கள் இருப்பதை உறுதி செய்ய உங்கள் பல் மருத்துவர் விரும்புவார். அதற்கு காரணம் உங்கள் பற்கள் மூலமாக அதிக காசு பார்க்கலாம் என்ற எண்ணமாக இருக்கலாம்.

7. ஜன்னல் வழியாக எட்டிபார்த்து யாரும் உங்கள் காரை பார்க்க மாட்டார்கள்

அதற்கு காரணம், கார் ஓட்டும் போது நீங்கள் புகைப்பிடிப்பதால், அவை ஜன்னல்களில் கரையாக படிந்திருக்கும். பயணம் என்பது தவிர்க்க முடியாதவை என்பதால், இந்த பிரச்சனையில் இருந்து செயின் ஸ்மோக்கர்களால் விடுபட முடியாது. ஒன்று செய்யலாம், புகைப்பிடிக்கும் போது, ஜன்னல்களை முழுவதுமாக திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

8. உங்களுக்கு கரகரப்பான குரல் இருக்கும்

வைத்ணீ ஹவுஸ்டன் தன்னுடைய கச்சேரியின் போது தன் குரல்வளை நாளம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதை சமீபத்தில் உணர்ந்தார். இந்த பாதிப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும் என தெரியுமா? அளவுக்கு அதிகமாக புகைப்பது.

9. உங்கள் அண்ணன் அக்காக்களுடன் ஒப்பிடுகையில் நீங்கள் வயதாளியாக தெரிவீர்கள்

புகைப்பிடிக்காதவராக இருந்தாலும் கூட சிலர் தங்களின் அண்ணன் மற்றும் அக்காக்களை விட வயதானவர்களாக தெரிவார்கள். ஆனால் செயின் ஸ்மோக்கர்கள் என்றால் இரண்டு மடங்கு வயதாளியாக தெரிவார்கள். அதற்கு காரணம் புகையிலையின் குணங்கள்.

10. உங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு நீங்கள் காரணம் வைத்திருப்பீர்கள்

இந்த நிலையில் இந்த பழக்கத்தை விடுவது கஷ்டம் என உங்களுக்கு தெரியும். அதனால் இந்த பழக்கத்திற்கு நியாயம் கற்பிக்க பல காரணங்களை கூறுவீர்கள். அதன் தீமைகளை நன்கு அறிந்திருந்தும், இந்த பழக்கம் நல்லது தான் என பிறரிடம் வாதாடுவீர்கள்.

English summary

Signs That You Are A Chain Smoker

If you are a smoker, here are some signs that will tell you if you are a chain smoker or not.
Desktop Bottom Promotion