For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரங்கள்!!!

By Ashok CR
|

பல விதமான மூடநம்பிக்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் வீடாக விளங்குகிறது இந்தியா. சில நம்பிக்கைகளுக்கு பின்னால் வியக்க வைக்கும் அறிவியல் ரீதியான விளக்கங்கள் இருந்தாலும், பல நம்பிக்கைகளை அடிப்பதையற்றதாகவே கருதலாம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், செவ்வாய் தோஷம் உள்ள ஒரு பெண்ணோ அல்லது ஆணோ செவ்வாய் தோஷம் இல்லாத மற்றவரை திருமணம் செய்து கொண்டால், திருமணமான கொஞ்ச காலத்திலேயே செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணிப்பார். கேட்க பைத்தியகாரத்தனமாக இருக்கிறது அல்லவா? ஆனாலும் தங்கள் ஜாதகத்தில் தங்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் காரணத்தினால், அவர்களுக்கு சுலபத்தில் திருமணம் நடக்காததால், பல பெண்கள் உயிரை விடும் அளவிற்கு போய் விடுகிறார்கள்.

வேத ஜோசியத்தின் படி, செவ்வாய் தோஷம் என்பது ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை, திருமண வாழ்க்கை ஆகியவற்றை பாதித்து, துரதிர்ஷ்டத்தை மட்டுமே கொண்டு வரும் மோசமான ஜோசிய நிலையாக கருதப்படுகிறது. இதனை குஜ தோஷம், போம் தோஷம் அல்லது அங்கரகா தோஷம் எனவும் கூறலாம்.

ஒருவரின் ஜாதக கட்டத்தில் செவ்வாய் கிரகம் 1, 2, 4, 7, 8 மற்றும் 12-ஆவது இடங்களில் இருக்கலாம் என ஜோதிடம் கருதுகிறது. மொத்தம் இருக்கும் 12 கட்டத்தில் இந்த 6 கட்டங்கள் ஏதேனும் ஒன்றில் இருந்தாலும் இந்த தோஷம் இருப்பதாக கருதப்படும். இந்த தோஷம் உள்ளவர்களை செவ்வாய் தோஷக்காரர்கள் என கூறுகிறோம். இந்த செவ்வாய் தோஷ விஷயம் சமீபத்தில் கூட ஒரு பிரபலமான பாலிவுட் நடிகைக்கு திருமணமான போது பெரிதாக பேசப்பட்டது. அவர் தான் நம் ஐஸ்வர்யா ராய். அதனால் இந்த தோஷத்தால் ஏற்பட உள்ள தீய தாக்கங்களுக்கு தீர்வு காண, அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டியிருந்தது.

செவ்வாய் தோஷ யூகங்களைப் பற்றி புரிந்து கொள்ள செவ்வாய் தோஷம் என்றால் என்ன என்பதையும், அதன் தாக்கங்களையும் மற்றும் அதற்கான பரிகாரங்களையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?

ஒருவரின் ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். 1, 2, 4, 7, 8 அல்லது 12-ஆம் கட்டத்தில் செவ்வாய் வந்தால், ஜோதிட சாஸ்திரத்தின் படி, அந்த நபருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கு செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை தாக்கங்கள் இருக்கும் என கருதப்படுகிறது. அதுவும் திருமணத்தின் மீது இந்த தாக்கம் அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது. அதற்கு காரணம், திருமணத்திற்கு ஜாதக பொருத்தம் பார்க்கும் போது, இதை ஒரு முக்கியமான பொருத்தமாக பார்க்கப்படுகிறது. திருமணத்தை தீர்மானிக்கும் போது ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா எனவும், பொருத்தம் உள்ளதா எனவும் உறுதி செய்ய வேண்டும்.

செவ்வாய் தோஷத்தின் பண்புகள்:

செவ்வாய் தோஷத்தின் பண்புகள்:

1. ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் தங்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கலாம்.

2. செவ்வாய் என்பது உமிழும் கோபத்தை குறிக்கும். அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு கோபம் கொள்ளும் குணம் அதிகமாக இருக்கக்கூடும்.

3. செவ்வாய் தோஷக்காரர்களுக்கு உமிழும் அளவிலான ஆற்றல் திறன் இருக்கும். அதனை அழிவிற்கு பயன்படுத்தாதவாறு அதனை அவர்கள் சரியாக வழிநடத்திட வேண்டும்.

4. செவ்வாய் தோஷத்தால் திருமணம் தாமதமாகும்.

செவ்வாய் தோஷத்தின் பண்புகள்:

செவ்வாய் தோஷத்தின் பண்புகள்:

5. செவ்வாய் தோஷம் திருமணத்தில் டென்ஷன் மற்றும் முரண்பாடுகளை உண்டாக்கும்.

6. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய்விடும் என நம்பப்படுகிறது.

7. சென்ற ஜென்மத்தில் தங்கள் கணவன் அல்லது மனைவியை ஒழுங்காக நடத்தாதவர்களுக்கு தான் இந்த தோஷம் உண்டாகும் என நம்பப்படுகிறது.

எப்போது செவ்வாய் பிரச்சனைகள் செய்யும்?

எப்போது செவ்வாய் பிரச்சனைகள் செய்யும்?

1. செவ்வாய் முதல் கட்டத்தில் வரும் போது, திருமணத்தில் சண்டை சச்சரவுகளையும், வன்முறைகளையும் எதிர்ப்பார்க்கலாம்.

2. செவ்வாய் இரண்டாம் கட்டத்தில் வரும் போது, திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, அந்த நபரின் குடும்பம் பாதிக்கப்படும்.

3. செவ்வாய் நான்காம் கட்டத்தில் வரும் போது, தொழில் ரீதியான வாழ்க்கையில் பெரும் தோல்வியை சந்திப்பார்கள். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறிக்கொண்டே இருப்பார்கள்.

4. செவ்வாய் ஏழாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபரிடம் இருக்கும் அளவுக்கு அதிகமான ஆற்றல் திறன் அவரை கடும் கோபக்காரராக வைத்திருக்கும். அவருடைய ஆளுமை குணத்தால் அவருடைய குடும்பத்தாருடன் அவருக்கு நல்லுறவு இருக்காது.

5. செவ்வாய் எட்டாம் கட்டத்தில் வரும் போது, தன் வீட்டு பெரியவர்களின் பகைக்கு ஆளாகி தந்தை வழி சொத்தை இழப்பார்கள்.

6. செவ்வாய் பத்தாம் கட்டத்தில் வரும் போது, அந்த நபர் மனநிலை பிரச்சனையால் அவதிப்படுவார். மேலும் எதிரிகளுடன் கூடிய நிதி சார்ந்த நஷ்டங்களை சந்திப்பார்.

செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது:

செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது:

1. செவ்வாய் தோஷம் கொண்ட இருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த கிரகத்தின் தாக்கங்கள் ஒன்றுமில்லாமல் போய் விடும்.

2. கும்ப விவாகம் என்ற ஒரு வகையான திருமணம் இந்த தோஷத்தின் தாக்கங்களை குறைக்க உதவிடும். இந்த வகை திருமணத்தில், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் ஒரு மரத்தையோ அல்லது தாழியையோ திருமணம் செய்ய வேண்டும். இது செவ்வாய் தோஷத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

3. செவ்வாய்க்கிழமைகளில் உண்ணாவிரதம் இருந்தால் செவ்வாய் தோஷங்களின் எதிர்மறையான தாக்கங்கள் குறையும். விரதத்தின் போது, செவ்வாய் தோஷக்காரர்கள் துவரம் பருப்பை மட்டுமே உண்ணலாம்.

செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது:

செவ்வாய் தோஷத்தை எப்படி வெல்வது:

4. செவ்வாய்க்கிழமைகளில் நவகிரக மந்திரம் மற்றும் ஆஞ்சநேயர் மந்திரங்களை பாடினால், செவ்வாய் தோஷக்காரர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்.

5. செவ்வாய்க்கிழமைகளில் பூஜைகள் புரிவதும், ஆஞ்சநேயர் கோவில்களுக்கு செல்வதும் கூட இந்த தோஷத்தை போக்குவதற்கான சிறந்த வழியாகும்.

6. செவ்வாய் தோஷக்காரர்கள் இரத்தக்கல் பதித்த தங்க மோதிரத்தை தங்கள் வலது கரத்தில் உள்ள மோதிர விரலில் அணிய ஜோசியர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

7. இந்த தோஷத்தின் தாக்கம் 28 வயதுக்கு பிறகு குறையும் என்பதால், அதற்கு பிறகு திருமணம் செய்யவே அறிவுறுத்தப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Remedies To Overcome Manglik Dosha In Your Kundali

To understand what the speculations about being Manglik is all about, we must first understand what is the Manglik dosha all about, its effects and remedies. Take a look...
Desktop Bottom Promotion