For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள்!!!

By Babu
|

பெண்களால் முடியாது எதுவும் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாய் இந்தியாவில் உள்ள பல பெண்கள் மிகவும் தைரியமாக பல துறைகளில் சாதித்திருப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் தெரியுமாறு, நல்ல பெயரைப் பெற்றுள்ளனர். இங்கு அவர்களுள் சிலரைப் பட்டியலிட்டுள்ளோம்.

சாதனை படைத்த பெண்மணிகளை மறக்க முடியுமா...!

இத்தகைய பெண்கள் வெவ்வேறு துறையில், வெவ்வேறு மாதிரியாக சாதனைப் படைத்தவர்கள். மேலும் பாரதி கண்ட புதுமைப் பெண்கள் இவர்கள் தானோ! என்று யோசிக்கும் வகையில் அனைவரையும் அசர வைத்துள்ளனர்.

சரி, இப்போது இந்தியாவில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் சாதனைப் படைத்த பெண்மணிகளைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இந்திரா நூயி

இந்திரா நூயி

இவர் மிகவும் பிரபலமான பெப்ஸி நிறுவனத்தில் ஒரு உயர் அதிகாரியாக உள்ளார். உலகம் முழுவதும் சிறப்பான விற்பனை செய்யப்படும் பெப்ஸி நிறுவனத்தின் உயர் அதிகாரியாக ஒரு இந்தியப் பெண் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம். மேலும் போர்ப் என்னும் நாளிதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் நூயி தான் உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணிகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தான் சோனியா காந்தி. ஒரு பெண் அரசியலில் குதித்து, நாட்டை ஆள முடியும் என்பதை சோனியா காந்தி வெளிக்காட்டியுள்ளார்.

ஷில்பா ஷெட்டி

ஷில்பா ஷெட்டி

பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டி, பிரிட்டிஷ் ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடந்த வாக்குப்பதிவில் 63 சதவீதம் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். பல நடிகைகள் பங்கு கொண்ட அந்த கருத்துக் கணிப்பில் இந்தியப் பெண்மணி ஷில்பா ஷெட்டி முதலிடம் பிடித்தது, உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அதுமட்டுமல்லாமல், ஹாலிவுட்டில் நடிப்பதற்கு கூட இவரை அழைத்தனர் என்றால் பாருங்களேன்...

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

1994 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தைப் பெற்று, இன்று வரை உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள ஒரு இந்திய பெண் தான் ஐஸ்வர்யா ராய்.

சானியா மிர்சா

சானியா மிர்சா

இந்தியாவின் டென்னிஸ் வீராங்கணையான சானியா மிர்சா, பல வெற்றிகளைப் பெற்று உலக அளவில் பிரபலமான ஒருவராக இருப்பதுடன், பல சாதனைகளைப் பெற்றுள்ளார்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், தமிழ்நாட்டை ஆட்சி செய்து வந்து, பெண்ணால் எதையும் சாதிக்க முடியும் என்று காட்டியுள்ளார். மேலும் எத்தனை தோல்விகள் மற்றும் எதிர்ப்புகள் வந்தாலும், அனைத்தையும் தாண்டி முன்னேறி, மிகச்சிறந்த சக்தி வாய்ந்த பெண்மணியாக உள்ளார்.

கிரண் பேடி

கிரண் பேடி

முதல் இந்திய பெண் போலீஸ் தான் கிரண் பேடி. மேலும் இவர் பலருக்கு ஒரு ரோல்மாடலாக இருந்து வருகிறார். இவரது சாதனைக்கும் அளவே இல்லை.

சாய்னா நேவால்

சாய்னா நேவால்

பூப்பந்து விளையாட்டில் உலக அளவில் பிரபலமான ஒரு பெண்மணி தான் இந்தியாவைச் சேர்ந்த சாய்னா நேவால். இவர் பூப்பந்து விளையாட்டில் லண்டன் ஒலிம்பிக்கில் முதன் முதலாக இந்தியாவின் சார்பில் விளையாடி மூன்றாம் இடத்தைப் பெற்று மிகவும் பிரபலமானவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion