For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவிற்கு புகழைத் தேடித் தந்த ஆண்கள்!

By Maha
|

தற்போது இந்தியாவில் நிகழ்ந்து வரும் பெரும் குற்றங்களான கற்பழிப்பு, கொலை, கடத்தல் போன்றவற்றுடன், சீர்கெட்ட சாலைகள், அதிகப்படியான ஊழல், சாலைகளின் ஓரங்களில் குவிந்திருக்கும் குப்பைக்கூளங்கள் மற்றும் பலவற்றால் வெளியே இந்தியன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டியிருந்தாலும், நம் நாட்டில் உள்ள ஒருசிலர் தங்களின் முயற்சியால், உலக அளவில் மிகவும் பிரபலமானவர்களாகி உள்ளனர். அவர்களை நினைக்கும் போது நாம் பெருமிதத்துடன் இந்தியன் என்று சொல்லிப் பெருமைப்படலாம்.

இந்தியத் திரையுலகின் ஃபிட் பாய்ஸ் .. இதோ இவங்க தான்!

இப்போது உலக அளவில் மிகவும் பிரபலமான மற்றும் இந்தியாவிற்கு பெரும் புகழைத் தேடித் தந்த சில ஆண்களைப் பற்றி பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

இந்தியாவின் தலைச்சிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன் தான் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். அதுமட்டுமின்றி இவர் மிகவும் சிறந்த, அனைவராலும் மதிக்கத்தக்க ஆசிரியரும், பேச்சாளரும் கூட. மேலும் பல இளைஞர்களின் முன்மாதிரியாகவும் இவர் உள்ளார். உலகில் இவரைப் பற்றி அறியாதோர் எவரும் இலர் என்று சொல்லலாம். இவரால் தான் முதன்முதலில் இந்தியா ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதனால் இவருக்கு உயரிய விருதான 'பத்ம பூஷன்' விருது வழங்கப்பட்டது. மேலும் இவரால் ஐந்து ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இவ்வளவும் செய்த அப்துல் கலாம் மிகவும் எளிமையானவர். இவரைப் பற்றி சொல்ல ஆரம்பித்தால் சொல்லிக் கொண்டே போகலாம்.

சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட் என்றாலேயே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சச்சின் டெண்டுல்கர் தான். ஏனெனில் சிறு வயதிலிருந்தே கிரிக்கெட்டிற்காக தனது வாழ்க்கையே அர்பணித்தவர் இவர். மேலும் இவர் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். இன்று வரை எவராலும் இவரது சாதனைகளை முறியடிக்க முடியவில்லை. அந்த அளவில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளும் வகையில் சாதனைகளைப் படைத்து, உலக அளவில் மிகவும் பிரபலமானவர் தான் சச்சின்.

நாராயண மூர்த்தி

நாராயண மூர்த்தி

இன்போசிஸ் என்னும் உலக அளவில் மிகவும் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர் தான் நாராயண மூர்த்தி. இந்நிறுவனத்தின் கிளைகள் உலகின் பல இடங்களில் இருந்தாலும், இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம் பெங்களூரில் தான் உள்ளது. இந்நிறுவனத்தைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய பெரிய நிறுவனத்தை நிறுவியது இந்தியன் என்று சொல்லி அனைவரும் பெருமைப்படலாம்.

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த்

'இந்திய சதுரங்க கிராண்ட் மாஸ்டர்' தான் தமிழ்நாட்டில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த். இவர் உலக சதுரங்க போட்டியில் ஐந்து முறை வெற்றிப் பெற்றுள்ளார். இவர் தனது 14 வயதிலிருந்தே சதுரங்க விளையாட்டில் வெற்றிகளையும், பட்டங்களையும் பெற ஆரம்பித்தார். இதுவரை பல்வேறு சதுரங்க பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான்

இசையமைப்பளரான ஏ. ஆர். ரகுமான் இந்த பட்டியலில் நிச்சயம் இருக்க வேண்டியவர். இவர் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். சென்னையில் பிறந்த இவர் ஆஸ்கர் விருது, கிராமி விருது போன்ற ஒவ்வொரு இசைக் கலைஞனும் பெற நினைக்கும் விருதுகளைப் பெற்றவர். முக்கியமாக இவர் மிகவும் உயரிய விருதான ஆஸ்கர் விருதைப் பெறும் போது, அந்த மாபெரும் மேடையில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று தன் தாய் மொழியான தமிழில் கூறியது, அனைவரையும் புல்லரிக்க வைத்தது. இத்தகைய இசைக் கலைஞன் மிகவும் எளிமையானவர் மற்றும் பலருக்கு முன்மாதிரியாகவும் உள்ளார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள் தன் நடிப்பாலேயே இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலும் பல்வேறு ரசிகர்களைப் பெற்றுள்ளார். இவர் எந்த ஒரு விருதையும் பெறாவிட்டாலும், இவரது நடிப்பு உலக மக்களை கவர்ந்துள்ளது. ஆகவே எவ்வித விருதும் பெறாமல் உலகில் பலரது மனதை கவர்ந்தவர் இந்தியாவைச் சேர்ந்த 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் ஆவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Men Who Made India Proud: International Men's Day

Here is the list of 6 men chosen from different fields who make us proud to be an Indian.
Desktop Bottom Promotion