For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்னப் புள்ளையா இருந்தப்ப தெருவுல இந்த விளையாட்டெல்லாம் விளையாடியிருக்கீங்களா பாஸ்...?

By Maha
|

இன்றுள்ள அதிகப்படியான வேலைப்பளுவைப் பார்க்கும் போது, பலருக்கு நாம் ஏன் இன்னும் குழந்தையாகவே இருக்கக்கூடாது என்று நினைப்போம். அதுமட்டுமல்லாமல், அனைவருக்குமே குழந்தைப்பருவம் தான் மிகவும் பிடித்த பருவமாக இருக்கும். ஏனெனில் நாம் சிறு வயதில் தெருவில் நண்பர்களுடன் சேர்ந்து நிறைய விளையாட்டுக்களை விளையாடி இருப்போம். அவை அனைத்துமே இனிமையான நினைவுகளாக அனைவரது மனதிலும் உள்ளன.

சாவதற்கு முன்பு விளையாடி பார்க்க வேண்டிய விளையாட்டுக்கள்!!!

ஆனால் இத்தகைய விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினர் யாரும் விளையாடுவதில்லை. அதற்கு பதிலாக இன்டர்நெட்டில் விளையாடுவது, வீடியோ கேம் விளையாடுவது என்று வீட்டிற்குள்ளேயே தான் அடைந்து இருக்கிறார்கள். மேலும் நாம் சிறு வயதில் விளையாடிய விளையாட்டுக்கள் அனைத்தும் மறைந்து கொண்டு இருக்கின்றன.

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, இங்கு சிறு வயதில் நாம் விளையாடிய சில விளையாட்டுக்களை கொடுத்துள்ளது. அந்த விளையாட்டுக்களில் எது உங்களுக்கு பிடித்த விளையாட்டு என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சுவாரஸ்யமான வேறு: குழந்தைகள் செய்யும் சுட்டித்தனமான சில காரியங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கில்லி

கில்லி

அக்காலத்தில் கிரிக்கெட் போன்ற விளையாட்டு தான் கில்லி. ஆனால் இந்த விளையாட்டில் பேட் மற்றும் பந்திற்கு பதிலாக, குச்சியைக் கொண்டு விளையாடுவோம். இந்த விளையாட்டு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். என்ன சரிதானே!

கண்ணாமூச்சி

கண்ணாமூச்சி

இந்த விளையாட்டை யாரும் விளையாடாமல் இருக்கமாட்டோம். மேலும் இந்த விளையாட்டை விளையாடும் போது, மறைவதற்காக நாம் பல தெருக்களை சுற்றியிருப்போம். இதுவும் சிறு வயதில் தெருவில் விளையாடிய விளையாட்டுக்களில் முதன்மையான ஒன்றாகும்.

நொண்டி

நொண்டி

நொண்டியை பெண் குழந்தைகள் தான் நிறைய விளையாடுவார்கள். இந்த மாதிரியான விளையாட்டை நகர பகுதிகளில் வாழும் இன்றைய தலைமுறையினர் யாரும் விளையாடுவதில்லை. அதற்கேற்றாற் போல இட வசதியும் நகர பகுதிகளில் இருப்பதில்லை. சரி, நீங்க இதை விளையாடி இருக்கிறீர்களா?

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங்

நாம் குழந்தைப் பருவத்தில் விளையாடிய மற்றொரு சிறப்பான விளையாட்டு தான் கயிற்றைக் கொண்டு விளையாடும் விளையாட்டான ஸ்கிப்பிங். இந்த விளையாட்டின் போது வெற்றி பெறுவதற்கான எத்தனை முறை குதித்திருப்போம். சரி நீங்க, சின்ன வயசுல ஸ்கிப்பிங் விளையாடும் போது எவ்வளவு எடுத்திருக்கீங்க...?

கபடி

கபடி

4,000 வருடத்திற்கு முன்பிருந்தே விளையாடப்பட்டு வரும் ஒரு பாரம்பரிய விளையாட்டு தான கபடி. இந்த விளையாட்டு விளையாட வேண்டுமானால், மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் வெற்றி பெற முடியும்.

கோலிக்குண்டு

கோலிக்குண்டு

தெருவோரங்களில் விளையாடப்படும் ஒரு விளையாட்டு தான் கோலிக்குண்டு. இந்த விளையாட்டு விளையாடும் போது நமக்கு சுத்தம் என்ற வார்த்தைக்கே இடமிருக்காது. ஏனெனில் இந்த விளையாட்டின் போது தெரு என்றும் பார்க்காமல், மிகவும் ஆர்வமாக விளையாடுவோம். என்ன நண்பர்களே! உண்மை தானே!

கல் அல்லது சிகரெட் அட்டை அடிப்பது

கல் அல்லது சிகரெட் அட்டை அடிப்பது

இந்த விளையாட்டும் இந்தியாவில் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்று. இந்த விளையாட்டை சிலர் தட்டையான கல்லைக் கொண்டோ அல்லது சிகரெட் அட்டை கொண்டோ விளையாடுவார்கள். இந்த விளையாட்டை நிச்சயம் யாராலும் மறக்க முடியாது.

கோ கோ விளையாட்டு

கோ கோ விளையாட்டு

கோ கோ விளையாட்டும் இந்தியாவில் குழந்தைகள் விளையாடும் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. இந்த விளையாட்டு விளையாட நிறைய எனர்ஜி வேண்டும். மேலும் பலருக்கு இந்த விளையாட்டு மிகவும் விருப்பமான விளையாட்டாகவும் இருக்கும்.

கேரம்

கேரம்

கேரம் கூட இந்தியாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்றாகும். நல்ல வேளை இது வீட்டிற்குள் விளையாடும் விளையாட்டாக இருப்பதால், இந்த விளையாட்டை இன்னும் பலர் தங்கள் வீடுகளில் விளையாடி வருகின்றனர்.

பட்டம் விடுவது

பட்டம் விடுவது

சிறு வயது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக்களில் ஒன்று தான் பட்டம் விடுவது. நன்கு படித்து பட்டம் வாங்கி இருக்கிறோமோ இல்லையோ, நிச்சயம் இந்த விளையாட்டை சிறுவயதில் ஆண்கள் அனைவரும் விளையாடி இருப்பார்கள். மேலும் இந்த விளையாட்டின் போது பலர் எத்தனையோ மரம், கூரை போன்றவற்றை ஏறியிருப்பார்கள்.

என்ன நண்பர்களே! உங்களுக்கு உங்க சின்ன வயசு ஞாபகம் வந்துடுச்சா..? சரி, நீங்க சின்ன வயசுல இதுல எந்த விளையாட்டை விளையாடியிருக்கீங்கன்னு எங்களோட பகிர்ந்து கொள்ளுங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion