For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் வாழும் கொடிய விஷமுள்ள 8 உயிரினங்கள்!!!

By Ashok CR
|

மிகவும் அற்புதமான கிரகமான இந்த உலகம், பலதரப்பட்ட உயிரனங்களுக்கு வீடாக அமைந்துள்ளது. சில உயிரனங்களை பார்த்தவுடனே பிடிக்கும் வண்ணம் இருக்கும்; இன்னும் சில உயிரனங்களை பார்க்கவே சகிக்காது; இன்னும் சிலவகை பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கும். நம்மை ஈர்க்கும் வகையிலான பல வகையிலான உயிரினங்கள் இருக்க தான் செய்கிறது.

மக்களால் உண்ணப்படும் சில விசித்திரமான கடல் உணவுகள்!!!

நம்மை மூச்சிரைக்க வைக்கும் பல உயிரனங்களுக்கு மத்தியில், நச்சுத்தன்மை உள்ள உயிரன வகைகள், அவைகளின் தனித்துவமான ஆளுமை குணாதிசயங்களால் நம்மை அசர வைக்கும். மேலும் கற்பனை செய்ய முடியாதவையாகவும் இருக்கும்; சொன்னால் நம்புவதற்கு கஷ்டமாக தான் இருக்கும்; எதை என கேட்கிறீர்களா - முழுமையாக வளர்ந்த 20 மனிதர்களை கொள்ளும் அளவிலான விஷத்தை ஒரு சிறிய தவளை கொண்டுள்ளது என்றதை தான். ஆமாம் தானே?

இதுப்போன்று வேறு: அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

இந்த உலகத்தில் வாழும் அவ்வகையான கொடிய விஷத்தை கொண்டுள்ள உயிரனங்கள் சிலவற்றைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். அவ்வகையான நச்சுத்தன்மை மிக்க உயிரினங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவிற்கு கொடிய விஷத்தை கொண்டிருக்கும். அதற்கு காரணம் அதன் விஷத்தின் வீரியமே.

இப்போது உலகத்தில் உள்ள கொடிய விஷத்தை கொண்டுள்ள 10 கொடிய உயிரனங்களைப் பற்றி ஒன்றொன்றாக பார்க்கலாமா? இவை ஒவ்வொன்றும், ஏற்கனவே கூறியதை போல் உங்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கும்.

பார்ப்பதற்கு 'நச்'னு இருந்தாலும் இதுங்க தான் உலகிலேயே செம நச்சுமிக்க பாம்புகளாம்!!

இங்கு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் குறைந்த நச்சுத்தன்மை முதல் ஆரம்பித்து அதிக நச்சுத்தன்மை கொண்டுள்ள உயிரினங்களில் வந்து முடிவடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பஃப்பர் மீன்

பஃப்பர் மீன்

நம் பட்டியலில் குறைந்த நச்சுத்தன்மை உள்ள உயிரனமாக 8-ஆவது இடத்தில் உள்ள பஃப்பர் மீன் உள்ளது. சக்திவாய்ந்த விஷத்திற்கு பெயர் பெற்றது இந்த மீன். இருப்பினும் ஜப்பான் மற்றும் தென் கொரியா நாட்டில் இந்த மீனை உணவாக பயன்படுத்தி வருகின்றனர். ஜப்பானில் இதை ஃபுகு என்றும், தென் கொரியாவில் இதை போக்-ஊ என்றும் அழைக்கின்றனர். இதன் சருமத்திலும் சில உறுப்புகளிலும் சக்தி வாய்ந்த விஷத்தை கொண்டுள்ளது இந்த மீன். இது உணர்வின்மையை உண்டாக்கும். மேலும் நாக்கு மற்றும் தசைகளின் செயல்பாட்டை செயலிழக்க செய்யும். இதனால் குணப்படுத்த முடியாத வாதம் ஏற்படும்.

பிரேசிலியன் சிலந்தி

பிரேசிலியன் சிலந்தி

இதனை "வாண்டரிங் (திரியும்) சிலந்தி" என பொதுவாக அழைப்பார்கள். உலகத்தில் உள்ள சிலந்திகளிலேயே மிகுந்த நச்சுத்தன்மை உள்ள சிலந்தியாக இது பார்க்கப்படுகிறது. இதனால் மனிதர்களுக்கு பல வகையான ஆபத்து உண்டாகலாம். மற்ற சிலந்திகளின் விஷத்துடன் ஒப்பிடுகையில், இதன் சக்தி வாய்ந்த விஷம் மனிதர்களின் உயிரையே பறித்து விடும். சிலந்தி போன்ற சிறிய உயிரினத்தில் இவ்வளவு விஷமா என்பதே நமக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். இந்த செய்தி இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் - அதன் விஷத்தில் 0.0006 மி.கி. இருந்தால் போதும், நொடியில் ஒரு எலி மடிந்து விடும்.

ஸ்டோன் (கல்) மீன்

ஸ்டோன் (கல்) மீன்

மிகவும் கொடூரமான மீன் என்று இந்த உலகத்தில் உள்ளதென்றால் அது தான் இந்த ஸ்டோன் மீனாகும். மிகுந்த வலியை ஏற்படுத்தும் வகையில் இந்த மீன் கொட்டும். தன் எதிரிகளை தன்னிடம் அண்ட விடாமல் தடுக்க இதனை பெரிய ஆயுதமாக அது பயன்படுத்துகிறது. அதன் முதுகெலும்பில் ந்யுரோ நச்சுக்கள் நிறைந்துள்ளது. இந்த விஷத்தால் ஏற்படும் அபாயங்கள் - கொடிய வலி, வாதம் மற்றும் மூச்சுத்திணறல்.

டெத் ஸ்டாக்கர் தேள்

டெத் ஸ்டாக்கர் தேள்

பொதுவாக தேள்கள் என்றால் ஆபத்தில்லை. மனிதர்களையும் அவைகள் பொதுவாக தாக்குவதில்லை. ஆனால் இதில் மாறுப்பட்டதாக விளங்குகிறது ஸ்டாக்கர் தேள். இந்த தேள் கொட்டினால் உயிர் போகும் அளவிற்கு வலி ஏற்படும். போதிய நேரத்திற்குள் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் அதன் விளைவாக தசைகள் வாதம் உண்டாகும்.

கூம்பு நத்தை

கூம்பு நத்தை

நம் உலகம் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தாத காரணங்களில் இதையும் ஒன்றாக கூறலாம். பின்ன என்னங்க, நத்தை போன்ற ஒரு சின்ன உயிரினத்தால் நம் உயிருக்கு ஆபத்து என்றால் என்ன சொல்வது. நம்பும்படியாக இல்லையா? ஆனால் உண்மை, இந்த உலகத்தில் வாழும் விஷத்தன்மை உள்ள உயிரனங்களில் ஒன்றாக விளங்குகிறது கூம்பு நத்தை. வெதுவெதுப்பான உப்பு தண்ணீர் பகுதியில் பொதுவாக இவ்வகையான நத்தையை காணலாம். அதன் விஷத்தின் ஒரு சொட்டு 15-20 மனிதர்களின் உயிரை பறிக்கும் சக்தியை கொண்டுள்ளது.

இன்லேன்ட் டைபன் பாம்புகள்

இன்லேன்ட் டைபன் பாம்புகள்

ஒரு விஷயத்திற்கு இவை பெயர் பெற்றது - அதன் விஷம். உலகத்தில் உள்ள கொடிய விஷமுள்ள உயிரனங்களில் பல பாம்புகளின் பெயர்களை கூறலாம். அப்படிப்பட்ட பல பாம்பு வகைகளில் இன்லேன்ட் டைபன் வகைகள் தான் மிகவும் கொடிய விஷத்தை கொண்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த ந்யூரோ நச்சினால் 20 நிமிடங்களில் மரணம் ஏற்பட்டு விடும். தீவிர வலி, தசை வாதம் மற்றும் கோமா போன்ற நிலைகள் கூட இந்த பாம்பு கடியால் உண்டாகும். 50 மனிதர்களை கொள்ளும் அளவிலான விஷத்தை கொண்டுள்ளது இவ்வகையான பாம்பு. வெறும் 15 நிமிடங்களில் இதன் விஷம் இரத்த திசுக்களை இறுகச் செய்யும்.

பாக்ஸ் ஜெல்லிஃபிஷ்

பாக்ஸ் ஜெல்லிஃபிஷ்

இந்த பாக்ஸ் ஜெல்லிஃபிஷ் பற்றி சொல்ல வேண்டுமானால் முதலில் நமக்கு தோன்றுவது அதன் நளினம். ஆம், அவ்வளவு அழகான உயிரினம் இது. ஆனால் இது ஒரு முறை கடித்தால் போதும், உங்கள் சோலி முடிந்தது; கடைசியாக கொஞ்ச நேரம் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டு மடிந்து விடுவீர்கள். உலகத்தில் உள்ள இரண்டாவது நச்சுத்தன்மை மிக்க உயிரினமாக விளங்குகிறது இந்த பாக்ஸ் ஜெல்லிஃபிஷ். மிகவும் ஆபத்தான உயிரினங்களிலும் இவை இரண்டாவது இடத்தை பிடிக்கிறது. இதனால் கடிபட்டவர்களுக்கு அதிகமான வலி எடுக்கும், சில நிமிடங்களில் சுயநினைவு நீங்கும், நெஞ்சு வலி ஏற்படும் அல்லது சுவாச செயல்பாடு தடைபட்டு போகும்.

டார்ட் விஷம் தவளை

டார்ட் விஷம் தவளை

உலகத்தில் உள்ள மிக கொடிய விஷத்தை கொண்டுள்ள உயிரினம் தான் டார்ட் விஷம் தவளை. பாக்ஸ் ஜெல்லிஃபிஷ்ஷை போல் இதனை பற்றியும் ஒன்றை சொல்ல வேண்டுமானால், அதன் ஆளுமை மிக்க நளினமான அமைதன்மை. டார்ட் விஷம் தவளையின் நிறம் அவ்வளவு ஈர்ப்பாக இருக்காது. அதற்கு காரணம் அதன் சருமத்தின் மீது தான் விஷம் படிந்திருக்கும். ஒரு டார்ட் விஷம் தவளையில் உள்ள விஷத்தால் 100 மனதிர்களை கொன்று விடலாம். அதன் விஷத்தின் ஒரு சொட்டு 20,000 எலிகளை கொன்று விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Most Poisonous Creatures In The World

Let us look at these 8 deadliest creatures in the world one by one. Each of these creatures, as mentioned earlier, will unfailingly take you by surprise.
Desktop Bottom Promotion