For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான 8 நகரங்கள்!!!

By Ashok CR
|

இந்த உலகத்தில் உள்ள 196 நாடுகளில், 193 நாடுகளை ஐக்கிய நாடுகள் அங்கீகரித்துள்ளது. இந்த ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு வழியில் தனிப்பட்ட விசேஷங்களை கொண்டுள்ளது. அதற்கு அந்த நாடுகளில் வாழ்பவர்களே காரணமாக விளங்குகிறார்கள். தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சில நாடுகள் புகழை பெற்றிருப்பதை போல், வளமையான இயற்கை வளங்களால் பல நாடுகள் புகழை பெற்றுள்ளது. அப்படி தான் சில நாடுகள் ஆபத்துக்களுக்காக புகழ் பெற்றுள்ளது.

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள சக்தி வாய்ந்த 6 நில நடுக்கங்கள்!

உலகத்தில் உள்ள மிகவும் ஆபத்தான நகரங்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். புகழ் பெற்ற காரணிகளின் அடிப்படையில் தான் இந்த நகரங்கள் ஆபத்தான வகையின் கீழ் தரம் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் வாழ்க்கையின் பொது விஷயங்கள் (முக்கியமாக மிரட்டப்படுவது) ஆகியவைகளை சில காரணிகளாக கூறலாம்.

பெண்களே, இந்த 10 நகரங்கள்தான் உங்களுக்கு புனிதமானது.. பாதுகாப்பானது!!!

உலகத்தில் உள்ள மிக ஆபத்தான 8 நகரங்களைப் பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்த நகரங்கள் பெண்களுக்கு, குழந்தைகளுக்கு, ஆண்களுக்கு, ஏன் அனைவருக்கும் ஆபத்தாக விளங்குகிறது. மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாக்தாத், ஈராக்

பாக்தாத், ஈராக்

உலகில் உள்ள மிக ஆபத்தான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது ஈராக்கிலுள்ள பாக்தாத் என்ற நகரம். அதன் சுற்று வட்டாரங்கள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தாலும் கூட, இஸ்லாமிய எதிரிகளுக்கு இடையே தற்போது நடந்து வரும் போர், அங்குள்ள மக்களை பெரியளவில் பாதித்துள்ளது. தற்போதுள்ள நிலையை பார்த்தால், இந்த வன்முறை ஓய்வதாக தெரியவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக தினமும் சராசரியாக 100 பேர்களுக்கு மேல் இறக்கிறார்கள். போரால் சிதைந்து கொண்டிருக்கும் இந்த நாட்டை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது போல.

அலெப்போ, சிரியா

அலெப்போ, சிரியா

தற்போதைய நிலவரப்படி, தினசரி அடிப்படையில், பல்லாயிர உயிர்கள் மாண்டு கொண்டிருப்பதை காண்கையில், உலகத்தில் உள்ள மிக ஆபத்தான நகரங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது அலெப்போ. அரசாங்கத்திற்கு ஆதரவான போராளிகள் & ராணுவம் ஒரு பக்கமும் புரட்சியாளர்கள் மறுபக்கமும் போராடி வருகின்றனர். வன்முறை, கொலை, கற்பழிப்பு போன்றவைகள் சர்வ சாதரணமாகி விட்டது. இதனால் கணக்கிட முடியாத அளவில் பாதிப்புகளும் பேரழிவுகளும் ஏற்பட்டு வருகிறது. 2011 கடைசியில் தொடங்கிய இந்த சண்டையால், தினமும் 80-100 பேர்கள் வரை உயிர் இழக்கின்றனர்.

சான் பெட்ரா சுலா, ஹோண்டுராஸ்

சான் பெட்ரா சுலா, ஹோண்டுராஸ்

தொடர்ந்து இரண்டு வருடமாக கணக்கெடுக்கையில், அதிக கொலை வீதத்தில் முதல் இடத்தை பெற்றுள்ள நாடாக ஹோண்டுராஸ் விளங்குகிறது. போதை மருந்துகளும் விபச்சாரமும் சாதராணமாக நடைபெறுகிறது. போதை வணிகம் நடைபெற சிறந்த இடமாக திகழும் இது, தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவை இணைக்க பயன்படுகிறது. சட்டம் ஒழுங்கு என்பது இங்கு கிடையவே கிடையாது. கோழிகளை போல் இங்கே மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.

சியுடாத் ஜ்யரெஸ், மெக்சிகோ

சியுடாத் ஜ்யரெஸ், மெக்சிகோ

குற்ற வீதம், போதையுடன் கூடிய வன்முறையால் மெக்சிகோவும் ஆபத்தான இடங்களில் முதன்மை வகிக்கிறது. அதனால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மாண்டு வருகிறது. எல்லை நகரத்தில் கூலிப்படை கொலைகள், கற்பழிப்பு, கொலை, கும்பல் வன்முறை, மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்றங்கள் அரங்கேறி வருகிறது. அடுத்த 10 ஆண்டுகளுக்காவது கண்டிப்பாக வருகை தரக்கூடாத இடமாக இது திகழ்கிறது. போதை கூட்டமைப்புகள் இங்கே ஆட்சி செய்கிறது. கொலைகள் எல்லாம் செய்திகளில் வருவதும் இல்லை.

காபுல், ஆப்கானிஸ்தான்

காபுல், ஆப்கானிஸ்தான்

தலிபான்களின் மையமாக அறியப்படும் காபுல், ஓபியம் மற்றும் ஆயுதங்களுக்கு வணிக மையமாக விளங்குகிறது. பெண்களுக்கும் கூட இது மிகவும் ஆபத்தான நகரமாக விளங்குகிறது. கற்பனைக்கு எட்டாத அளவிற்கு பெண்களின் உரிமைகள் இங்கே அடக்கப்பட்டுள்ளது. இங்கே நடக்கும் மோசமான முடிவில்லா நிகழ்வுகளால் ஓய்வில்லாமல் இந்த அவள்னக் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

காரகாஸ், வெனிஸுவெல்லா

காரகாஸ், வெனிஸுவெல்லா

போதை பொருள் தொடர்பான வன்முறையினால் மன்னிக்க முடியாத வரலாற்றை பெற்றுள்ளது வெனிஸுவெல்லா என்ற நாடு. வசிப்பதற்கு ஆபத்தான நகரங்களில் இதுவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. 100,000 பேர்களுக்கு 120 பேர் என்ற குறைந்த பட்ச வீதத்தில் கொலைகள் நடந்து வருகிறது. வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமையே இந்த கொலைகளுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.

அபுஜா, நைஜீரியா

அபுஜா, நைஜீரியா

போகோ ஹரம் கிளர்ச்சியாளர்கள், சீர்குலைக்கும் அழிவை நைஜீரியாவில் ஏற்படுத்து வரும் அடிப்படையில், இந்த நாட்டை மதப்போர் சூறையாடிக் கொண்டிருக்கிறது. அதன் படி, இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் மேற்கத்திய மோகம் மற்றும் பண்பாட்டிற்கு எதிராக செயல்பட்டு கொண்டுள்ளனர். கட்டுக்கடங்காத அளவில் குற்ற எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் இங்கே குறைந்து 10 பேராவது மடிந்து கொண்டிருக்கின்றனர்.

பெலம், பிரேசில்

பெலம், பிரேசில்

பிரேசில் மூன்று விஷயங்களுக்காக அறியப்பட்டுள்ளது - விடுதலைக்கு பிறகு இந்த மூன்றும் தான் அந்த நாட்டை வரையறுத்துள்ளது - அவை கேளிக்கை கொண்டாட்டம், கால் பந்து மற்றும் குற்றம். சில வருடங்களாக இந்த நாடு அபரீத வளர்ச்சியை அடைந்திருந்தாலும் கூட இன்னமும் வளர்ந்து வரும் நாடாகவே இது திகழ்கிறது. இங்கு நடக்கும் குற்ற வீதம் குறையவே இல்லை. பிரேசிலில் உள்ள நகரங்களில் பெலம் தான் உலகத்தில் உள்ள ஆபத்தான நகரமாக கருதப்படுகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

8 Most Dangerous Cities In The World

Here is the list of 8 most dangerous cities in the world. These are the most dangerous cities for women, for children for men, for everyone you an think of. Read on...
Desktop Bottom Promotion