For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்தில் அழிந்து வரும் 7 உயிரினங்கள்!!!

By Ashok CR
|

உலகத்தில் அழிந்து வரும் உயிரினங்களை பார்த்தால் மிகவும் அழகிய, எழில் மிக்க, நளினமான, கம்பீரமான உயிரினங்களாகவே அவைகள் இருக்கும். மனிதர்களாக இந்த உலகத்தில் உள்ள தாவர வளத்திற்கும் விலங்கின வளத்திற்கும் நாம் உண்டாக்கியுள்ள சேதத்தின் அளவு கொஞ்சம் நல்லமல்ல. அதை நாம் உணர்வதும் இல்லை.

இணையற்ற அளவிலான அறிவை கொண்டவர்களாக நாம் இருப்பதால், இந்த உலகத்தில் உள்ள நுண்மையான பொருட்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் பொறுப்பு நம்முடையதாகும். ஆனால் அப்படி எதுவுமே நடப்பதில்லை. உண்மையிலேயே மிகவும் வேதனை அளிக்க கூடிய விஷயம் இது.

உலகத்தில் வாழும் கொடிய விஷமுள்ள 8 உயிரினங்கள்!!!

இப்படி பூமிக்கும் அதில் வாழும் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு போதிய சேதங்களை நாம் ஏற்படுத்தியுள்ளதால், பல உயிரினங்கள் இன்று இல்லாமலேயே போய் விட்டது. சில முழுமையாக அழியும் நிலையை எட்டியுள்ளது. இன்று அப்படி அழிந்து வரும் ஒரு 7 உயிரினங்களை பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். இந்த அழகிய உயிரினங்கள் இந்த அதிசய உலகத்தை விட்டு முழுமையாக பிரியும் நேரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது.

அச்சுறுத்தும் அதிபயங்கர 7 கடல் உயிரினங்கள்!!!

அதற்கு காரணமாக விளங்குவது வளிமண்டல நிலைமைகளில் கடுமையான மாற்றங்கள். இதனால் சீர்படுத்த முடியாத பாதிப்பை இந்த உலகத்திற்கு ஏற்படுத்தியுள்ளது. வெறுக்க தக்க வகையிலான மனித இன தலையீட்டிற்கு முன்னதாக இவ்வகையான உயிரினங்களின் எண்ணிக்கை எப்படி இருந்ததோ அதற்கு அப்படியே தலைகீழ் நிலைமை இப்போது. அப்படிப்பட்ட அழிந்து வரும் 7 உயிரினங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம், வாங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுமத்திரா மனிதக் குரங்கு

சுமத்திரா மனிதக் குரங்கு

அடக்க முடியாத மனித இன வளர்ச்சியினால், சுமத்திரா மனிதக் குரங்குகள் மிக வேகமான வீதத்தில் அழிந்து வருகிறது. தோராயமாக இன்னும் 7500 குரங்குகளே இந்த உலகத்தில் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு சோகம் என்னவென்றால் - இவைகளின் இனத்தொகை வருடத்திற்கு 1000 என்ற வீதத்தில் குறைந்து வருகிறது. அடுத்த ஐந்து வருடத்தில் இந்த இனம் முழுமையாக அழிந்து விடும் என அழிந்து வரும் இந்த இனத்தை பற்றி முன்னணி ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றின் இயக்குனர் கூறியுள்ளார்.

ஐபீரிய லின்க்ஸ் (காட்டுப் பூனை)

ஐபீரிய லின்க்ஸ் (காட்டுப் பூனை)

உலகத்தில் வேகமாக அழிந்து வரும் மற்றொரு உயிரினமாக விளங்குகிறது ஐபீரிய லின்க்ஸ் (காட்டுப் பூனைகள்). வேட்டையாடுதல் மற்றும் மனித இன வளர்ச்சியே இதன் அழிவிற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. இவைகள் பெரும்பாலும் முயல்களையே இரையாக உண்ணும்; முயல்களின் இன எண்ணிக்கைகளும் குறைந்து விட்டது. ஸ்பெயின் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் இந்த இனத்தின் எண்ணிக்கை தோராயமாக நூறுக்கும் சற்று கூடுதலாக உள்ளது. இதன் இனத்தை பாதுகாக்கும் எண்ணத்தில் ஸ்பானிஷ் அரசாங்கம் ஆயிரக்கணக்கான முயல்களை காட்டு பகுதிகளுக்குள் அனுப்பி வைத்துள்ளது. காட்டு பூனைகளுக்கு முயல்களே விருப்பமான உணவாகும். ஒரு வேளை அந்த இனம் முழுமையாக அழிந்து விட்டால், கடந்த 2500 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பூமியை விட்டு பிரியப் போகும் முதல் காட்டுப் பூனை வகை இதுவாகத் தான் இருக்கும்.

தங்க நிறத் தலையை கொண்ட லங்கூர் (கரடிக் குரங்கு)

தங்க நிறத் தலையை கொண்ட லங்கூர் (கரடிக் குரங்கு)

2000-ஆம் ஆண்டு முதல் இவைகள் பாதுகாக்கப்பட தொடங்கப்பட்டது. இன்று இந்த இனத்தின் எண்ணிக்கை தோராயமாக வெறும் 70 மட்டுமே. கட்டுக்கடங்காமல் இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு என்ன செய்வது என வனவிலங்கு பாதுகாப்பு நிறுவனங்கள் புரியாமல் நிற்கிறது. இன்னும் சில வருடங்களில் இவைகள் முழுமையாக அழிந்து விடும்; மிஞ்சி போனால் 2 அல்லது 3 ஆண்டுகளில். மனித இன வளர்ச்சி மற்றும் தோதுபடாத வானிலை மாற்றங்களே அதனை தீர்மானிக்கும்.

மிகப்பெரிய பாண்டா (செங்கரடி பூனை)

மிகப்பெரிய பாண்டா (செங்கரடி பூனை)

முடியும் தருவாயில் இருக்கும் மற்றோரி இனம் தான் மிகப்பெரிய பாண்டா (செங்கரடி பூனை). இன்றைய தேதியில் சீனா, வியட்நாம் மற்றும் பர்மாவில் வசிக்கும் இதன் எண்ணிக்கை கிட்டத்தட்ட 2000-மாக உள்ளது. சிறைப்பிடிக்கப்பட்ட இனப்பெருக்கம் மற்றும் இதர வழிமுறைகள் பெரிதாக கை கொடுக்கவில்லை.

சுமத்திரா புலி

சுமத்திரா புலி

அனைத்து வகையிலான பூனைகளிலும் கம்பீரமான தோற்றத்தை கொண்டவையாக விளங்குவது புலி. ஆனால் அது இன்று அழியும் நிலையை அடைந்துள்ளது. வேட்டையாடுதல் மற்றும் மனித வளர்ச்சியே அதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகிறது. சுமத்திரா புலிகளின் எண்ணிக்கை தற்போது தோராயமாக வெறும் 600 மட்டுமே. புலிகளை பாதுகாப்பதில் பெரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மார்தட்டப்பட்டு வந்தாலும், சில நூறு புலிகள் பாதுகாப்பாக இல்லாத இடங்களில் வசிக்க தான் செய்கிறது.

ஹேரி நோஸ் ஓம்பேட்

ஹேரி நோஸ் ஓம்பேட்

ஹேரி நோஸ் ஓம்பேட் என்பது அழிந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மார்சுப்பியல்கள். ஆஸ்திரேலிய ஹேரி நோஸ் ஓம்பேட் தான் ஓம்பேட் இனத்திலேயே மிகப்பெரியதாகும். கூர்மை, சக்தி வாய்ந்த நகங்கள் மற்றும் பருத்த உடலுக்காக இவை பெயர் பெற்றதாகும். அதன் மென்மையான ரோமத்திற்காக அவைகள் வேட்டையாடப்படுகின்றன. தற்போது ஆஸ்திரேலிய கண்டத்தில் பாதுகாக்கப்பட்ட வட்டாரத்தில் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இவைகள் உள்ளது.

கருப்பு காண்டாமிருகம்

கருப்பு காண்டாமிருகம்

தந்தங்களுக்காக வேட்டையாடப்படுகிறது கருப்பு காண்டாமிருகம், முக்கியமாக வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவில். இப்படி வேட்டையாடப்படுவதால், இந்த கம்பீரமான இனத்தின் எண்ணிக்கை தற்போது வெறும் 70-ஆக மட்டுமே உள்ளது. உலகத்தில் சுலபமாகவும் வேகமாகவும் அழிந்து வரும் இனத்தில் கருப்பு காண்டாமிருகத்திற்கு முக்கிய இடமுள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளில் இதன் இனம் முழுமையாக அழிந்து விடும் என நம்பத்தகுந்த அறிக்கைகள் கூறுகிறது.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Most Endangered Species In The World

Here are 7 most endangered species that are almost completely extinct looking at the numbers in which they existed prior to this day.
Desktop Bottom Promotion