For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 6 கெட்ட பழக்கங்கள்!!

By Karthikeyan Manickam
|

நாம் நம் வாழ்க்கையில் எத்தனையோ வகையான மனிதர்களைச் சந்தித்திருப்போம். நம் உறவினர்களும், நண்பர்களும் கூட அதில் அடக்கம்தான்! அவர்களிடம் நல்ல விஷயங்களும் இருக்கும்; கெட்ட பழக்கங்களும் தாண்டவமாடிக் கொண்டிருக்கும்.

இவ்விரண்டு பழக்கங்களில் எதை நாம் கடைப்பிடித்தால் நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும், எது நம் வாழ்க்கையைச் சீரழிக்கும் என்பது நன்றாகத் தெரிந்த விஷயம் தான். ஆனால் இதை நாம் எந்த அளவுக்குப் பின்பற்றுகிறோம் என்பது கேள்விக் குறியே!

மற்றவர்களைப் போல் சில கெட்ட விஷயங்களை நாமும் வாழ்க்கையில் செய்து விட்டு, "அவர்களே அப்படி இருக்கிறார்கள். நான் செய்தால் மட்டும் தப்பா?" என்று நொண்டிச் சாக்கு சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும், நம் மனச் சாட்சி நம்மைச் சும்மா விடாது என்பதை மட்டும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையில் நாம் அனுமதிக்கக் கூடாத அப்படிப்பட்ட 6 கெட்ட விஷயங்கள் குறித்து இப்போது பார்க்கலாம். இதன் மூலம் நம் நண்பர்கள் திருந்துவதற்கும் நாம் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெகட்டிவ் சிந்தனை

நெகட்டிவ் சிந்தனை

நாம் வாழும் இன்றைய உலகத்தில், பெரும்பாலும் எதிர்மறையான விஷயங்கள் தான் நம்மை இணைக்கின்றன. அந்த அளவிற்கு வெற்றிகரமான விஷயங்கள் மக்களை இணைப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், சில பிரச்சனைகளை மூடி மறைத்தால் தான் அடுத்தவர்களை எளிதாக நட்பாக்கிக் கொள்ள முடியும். இதுப்போன்ற போலி வாழ்க்கை தேவைதானா? உண்மையான, பாஸிட்டிவ்வான விஷயங்கள் தான் நம்மை ஆரோக்கியமாக வாழ வைக்க முடியும்.

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை

நம்மைப் பற்றி நாமே தாழ்வாக எடை போடக் கூடாது. சிலருக்கு சுய பச்சாதாபம் என்னும் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகம் இருக்கும். ஒரு காரியத்தைச் செய்யும் போது, 'அய்யோ யாரும் எதுவும் நினைத்து விடுவார்களோ?' என்ற எண்ணம் தலைதூக்கி, அவர்கள் பல நல்ல வாய்ப்புக்களைத் தங்கள் வாழ்க்கையில் இழந்து விடுவதுண்டு. இது ஒரு மோசமான பழக்கம் என்பதால், இதைத் வேரோடு அறுக்க வேண்டும். 'நாம் தான் சூப்பர், மற்றவர்கள் எல்லாம் டூப்பர்' என்ற சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ் அதிகரிக்க வேண்டும்.

பொய் சொல்வது

பொய் சொல்வது

'இந்தக் காலத்தில் பொய் சொல்லாமல் வாழவே முடியாதப்பா' என்று அனைவரும் அலுத்துக் கொள்வது வழக்கம். உண்மையே பேசி, நேர்மையாக நடந்து கொள்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்: பொய் எப்போதும் நிலைத்து நிற்காது. "உண்மை ஒரு நாள் வெளியாகும்; அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்."

கேலி, கிண்டல் செய்வது

கேலி, கிண்டல் செய்வது

இதை 'ஜஸ்ட் ஃபன்' என்று சாதாரணமாகச் சொல்லி விடுவார்கள். ஆனால் கேலி செய்வதன் மூலம் அடுத்தவர்களின் மனதைத் துன்புறுத்த நம் யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. ஆனாலும் பெரும்பாலான மக்கள் இப்படித்தான் அடுத்தவர்களைக் கிண்டல் செய்து, அவர்களை நோகடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுப்போன்ற செயல்களைச் செய்ய நாம் அவர்களை அனுமதிக்கக் கூடாது; நாமும் இச்செயல்களில் ஈடுபடக் கூடாது.

அடிமைப்படுத்துவது

அடிமைப்படுத்துவது

நம் வாழ்க்கை எப்போதும் நமக்காகத் தான்; அதுவும், அது நம் கையில் தான் இருக்க வேண்டும். நம் வாழ்வின் எந்த ஒரு செயலையும் அடுத்தவர்கள் முடிவெடுக்கக் கூடாது. சில விஷயங்களில் அடுத்தவர்களின் உதவியை நாட வேண்டியிருக்கலாம்; அதற்காக அவர்களே நம் வாழ்க்கையின் முழுக் கட்டுப்பாட்டையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. நாமும் இதுப்போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது.

உடல் ரீதியாகத் துன்புறுத்துவது

உடல் ரீதியாகத் துன்புறுத்துவது

மன ரீதியாக மட்டுமல்ல, அடுத்தவர்களை நாம் உடல் ரீதியாகவும் துன்புறுத்தக் கூடாது. இதுப்போன்ற கேவலமான குற்றச் செயல் இவ்வுலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. நம்மை யாராவது உடல் ரீதியாகத் துன்புறுத்தியிருந்து, அதை நாம் மன்னித்தால் நாம் ஒரு ஹீரோதான்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

6 Negative Behaviors of Others You Should Not Allow in Your Life

If you want to change how people are treating you and detox your life from the negativity, here are 6 behaviors you should not allow in your life.
Desktop Bottom Promotion