For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாம் ஏன் வாழ்க்கையில் எதையுமே விட்டுக் கொடுக்கக்கூடாது? இதோ 5 காரணங்கள்!!

By Karthikeyan Manickam
|

எப்போதுமே நாம் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் நம் வாழ்க்கை சிறக்கும். விட்டுக் கொடுப்பதனால் அடுத்தவர்களுடன், ஏன், வீட்டில் இருப்பவர்களுடன் கூட சண்டை சச்சரவு ஏதும் இருக்காது. விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை. இப்படியெல்லாம் விட்டுக் கொடுத்து வாழ்வதைப் பற்றி நிறையப் பேர் நிறைய சொல்வார்கள்.

ஆனால், பல சமயங்களில் விட்டுக் கொடுத்ததால் மட்டுமே மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்; வாழ்க்கையில் பலமான அடியும் ஏற்படும்; தொல்லையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்ட கதையாகிவிடும்; வாழ்க்கையே தோல்வி அடைந்துவிடும். இந்தத் தோல்விகளை வெற்றியின் படிக்கட்டுகளாக்கி சாதனை புரிந்தவர்களும் இந்த மண்ணில் உண்டு.

மனதை குழப்பும் நேரத்தைப் பற்றிய தத்துவ ரீதியான மர்மங்கள்!!!

5 Reasons Why You Should Never Give Up On Life

வெற்றியும், தோல்வியும் வீரனுக்கு சகஜம் என்று இருந்தாலும், நாம் வாழ்க்கையில் எதையும் எதற்காகவும் விட்டுக் கொடுக்கவே கூடாது என்பதற்கான சில காரணங்களும் உண்டு. அவைப் பற்றி இப்போது கொஞ்சம் அலசலாமா?

உண்மையான வெற்றியை ருசிக்க முடியாது

சில விஷயங்களை நாம் விட்டுக் கொடுக்கும் போது, நமக்குக் கிடைக்கும் உண்மையான வெற்றியை ருசிக்க முடியாது. அந்த உண்மையான வெற்றியை ருசிக்க வேண்டுமென்றால், சில போராட்டங்களை விட்டுக் கொடுக்காமல் சந்தித்து தான் ஆக வேண்டும். இதில் சில தோல்விகளைச் சந்தித்தாலும், வெற்றிக் கனியைக் கண்டிப்பாய் நாம் ருசிப்போம்.

உண்மையான திறமை தெரியாமல் போகும்

நாம் விட்டுக் கொடுக்கும் போது, நம்முள்ளே அடங்கிக் கிடக்கும் சில திறமையான சங்கதிகள் வெளியே தெரியாமலே போய்விடும். சில சமயம், அத்தகைய திறமைகள் உங்களுக்கே கூடத் தெரியாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, நாம் விட்டுக் கொடுக்கவே கூடாது.

வல்லவனுக்கு வல்லவன்

வாழ்க்கையில் நம்மை விட அடிபட்டவர்கள் நிச்சயம் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்கள் நம்மை விடக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கலாம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அப்படிப்பட்டவர்களிடம் நாம் விட்டுக் கொடுக்க நினைப்பது மிகவும் முட்டாள்தனமாகவும், கொடுமையாகவும் இருக்கும்.

வாழ்க்கை அனுபவம் வளரும்

சில விஷயங்களில் விட்டுக் கொடுக்காமல் நாம் வாழும் வாழ்க்கை நமக்கு ஒரு நல்ல அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். நம்மிடமுள்ள தலைமைப் பண்புக்கும் அது வழிவகுக்கும். இந்த அருமையான அனுபவத்தை நாம் பிறருக்கும் கற்றுக் கொடுத்து, அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற உறுதுணையாக இருக்கலாம்.

உலகம் மிதிக்கத் துடிக்கும்

நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது மிகமிக எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். அந்தச் சமயத்தில் தான் உலகமே தன் கால்களில் நம்மைப் போட்டுப் பந்தாடத் துடிக்கும். அந்த நேரத்தில் நாம் விட்டுக் கொடுத்து விட்டால், கட்டாயம் மிதிபடுவோம். விட்டுக் கொடுக்காமல் இருந்தால், உலகமே நம் கால்களில் கிடக்கும்!

English summary

5 Reasons Why You Should Never Give Up On Life

Here are 5 reasons why you shouldn't give up. Read on...
Desktop Bottom Promotion