For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரண்டாம் உலகப்போரைப் பற்றி உங்களுக்கு தெரியாத 12 புதிரான தகவல்கள்!!!

By Ashok CR
|

மனித இன வரலாற்றில் மிகப்பெரிய துன்பமாக பார்க்கப்படுவது இரண்டாம் உலகப்போர். கிட்டத்தட்ட மொத்த உலகமே ஈடுபட்ட இந்த போர் தான் மனித இன வரலாற்றிலேயே மிகவும் விலை உயர்ந்த போராக உள்ளது. போருக்கான மொத்தமாக ஆன செலவு, மக்களின் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பிற்காக ஆன செலவின் அடிப்படையில் தான் இது மிகவும் விலை உயர்ந்த போராக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிர்ச்சியூட்டும் 10 வியப்பான சமயஞ்சார்ந்த சடங்குகள்!!!

இந்த போரில் ஏற்பட்டுள்ள பேரழிவு கற்பனைக்கு எட்டாத அளவிலானது. இரண்டாம் உலகப்போரில் நடந்தேறிய பல நிகழ்வுகளை பற்றி நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள். அப்படிப்பட்ட சில நிகழ்வுகளை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் தூக்கி வாரிப் போடும் அளவிற்கு இருக்கும்.

இன்று, இரண்டாம் உலகப்போரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். இதனைப் பற்றி படித்த பிறகு, போரில் நடந்த நிகழ்வுகள் பற்றிய உள்நோக்கை உங்கள் கண்முன் கொண்டு வரும். சரி வாங்க, இரண்டாம் உலகப் போரை பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பற்றி பார்க்கலாம்.

மனிதர்களை பற்றிய நம்ப முடியாத 7 மர்மங்கள்!!!

இதோ, இரண்டாம் உலகப்போரை பற்றி சிந்தக்க வைக்கும் 12 தகவல்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரஷிய நாட்டின் சோகம்

ரஷிய நாட்டின் சோகம்

இரண்டாம் உலகப்போரின் போது ரஷிய நாடு தான் அதிக அளவிலான உயிர் இழப்பை சந்தித்தது. 1923 ஆம் வருடம் பிறந்த ஆண்களில் 80 சதவீத பேர்கள் இந்த போரில் உயிரிழந்தனர், என்ற கொடுமையான தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சிகப்பு ராணுவம் மேற்கொண்ட கற்பழிப்புகள்

சிகப்பு ராணுவம் மேற்கொண்ட கற்பழிப்புகள்

இரண்டாம் உலகப்போரின் போது, ஜெர்மன் நாட்டு பெண்களை கும்பல் கும்பலாக சிகப்பு ராணுவம் கற்பழித்தது. சிகப்பு ராணுவத்தினரால் இரக்கமே இல்லாமல் கிட்டத்தட்ட 25 லட்ச பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.

வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போர்

வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போர்

படையெடுத்து வந்த ஜெர்மன் வீரர்களுடன் ரஷியா சண்டையிட்ட ஸ்டாலின்கிராட் போர் தான் வரலாற்றில் அதிக இரத்தம் சிந்தப்பட்ட போராக கருதப்படுகிறது. 8 மாதங்கள் நடைப்பெற்ற இந்த போரில் கிட்டத்தட்ட 120,000 மக்கள் உயிரிழந்தனர்.

இரண்டாம் உலகப்போரின் நீண்ட போர்

இரண்டாம் உலகப்போரின் நீண்ட போர்

அட்லாண்டிக் போர் தான் இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற நீண்ட போராகும். 1936 ஆம் வருடம் ஆரம்பித்த இந்த போர் 6 வருடம் காலம் நீடித்து, 1945 வரை நடைபெற்றது.

ஸ்வஸ்திகா அடையாளம்

ஸ்வஸ்திகா அடையாளம்

ஸ்வஸ்திகா என்பது சமயஞ்சார்ந்த அடையாளமாகும். நல்ல எதிர்காலத்தை கொண்டு வருவதற்கான சின்னமாகும் அது. இந்த சின்னத்தை பல நாகரீகத்தில் கான முடிந்தது. அதில் கிரீஸ், சீனா, இந்தியா மற்றும் எகிப்து நாடுகளும் அடக்கம்.

U படகு பேரழிவு

U படகு பேரழிவு

நிரப்பப்பட்ட கப்பல்களை கொண்டு வருவதற்கு சிறந்த வழியாக கருதப்பட்டது U படகுகளின் பயன்பாடு. U படகுகளில் இருந்து போர் செய்த 40,000 பேர்களில் 8000 பேர்களுக்கும் குறைவானவர்கள் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய துன்பம்

அமெரிக்கர்களுக்கு மிகப்பெரிய துன்பம்

இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற பல்ஜ் போர் அமெரிக்கர்களுக்கு மிகக்கொடுமையான துன்பத்தை உண்டாக்கிற்று. கிட்டத்தட்ட 40.000 அமெரிக்கர்கள் அந்த போரில் உயிரிழந்தனர்.

யூதர்களின் மீதான பரிசோதனை

யூதர்களின் மீதான பரிசோதனை

இரண்டாம் உலகப்போரில் மிகவும் வெறுக்கத்தக்க நடந்த சம்பவமாக இது கருதப்படுகிறது. யூதர்களின் மீது மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது. உதாரணத்திற்கு, மலட்டுத்தன்மையின் தாக்கத்தை கான ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எக்ஸ்-ரேக்களால் தாக்கப்பட்டது. இந்த பரிசோதனைகள் கொடூரமான முறையில் நடைபெற்றது. மருத்தவ சோதனைகளுக்காக அவர்களின் தசைகளும் எலும்புகளும் வெட்டப்பட்டது. இப்படி மனிதநேயமற்ற பல சோதனைகளுக்கு யூதர்கள் பயன்படுத்தப்பட்டார்கள்.

அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்

அமெரிக்க பாதுகாப்பு பட்ஜெட்

1940 முதல் 1945 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில், அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு பட்ஜெட் 2 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இரண்டாம் உலகப்போரின் மிகவும் சுவாரசியமான தகவல்களில் இது ஒன்றாகும் என்பதில் சந்தேகமே இல்லை. இன்று நம்ப முடியாத அளவில், தன் பாதுகாப்பு பட்ஜெட்டிற்கு மட்டும் அமெரிக்கா 6000 பிலியன் டாலரை செலவழிக்கிறது.

முதல் போர் விமானங்கள்

முதல் போர் விமானங்கள்

முதல் போர் விமானங்களை உருவாக்கியது ஜெர்மன் நாடு. முதல் போர் விமானத்தை மெஸ்ஸர்ஷ்மிட் ME-262 என அழைத்தனர். இருப்பினும் ஜெர்மன் நாட்டு தோல்வியை மீட்பதற்கு முடியாமல் போனது.

அடால்ப் ஹிட்லரின் மருமகன்

அடால்ப் ஹிட்லரின் மருமகன்

இதோ உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்த போகும் இரண்டாம் உலகப்போர் பற்றிய மற்றொரு தகவல் - அடால்ப் ஹிட்லரின் மருமகனான வில்லியம் ஹிட்லர், இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்க கப்பல் படையில் பணி புரிந்து கொண்டிருந்தார்.

குழந்தைகளின் மரணம்

குழந்தைகளின் மரணம்

இரண்டாம் உலகப்போரின் மற்றொரு மிகப்பெரிய சோகம் என்னவென்றால், இந்த போரில் கிட்டத்தட்ட 15 லட்சம் குழந்தைகள் உயிரிழந்தனர். பேரழிவை ஏற்படுத்திய இந்த போரில் இறந்த 12 லட்ச குழந்தைகள் யூதர்களாவார்கள்.

இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Intriguing Facts About World War 2

In this article, we look at some interesting facts about World War 2. These thought provoking facts about World War 2 will give you an insight into the the happenings of the war in a nutshell. Let us now look at some fascinating facts about World War 2.
Desktop Bottom Promotion