For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகத்திற்கு இந்தியா கற்றுக் கொடுத்த 10 விஷயங்கள்!!!

By Babu
|

இந்த கட்டுரையை படிக்கும் முன், நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளியுங்கள். அது என்னவெனில், இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறீர்களா? ஆமெனில், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவற்றை படித்தால், ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால், இங்கு இந்தியாவிடமிருந்த உலக மக்கள் கற்றுக் கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். பலருக்கு இவைகளை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவற்றால் உலகில் உள்ள பல மில்லியன் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது.

உதாரணமாக, தற்போது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள மேற்கொள்ளப்படும் யோகா, இந்தியாவில் பிறந்தது தான். அதுமட்டுமல்லாமல், காதல் என்பதை உலகிற்கு புரிய வைத்ததும் இந்தியா தான். இதுப்போன்று நிறைய விஷயங்களை இந்தியாவிடமிருந்து மற்ற நாட்டு மக்கள் கற்றுக் கொண்டு பலன் பெற்று வருகின்றனர்.

இங்கு அப்படி இந்தியாவிடமிருந்து மற்ற நாட்டு மக்கள் கற்றுக்கொண்டவைகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மொழிகள்

மொழிகள்

உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் நிறைய மொழிகள் பேசப்படுகின்றன. அதிலும் 780 மொழிகள் இந்தியாவில் சரளமாக பேசப்படுகின்றன. எத்தனை மொழிகள் இருந்தாலும், மொழி வேற்றுமையின்றி அனைவரும் இந்தியர் என்ற எண்ணத்துடன், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். இது இந்தியாவில் இருந்து மற்ற நாட்டினர் கற்றுக் கொண்டவைகளில் ஒன்று.

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பத்தில் வாழ்வது சற்று சிரமமாக இருந்தாலும், கூட்டுக் குடும்பத்தில் வாழ்வதன் மூலம் கிடைக்கும் அன்பும், சந்தோஷமும் வேறு எங்கும் கிடைக்காது என்பதை உலகிற்கு காட்டியதும் இந்தியா தான்.

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம் என்பது இந்தியாவில் பிறந்த ஒரு பாரம்பரிய மருத்துவ முறை. இந்த முறையினால் நோய்களுக்கு சிகிச்சை அளித்து, குணப்படுத்த முடியும். இது மருத்துவ முறை மட்டுமல்லாமல், இந்த முறையானது இந்திய மக்களின் வாழ்க்கை முறையுடன் ஒன்றியிருப்பதால் தான், இந்தியர்கள் இன்றும் ஆரோக்கியமாகவும் வலுவுடனும் இருக்கின்றனர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தி, மற்றவர்களும் ஆயுர்வேத முறையைப் பின்பற்றுகின்றனர்.

புடவைகள்

புடவைகள்

ஃபேஷன் வரும் போகும். ஆனால் என்றும் மாறாத ஒரு உடை தான் இந்திய பெண்களின் பாரம்பரிய உடையான புடவை. இந்த புடவையை பெண்கள் அணிந்தால், அவர்களின் மீது மதிப்பும், மரியாதையும் எழும். மேலும் தற்போது அனைத்து வெளிநாட்டினரும் இந்தியாவின் பாரம்பரிய புடவையை அணிய விரும்புகின்றனர்.

வணக்கம்

வணக்கம்

ஒருவரைப் பார்த்ததும் மரியாதை செலுத்மும் விதமாக அக்காலத்தில் இரு கைகளை கூப்பி வணக்கம் செலுத்துவார்கள். இதை உலக மக்களுக்கு கற்றுக் கொடுத்தது இந்தியா தான்.

செஸ்

செஸ்

செஸ் என்னும் விளையாட்டில் உள்ள ராஜா, ராணி, மந்திரி போன்றவை இந்தியாவில் பிறந்தது தான். இது இந்தியாவில் இருந்து பெர்சியா, அரபு பின்னர் ஐரோப்பா என்று பரவி பிரபலமான ஒரு விளையாட்டாகிவிட்டது.

பூப்பந்தாட்டம்

பூப்பந்தாட்டம்

இந்தியர்களுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். இதனை ஆரம்பத்தில் இந்தியர்கள் விளையாட ஆரம்பித்து, பின் அது பல மில்லியன் மக்களால் விருப்பப்பட்டு விளையாடப்படும் விளையாட்டாகிவிட்டது.

உணவுகள்

உணவுகள்

பெரும்பாலான வெளிநாட்டவருக்கு இந்தியாவில் பிடித்தது என்றால் அது உணவுகள் தான். ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் மசாலா பொருட்கள், இந்த

உணவுகளின் சுவைக்கு அதிக மணத்தையும், ருசியையும் தருகிறது. மேலும் தற்போது வெளிநாட்டவர் பலரும் இந்திய மசாலாக்களைப் பயன்படுத்தி உணவுகளை சமைத்து சாப்பிடுகின்றனர்.

யோகா

யோகா

உடல், மனம் போன்றவற்றை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள செய்யப்படும் ஒருவகையான உடற்பயிற்சி தான் யோகா. இதுவும் இந்தியாவில் பிறந்தது தான். இந்த யோகாவை தற்போது உலகில் உள்ள நிறைய மக்கள் தினமும் பின்பற்றி வருகின்றனர்.

தியானம்

தியானம்

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், தியானம் அவசியம் செய்ய வேண்டும். இதுவும் உலகிற்கு இந்தியா கற்றுக் கொடுத்தவைகளில் ஒன்றாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things India Has Taught The World

From various rituals, foods, dresses, inventions, games there are many more things which each Indian citizen has contributed in some way or the other to a global culture. Here are 10 of the most amazing things India has taught the world. Take a look and feel proud to be an Indian:
Story first published: Thursday, March 20, 2014, 11:54 [IST]
Desktop Bottom Promotion