For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு பெண்ணும் கைப்பையில் வைத்திருக்க வேண்டிய 10 பொருட்கள்!!!

By Boopathi Lakshmanan
|

எதற்காகவும் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் உங்களுக்கான மந்திரம். இந்த மந்திரத்தை அடிப்படையாக கொள்ளும் போது, பணம் மற்றும் சாவியை மட்டும் வைக்கும் இடம் என்பதைத் தாண்டி நீங்கள் பயன்படுத்தும் பர்ஸ் வாழ்க்கையின் அடிப்படை விஷயமாகி விடுகிறது.

நீங்கள் வீட்டின் பாதியையே கைக்குள் வைத்திருந்தாலும் அல்லது எதுவாக இருந்தாலும் எளிமையாக, மென்மையாக கையாள வேண்டும் என்று இருந்தாலும், உங்களுடைய கைப்பையில் வைத்திருக்க வேண்டிய 10 பொருட்கள் உள்ளதை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பொருட்கள் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ளும் வகையில் உங்களை ஊக்கப்படுத்தும். இந்த கட்டுரையின் வழியாக அந்த 10 முக்கியமான பொருட்களைப் பற்றி தெரிந்து கொண்டு வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளுங்கள்.

மேலும், ஒரு விஷயத்தை வராமல் தவிர்க்க எடுக்கும் சிறு முயற்சியும் கூட, அந்த பிரச்னை வந்த பின்னர் சமாளிப்பதை விட எளிதாக இருக்கும் என்பதை உணருங்கள். இந்த அவசியமான 10 பொருட்களுடன் உங்களுடைய கைப்பையை எப்பொழுதும் தயாராக வைத்திருங்கள். இதன் மூலம் பாதுகாப்பு உணர்வுடனும், வெளியே செல்லும் போது தைரியமாகவும் இருக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லிப்ஸ்டிக்

லிப்ஸ்டிக்

ஒவ்வொரு பெண்ணுக்கும் இது தெரிந்த விஷயமாக இருந்தாலும், அவசியமான நேரங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த வண்ணத்திலான லிப்ஸ்டிக் ஒன்றை கைக்கு எட்டும் வகையில் வைத்திருப்பது நல்லது. லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உங்களுடைய முகம் வசீகரமான தோற்றத்தைப் பெறுகிறது. எனவே, ஒவ்வொரு நாள் கலையிலும் முழுமையான மேக்கப் போட நேரம் கிடைக்காத வேளைகளில், லிப்ஸ்டிக் ஆபத்பாந்தவனாக இருந்து அழகுக்கு உதவும்!

பணம்

பணம்

இந்த இடத்தில் குறிப்பிடப்படுவது ரூபாய் நோட்டுக்களை, கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளை அல்ல. தங்களுடைய பெண்கள் டேட்டிங் செல்லும் வேளைகளில், அது மோசமான வகையில் முடிவுக்கு வந்தால், அம்மாக்கள் கொடுத்தனுப்பும் 'மேட் மணி' உதவும். தாய்மார்கள் இந்த அளவிற்கு செய்யக் கூடிய வகையில் புத்திசாலிகள் தான். எனினும், கையில் பணம் தேவைப்படக் கூடிய வகையில் பல்வேறு சம்பவங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, கிரெடிட் அல்லது டெபிட் அட்டைகளுடன், குறைந்தபட்சம் 20 ரூபாயாவது பர்ஸில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.

டாம்பன்ஸ் அல்லது பேட்கள்

டாம்பன்ஸ் அல்லது பேட்கள்

இதனை பெண்கள் எதிர்கொள்ளத் தான் வேண்டும்; இயற்கையின் அழைப்பு நமக்கு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம். எனவே, பிரத்யோகமாக உங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் சில அட்டைகளை கையில் வைத்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான 'வைப்ஸ்'

குழந்தைகளுக்கான 'வைப்ஸ்'

உங்களுக்கு குழந்தைகள் இருந்தாலோ அல்லது இல்லாவிட்டாலும் கூடு, 'வைப்ஸ்'-களை கையில் வைத்திருக்க வேண்டும். அவற்றைப் பயன்படுத்த கண்டிப்பாக சந்தர்ப்பங்கள் ஏற்படும். அது போன்ற நேரங்களில் உங்களுக்கு ஒன்று தேவையா அல்லது இரண்டு தேவையா என்று யாருக்கும் தெரியாது

ஆஸ்பிரின் அல்லது டைலெனோல்

ஆஸ்பிரின் அல்லது டைலெனோல்

நீங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எத்தனை முறை தலைவலி வந்துள்ளது? நீங்கள் ஒரு மனிதராக இருப்பதால், சாலையோரத்தில் ஏதாவது வலி நிவாரணி கிடைக்குமா என்று பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் ஆஸ்பிரின், டைலெனோல் அல்லது வேறு ஏதாவது வலி நிவாரணியையும் உடன் வைத்திருங்கள்.

பேனா

பேனா

இது ஒரு பொதுவான விஷயமாக இருந்தாலும், ஒரு பேனாவோ அல்லது பென்சிலோ தேவை என்னும் போது பெண்கள் தங்களுடைய கனத்த கைப்பைகளை ஆழமாக தேடத் தொடங்குவார்கள். ஆந்நேரங்களில் கைகொடுக்கும் பொருளாக அவர்களுடைய ஐ-லைனர் இருக்கும். எனவே, ஒரு சில பேனாக்களை உங்களுடைய பர்ஸில் வைத்திருப்பதன் மூலம் தேவையை நிறைவு செய்து கொள்ள முடியுமல்லவா!

அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளுதல்

அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளுதல்

மீண்டும் ஒரு பொதுவான விஷயத்தைப் பற்றியே இங்கு குறிப்பிடுகிறோம். உங்களுடைய அடையாளத்துடன் கூடிய ஒரு அவசரகால தொடர்பு எண்ணை எப்பொழுதும் வைத்திருங்கள்; உங்களை தீவிரவாதி என்று தவறுதலாக நினைத்து விட்டால், யாரோ ஒருவர் உங்களுடைய அடையாளம் இதுதான் என்று கொண்டு வந்து காட்டத் தேவையில்லை. இது மட்டுமல்லாமல், நீங்கள் ஒரு விபத்தில் மாட்டிக் கொண்டாலோ அல்லது உங்களுக்காக பேச முடியாத நிலையில் இருந்தாலோ இந்த அவசரகால தொடர்பு தகவல் உபயோகமாக இருக்கும்.

மிளகு ஸ்பிரே

மிளகு ஸ்பிரே

நாம் வாழும் இந்த காலத்தில், பெண்கள் தங்களுடைய பாதுகாப்பிற்காக ஏதாவதொரு பொருளை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்காக ஒரு சிறு கத்தியையோ அல்லது மிளகு ஸ்பிரேவையோ பயன்படத்தலாம். மிளகு ஸ்பிரே நவீனமான ஆயுதமாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாததாகவும் உள்ளன. மேலும் வழியில் எதிர்ப்படும் கெட்ட எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து உங்களை காத்துக் கொள்ளவும் உதவுகின்றன.

ஹேண்ட் சானிட்டைஸர்

ஹேண்ட் சானிட்டைஸர்

நீங்கள் காய்கறி கடை அல்லது டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு செல்லும் போது கைகளில் இழுத்துச் செல்லும் அந்த வண்டி பலமுறை பயன்படுத்தப்பட்டதாகவும், சரியாக துடைக்கப்படாததாகவும் இருக்கும். அதே போல பணத்தை எண்ணும் போதும், தெரிந்தவர்களுக்கு கை கொடுக்கும் போதும் கைகளில் அசுத்தம் ஏற்படும். இது போன்ற பலப்பல காரணங்களுக்காக, ஹேண்ட் சானிட்டைஸர்களை உங்கள் கைகளில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அது உங்களை பாதுகாப்பதுடன், மற்றவர்களையும் பாதுகாக்கச் செய்து, நோய் பரப்பும் கிருமிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

சேஃப்டி பின்கள்

சேஃப்டி பின்கள்

நான் கீழே குனிந்து எழும் போது, என்னுடைய ஜாக்கெட்டில் ஒரு ஊக்கு இல்லையென்று உணர்ந்தால், அது எனக்கு அவமானமாக இருக்கும். வேறு ஒரு டாப் வாங்குவதற்கு இது ஒரு நல்ல காரணமாக இருந்தாலும், நீங்கள் வேலையின் நடுவில் இருக்கும் போது என்ன செய்ய முடியும். அதுவும் அடுத்த சில மணி நேரங்களுக்கு? எனவே, சேஃப்டி பின்களை உங்களுடைய பர்ஸில் வைத்திருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Things Every Woman Should Have In Her Purse

If being prepared for anything is your mantra, then you know that your purse is the vehicle by which you live your life – far more than just a place to stash your cash and keys. Let’s take a look at those must-haves so that you will be ready for anything that life throws your way.
 
Desktop Bottom Promotion