For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் வேலையை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்!!!

By Nithya Devi Muthuraman
|

உங்களின் உத்தியோகம் எவ்வளவு அற்புதமானது என்று நீங்கள் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருக்காவிட்டாலும், உங்களை சந்தோஷப்படுத்தக்கூடிய இத்தகைய உத்தியோகத்தைப் பெற உண்மையாகவே மிகுந்த அதிர்ஷ்டம் வேண்டும் என்று நீங்கள் அணுதினமும் நினைக்காவிட்டாலும் கூட, உங்களின் பணியை நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதைக் காட்டும் சில அறிகுறிகள் உங்களின் பிரியமானவர்களின் கண்களிலிருந்து தப்பாது.

எல்லா வகையிலும் திருப்தி அளிக்கக்கூடிய வேலை என்று எதுவும் கிடையாது. ஆனால் சில வேளைகளில், நீங்கள் மிகவும் நேசித்து செய்யக்கூடிய வேலையின் பலன்கள் உலகின் அனைத்து செல்வங்களையும் விட உயர்வானதாக உங்களுக்கு தோன்றக்கூடும்; அதனால் அந்த வேலையில் இருக்கக்கூடிய சில குறைபாடுகள் உங்களுக்கு பெரிதாகத் தெரியாது. நீங்கள் உங்கள் பணியை நேசிக்கிறீர்கள் என்பதற்கான முக்கியமான 10 அறிகுறிகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

10 Signs You Love Your Job

மனதிற்கு பிடித்த வேலையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்:

* வேலை இடத்தில் உங்களுக்கு நண்பர்கள் இருப்பர். நாம் விரும்பும், பெரிதாக மதிக்கும் நபர்களுடன் வேலை பார்ப்பதையே நம்மில் பலரும் விரும்புவோம்.

* உங்களுடன் பணியாற்றும் சகாக்களுக்கு உதவுவது உங்களுக்கு நிறைவாக இருக்கும். அவர்களின் வெற்றியை உங்களின் வெற்றியாக நீங்கள் கொண்டாடி மகிழ்வீர்கள்.

* அதற்குள் 4 மணி ஆகிவிட்டதா என்று நீங்கள் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். மனதிற்கு நிறைவானதாக நீங்கள் உணரும் உங்கள் வேலையில் மூழ்கிப் போவதினால் நாட்கள் பறந்தோடிச் செல்வதும் உங்களுக்கு தெரியாது.

* உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் உங்கள் பணிகள் முடங்கி உங்களை நம்பி அந்த பணிகளை ஒப்படைத்தவருக்கு சிரமமாகி விடுமே என்று நீங்கள் சங்கடப்படுவீர்கள். நீங்கள் உடல் தேறி வரும் வரையில் உங்களின் பணிகளை எடுத்துச் செய்ய பலபேர் ஆவலாக இருப்பார்கள் என்று தெரிந்தும், உங்களால் யாருக்கும் சிரமம் ஏற்பட்டு விடக்கூடாது என்று நீங்கள் எண்ணுவீர்கள்.

* வார இறுதிகள் திங்கட்கிழமைக்கான சக்தியை பெற உதவக்கூடிய ஒரு ஓய்வுக்காலம் என்றே உங்களுக்கு தோன்றும். உங்கள் வேலையை நீங்கள் உயர்வாக எண்ணுவதால் உங்களுக்கு "திங்கட்கிழமைகளுக்கே உண்டான சோர்வு" என்பதே ஏற்படாது.

* எவ்விதமான பெருமையையும் அடுத்தவருடன் பகிர்ந்து கொண்டு மகிழ்வதற்கான உத்திகளை நீங்கள் நாடுவீர்கள். உங்கள் தகுதியை நிரூபிப்பதற்கு உங்கள் பெருமையை உயர்த்திப் பிடிக்க வேண்டியது அவசியம் என்று உங்களுக்கு ஒருபோதும் தோன்றாது. வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும் என்றே நீங்கள் விரும்புவீர்கள்.

* "மிகவும் மெனக்கெட்டு" வேலை செய்வதே உங்களின் பணியாற்றும் பாணி என்றாகிவிடும். அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி மிகச் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று நீங்கள் எண்ணுவதும் இயற்கையே.

* பணியிடத்தில் ஏற்படக்கூடிய சில கோபதாபங்களையும் நீங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள். பணி மற்றும் பணியிடச்சூழல்கள் எப்போதும் மிகச்சரியாக இருப்பதில்லை என்ற நிதர்சனத்தை எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருப்பீர்கள். ஆனால் நீங்கள் பெரிய விஷயங்களில் ஈடுபாடு கொண்டிருப்பதினால், அற்பமான விஷயங்கள் உங்கள் மனதை அழுத்தாது.

* பிரச்சனைகளைப் பற்றி புலம்பிக் கொண்டிருக்காமல், அவற்றிற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் நீங்கள் கவனம் செலுத்துவீர்கள். வாட்டர் கூலர் அல்லது காபி மெஷின் பற்றி புகார் கூறிக் கொண்டிருக்காமல், நீங்களும் உங்கள் நண்பர்களும் எப்படி உங்கள் பணியிடத்தை மேலும் மெருகேற்றலாம் என்றும், அனைத்து அலுவல்களும் தங்குதடையின்றி சுமுகமாக நடப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றியும் விவாதிப்பீர்கள்.

* நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதன் உண்மையான தாத்பரியத்தை உணர்ந்து, அது என்னவிதமான மாற்றத்தை உண்டாக்கக்கூடும் என்பதில் தெளிவாக இருப்பீர்கள். நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் எவ்வாறு உங்கள் பணியிடத்தை சிறப்பானதாக மாற்றும் என்பதை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவதில் உங்கள் கவனத்தை செலுத்துவீர்கள்.

English summary

10 Signs You Love Your Job

You may not like bragging all day about how wonderful your job is or how lucky you are that you are doing something you really enjoy, but you should know that there are still a few very telling signs you love your job that won’t pass unnoticed among your loved ones.
 
Desktop Bottom Promotion