For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியர்கள் மழைக்காலத்தில் சாப்பிட விரும்பும் 10 சுவையான உணவுகள்!!!

By Boopathi Lakshmanan
|

கோடைக்காலத்தின் நடுவில் இந்தியாவில் சுவையான தீனிகளை சாப்பிடுவது ஒரு இராஜ அனுபவமாக இருக்கும். அது மெதுவாக தூறல் விழும் நேரமாக இருந்தாலும் சரி அல்லது இடியுடன் கூடிய மழையாக இருந்தாலும் சரி, இந்தியாவில் கோடைகாலத்தில் பெய்யும் மழையுடன், சுவையான உணவுகள் சாப்பிடுவது மிகச்சிறந்த அனுபவமாகவே இருக்கும்.

இங்கு மழைக்காலத்தில் இந்தியர்கள் சாப்பிட விரும்பும் 10 சுவையான உணவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். இவற்றில் உங்களது விருப்பான உணவு என்னவென்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேகி

மேகி

இதமாகவும், பசியுடனும் இருக்கும் நேரத்தில் மழைத்துளி எட்டிப் பார்த்தால் மசாலா மேகி உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். இதனை சூப் ஆகவோ அல்லது இதனுடன் காய்கறிகளை சேர்த்து எளிமையாக சாப்பிட்டுப் பாருங்கள்.

பக்கோடா

பக்கோடா

தெரு முனையில் மழைத்தண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், உள்ளூர் கடைக்காரர் சுவையாகவும், காரமாகவும் விற்றுக் கொண்டிருக்கும் பக்கோடாவை சாப்பிட இந்தியர்கள் விரும்புவார்கள்.

மசாலா டீ

மசாலா டீ

மழை கொண்ட மாலை நேரத்தை மேலும் அருமையான பொழுதாகச் செய்யும் விஷயமாக இருப்பது, உறுதியான மற்றும் மனம் மயக்கும் மணம் கொண்ட மசாலா டீ தான். மசாலா டீயுடன் பக்கோடாக்களையும் சேர்த்துக் கொள்வதை எந்த இந்தியரும் மறுப்பதில்லை.

கச்சோரி

கச்சோரி

மழை வரப்போகிறது என்று வெளியில் உள்ள தங்களுடைய பூனைகளும், நாய்களும் சொல்வதைக் கேட்டு விட்டு, வரப்போகும் மழைய எதிர்கொள்ள ஒரு பிளேட் கச்சோரி வாங்கி வைத்திருப்பார்கள் சுவையுணர்ந்த இந்தியர்கள். மசாலா கச்சோரியிலிருந்து, ராஜ் கச்சோரி வரை என பல்வேறு வகையான சுவையான கச்சோரிகள், உங்களுடைய வயிற்றுக்கு அற்புதமான விருந்தளிக்க காத்துக் கொண்டிருக்கும்.

சமோசா

சமோசா

இந்தியர்களின் ஆல்-டைம் பேவரைட் நொறுக்குத் தீனியான சமோசாவை, மழைத்துளிகள் மெல்ல விழத் தொடங்கும் நேரத்தில் அள்ளி எடுத்து, சூடாக சாப்பிடுவது இந்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் கருமேகங்கள் வரும் போது, சமோசாவின் மணம் மயக்கும்.

சூப்

சூப்

சீரியஸாக உணவுகளை முழுவதும் செய்து சாப்பிடுபவரோ அல்லது ரெடிமேட் ஆக சமைத்து விற்கும் உணவை வாங்கி பதம் பார்ப்பவரோ என யாராக இருந்தாலும், ஒரு கோப்பையில் சுடச்சுட சூப் ஊற்றிக் கொண்டு, டிவி அல்லது லேப்டாப்பில் அமர்ந்து கொண்டு வெளியே பெய்யும் மழையை இரசிப்பது இந்தியர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

மோமோஸ் (Momos)

மோமோஸ் (Momos)

எந்தவொரு பருவத்திலும் சுவையான உணவாக இருப்பது தான் மோமோஸ். எனினும், ஒரு பிளேட்டில் சூடாக மோமோஸ்களுடன், பூண்டு சாஸை ஊற்றிக் கொண்டு, மிளகாய் சட்னியை உடன் சேர்த்துக் கொண்டால், மழைக்காலத்தை இரசிக்க இந்தியர்கள் தயாராகி விட்டார்கள் என்று அர்த்தம். அதுவும், மழைக்காலத்தில் மோமோஸ்-உடன் சிக்கன் சூப்பையும் சேர்த்துக் கொள்வார்கள்.

வறுத்த கோழி

வறுத்த கோழி

வறுத்தெடுத்த கோடை கால வெயிலுக்குப் பிறகு வரும் மாலை நேர மழையின் போது, தந்தூரி சிக்கனை சாப்பிட்டு மகிழ்ச்சியை கொண்டாடுவது பெரும்பாலான இந்திய ஆண்களின் பொழுதுபோக்கு. காரமான வறுத்த கோழியுடன், வெங்காயத்தை வட்ட வடிவில் வெட்டி சாப்பிடும் போது, அந்த மழைக்கால மாலைப்பொழுது சொர்க்கம் போல் இருக்கும்.

ரம்

ரம்

வெளியே மழை பெய்து கொண்டிருக்கும் போது, உள்ளே இன்பம் தரக்கூடிய கிங் ஆஃப் குட் டைம்ஸ் உணவை நாங்கள் மறந்து விடவில்லை. இந்தியாவில் குளிர்காலத்திற்காக காத்திருந்து, பழைய கருப்பு ரம்மை வாங்க விரைந்து செல்வது பழக்கமாக இருந்தாலும், மழை பெய்யும் கோடைக்கால மாலை வேளைகளிலும் அதே ரம்மின் துணை இந்தியர்களுக்கு தேவைப்படும்.

மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு

இறுதியாக சொல்லப்பட்டிருப்பது என்னுடைய பேவரைட் உணவாகும். கோடைக்காலத்தில் இறைச்சியை சாப்பிடுவது, எந்தவொரு இந்தியரின் செரிமானத்திற்கும் சவால் விடும் விஷயமாக இருந்தாலும், அதே கோடைக்காலத்தில் இலேசாக மழை பெய்யத் துவங்கி விட்டால், அரிசி சோற்றுடன் மட்டன் குழம்பும் மனம் மணக்கும்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Delicious Foods Every Indian Craves For On A Rainy Day

One of the best times to pig out royally is during the rainy days in the middle of Indian summer. Whether it is a slight drizzle or a torrential downpour, summer rains in India is synonymous with some of the most scrumptiously delightful foods-and we list them out for you here!
Desktop Bottom Promotion