For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடைமுறையில் இருக்கும் சில விசித்திரமான மருத்துவ கண்டுபிடிப்புகள்!!

By Boopathi Lakshmanan
|

மிகவும் புதிரான பல மருத்துவ கண்டுபிடிப்புகளையும் மற்றும் அவை அற்புதங்களை நிகழ்த்துவதில்லை என்றும் பல கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். இவை மற்றொரு கண்டுபிடிப்பின் விளைவாகவோ அல்லது ஒரு விபத்து போலவோ இயற்கையாக கண்டறியப்படுகின்றன. மருத்துவ ரீதியில் பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளும் போது, எதிர்பாராவிதமாகவே இது போன்ற பல கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இது போன்று பல அற்புதமான மருத்துவ கண்டுபிடிப்புகள் நிகழ்கின்றன. அவற்றை அறிந்து கொள்வது மிகவும் ஆர்வமூட்டுவதாக இருக்கும்.

ஆண்களின் ஆண்மைத் தன்மையை எழுச்சி பெற வைக்கும் வயாகரா எதிர்பாராவிதமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து என்பது உங்களுக்குத் தெரியுமா? உண்மையில் வயாகரா முற்றிலும் மாறுபட்ட காரணங்களுக்காக ஆய்வுகள் செய்யப்பட்டு வந்த மருந்தாகும். Pfizer என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் மார்பக சிகிச்சையின் போது இரத்த நாளங்களுக்கு ஓய்வு கொடுக்கும் நோக்கத்தில் வயாகராவை தயாரித்துக் கொண்டிருந்த நேரத்தில், அதன் பக்க விளைவாக ஆண்களின் உறுப்புக்கு விறைப்புத் தன்மை கிடைப்பதை தற்செயலாக கண்டறிந்தது.

Weird Medical Inventions That Work

சுறாக்களில் கண்டறியப்பட்ட வைரஸ் கொல்லி, புற்று நோயை குறைக்கும் தன்மையுடைய மசாலா பொருட்கள், எரிச்சலூட்டும் குடல் நோயை குணப்படுத்தும் சிறிய மாத்திரை போன்றவை இது போன்று தற்செயலாக கண்டறியப்பட்ட முதன்மையான மருத்துவ கண்டுபிடிப்புகளாகும். கடினமான பல்வேறு முயற்சிகளாலோ அல்லது முழுமையான குருட்டு அதிர்ஷ்டத்தாலோ கண்டறியப்பட்ட இந்த மருந்துகள் அவற்றின் அவற்றின் மருத்துவ குணங்களுக்காக காப்புரிமைகளும், அறிவுசார் உரிமைகளும் பெறப்பட்டு அந்த கண்டுபிடிப்பாளர்களை கோடிகளில் புரள வைத்துள்ளன.

இது போன்ற வித்தியாசமான மருத்துவ கண்டுபிடிப்புகளை அறிய தொடர்ந்து படியுங்கள்.

ஆண்களின் மலட்டுத்தன்மைக்கு சிகிச்சையளிக்கும் ஓடோராண்ட்ஸ் (Odorants)

ஆண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் வயாகராவிற்கு மாற்றாக வேறொரு மருந்தைக் கண்டுபிடித்து விட்டு அதற்கு காப்புரிமை கோரியிருக்கிறார் ஆலன். ஆர். ஹிர்ஸ்க் என்பவர். இந்த மருந்தை முகர்ந்து பார்த்தாலே போதும், நீங்கள் அதற்குத் தயார்! இந்த கண்டுபிடிப்பாளர் லாவண்டர் மற்றும் பூசணிக்காய், டோனாட், அதிமதுர செடி வகை ஆகியவை இந்த விஷயத்திற்கு மிகவும் திறமையுடன் உழகைகின்றன என்று பரிந்துரைக்கிறார்.

மைய இயக்கு விசையைக் கொண்டு குழந்தையின் பிறப்பை கண்டறியும் கருவி

1965-ம் ஆண்டு ஜார்ஜ் மற்றும் சார்லொட்டே ப்ளான்ஸ்கி ஆகியோரால் காப்புரிமை கோரப்பட்ட மைய இயக்கு விசை அட்டவணையைக் கொண்டு, குழந்தையை பிறக்க வைக்கச் செய்ய முடியும்.

நெற்றிக்கு சப்போர்ட்!

சுவற்றுக்கு நேராக நிற்கும் போதோ, சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது ஷவரின் கீழ் குளிக்கும் போதோ குளிப்பவரின் முன் நெற்றியை பாதூகாக்கும் பொருட்டாக கண்டறியப்பட்ட ஒரு கருவிக்காக எரிக் டி என்பவர் காப்புரிமை கோரியுள்ளார்.

விறைப்புத் தன்மைக்கான வயகரா

மார்பக நோய் சிகிச்சையின் போது இரத்த நாளங்களுக்கு ஓய்வு கொடுப்பதற்காக இந்த மருந்தின் பரிசோதனை தொடங்கப்பட்டது. இதன் பக்க விளைவாக தோன்றிய ஆணுறுப்பின் விறைப்புத் தன்மையின் காரணமாக, இன்றைய சந்தையில் மிகவும் அதிகமாக விற்கப்படும் மருந்தாக இது உள்ளது.

நினைவுபடுத்தும் மற்றும் செயல்படுத்தும் கருவி

ரூபர்ட் டபிள்யூ என்பவரால் காப்புரிமை பெறப்பட்ட இந்த கருவி குழந்தைகள் தங்களுடைய பிரேஸ்களை அணிந்து கொள்ளச் செய்யுமாறு நேரத்தை காட்டும் வகையில் ஒரு அலாரத்தை அவர்களின் வாயில் வைத்து விடுவார்கள். இந்த பிரேஸ்களில் உள்ள காந்தம் அவற்றை மூட வைக்க உதவுகிறது.

ஈறுகளுக்கு பயிற்சியளிக்கும் கருவி

வாய்க்கு பயிற்சியளிக்கும் கருவியாக கண்டுபிடிக்கப்பட்ட இதற்கு காப்புரிமை பெற்றிருப்பவர் சார்லஸ் ஜி புர்டி என்பவராவார். இந்த தகடு பயன்படுத்துபவரின் பற்கள் மற்றும் ஒரு ஸ்பிரிங் அல்லது சுவற்றுடன் உளள் ஒரு ஸ்பிரிங்குடன் அல்லது அதற்கு ஏற்ற தாங்கி ஆகியவற்றிற்கு இடையில் செருகப்படும். நமது தலையில் ஏற்படும் அசைவுகளால் இந்த கருவிக்கு சிறிய அளவிலான அதிர்வுகளும், தூண்டுதல்களும் ஏற்பட்டு ஈறுகளுக்கு பயிற்சி கிடைக்கத் துவங்கும்.

சாப்பிடுவதை தடுக்கும் முகமூடி

டையட்டை பராமரிப்பதற்கு நேரடியாக உதவும் கருவியாக இது உள்ளது. இது உங்கள் வாயை மூடி வைக்கும். தோடர்ச்சியாக பின்னப்பட்டிருக்கும் ஊக்குகள், ஒயர்கள், நாடாக்கள், கண்ணிகள் மற்றும் வாயை மூடும் கருவி ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கருவி உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்களை விட, மிருகங்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும் எனலாம். ஆனால், இந்த கருவியை ஒவ்வொருவரின் முகத்திற்கும் ஏற்றவாறு பொது இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

English summary

Weird Medical Inventions That Work

Every year many such wonderfully weird medical inventions take place and it is interesting to know them. Let us take a look at few weird medical inventions that seem to work.
Desktop Bottom Promotion