For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனதார விமர்சிக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

நீங்கள் யாரையாவது சரிப்படுத்த வேண்டும் அல்லது அறிவுரை தர வேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்களா? மனிதர்களை விமர்சனம் மூலம் திருத்துவது என்பது ஒரு கலை. நேரடியாக தாக்குவதையோ, மறைமுகமாக பேசுவதையோ எதிர்முனையில் இருப்பவர்கள் எப்பொழுதும் விரும்புவதில்லை. இதனால் மனஸ்தாபங்களும், வேறுபாடுகளும் தான் மிஞ்சும். அதுவும் இப்போதைய கார்ப்பரேட் உலகத்தில், விமர்சனம் என்பது கூர்மையான கத்தி போல பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் அடக்கமும், அமைதியும் கலந்திருக்க வேண்டும்.

நீங்கள் விமர்சிக்கும் முன்னர் முழு சூழ்நிலையையும் தரவாக தெரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்பட வேண்டும். மிகவும் சிறந்த விமர்சனத்தை கொண்டு வருவது கடினமான காரியமாகும். இங்கே மற்றவர்களை பாதிக்காமல் மனதார விமர்சிக்கும் சில வழிமுறைகளை உங்களுக்காக வழங்கியுள்ளோம். அவை கீழே தரப்பட்டுள்ளன:

Simple Ways To Criticise Gracefully

1. அமைதி தேவை - விமர்சனம் என்பது எப்பொழுதும் கேட்பவரின் மேல் கடுமையாகவும், ஆக்ரோசத்துடனும் பாய்வதாக இருக்க வேண்டியதில்லை. இவ்வகையான விமர்சனங்கள் எதிர்முனையில் உள்ள மனிதரை மட்டம் தட்டுவதாகவும், நம்பிக்கை இழக்கத் செய்வதாகவும் தோற்றமளித்து, அவரை தன்னுடைய வேலை கொஞ்சம் கூட சரியில்லை என்று எண்ணச் செய்து விடும். மாறாக, அமைதியான மற்றும் மென்மையான வார்த்தைகளைக் கொண்டு விமர்ச்சிக்கும் போது, அதைக் கேட்கும் மனிதர் நேர்மறை எண்ணத்துடன் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள வைத்து, அவரை நல்வழிப்படுத்தும். அமைதியான வார்த்தைகள் ஊக்கத்துடன் செயல்படவும் செய்யும்.

2. சூழலை புரிந்து கொள்ளவும் - விமர்சனம் செய்யத் துவங்கும் முன்னர் என்ன வேலை செய்யப்பட்டுள்ளது என்று பூரணமாக தெரிந்து கொள்வது நலம். சில நேரங்களில் அந்த வேலை முழுமையடையவோ அல்லது திருப்திகரமாகவோ இல்லையென்று தோன்றும். இந்நேரங்களில், மனதார விமர்ச்சிக்கும் பொருட்டாக சாதாரண வார்த்தைகளை பயன்படுத்துங்கள், அதாவது சூழலை புரிந்து கொண்டு, அதற்கேற்ப எதிர்காலத்தில் தவறுகளை களைய என்ன செய்ய வேண்டும் என்று விமர்சனம் செய்யுங்கள்.

3. யூகங்கள் வேண்டாமே - நீங்கள் நல்ல மற்றும் பெருமை மிக்க விமர்சனங்களை தர நினைத்தால் யூகங்களை மறந்து விடுங்கள். விமர்சனங்களுக்காக யூகங்களின் துணையை நாட வேண்டாம். விமர்சனங்கள் அடிப்படை இல்லாமலும், மேலோட்டமாகவும் இருக்கக் கூடாது. செய்யப்படும் ஒவ்வொரு வேலைக்கும் தொடர்புடைய விமர்சனங்கள் அல்லது கருத்துக்கள் உள்ளன. ஆக்ரோசமான மற்றும் அடிப்படையில்லாத விமர்சனங்களால் உங்களுடைய விமர்சனம் மிகவும் தவறான ஒரு விஷயமாக கருதப்படும். எனவே, எப்பொழுதும் உண்மைகளை கூர்ந்து கவனித்து, யூகங்களுக்கு இடமளிக்காத வகையில் விமர்சனங்களை செய்வதே சிறந்த பணியாக இருக்கும்.

4. நேரடியாக இருக்கட்டும் - ஒரு விஷயத்தை விமர்ச்சிக்க மிகவும் சாதாரணமான வழியாக இருப்பது அதை நேரடியாக சொல்வது தான். எதிரில் உள்ள நபரை எந்த அளவுக்கு நீங்கள் குழப்புகிறீர்களோ, அந்த அளவிற்கு உங்கள் விமர்சனம் சிக்கலானதாக தோற்றமளிக்கும். யாருடைய பணியையாவது விமர்சனம் செய்தால் அதை நேரடியாகவும், குறிப்பிட்டும் சொல்லப் பழகுங்கள். மேலும், நீங்கள் விமர்சனம் செய்யும் போது மிகவும் ஆக்ரோசமாகவும், கடுமையாகவும் விமர்சனம் செய்யக் கூடாது என்பதில் கவனமாக இருக்கவும். உங்களுடைய விமர்சனம் எப்பொழுதும் ஆக்கப்பூர்வமாகவும், புதுமையாகவும் இருக்க வேண்டும் மற்றும் மற்றவர்களை பாதிக்கும் வகையில் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த விமர்சனம் அனைவராலும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

5. இரண்டு பக்கங்களையும் குறிப்பிடவும் - விமர்சனம் எப்பொழுதும் புகழ்ச்சியுடன் கலந்தே வெளி வர வேண்டும். உதாரணமாக, நீங்கள் ஒரு கட்டுரையை விமர்சனம் செய்தால், அதன் எதிர்மறை கருத்துக்களை குறிப்பிடுவதுடன், அதிலுள்ள நல்ல கருத்துக்களையும் குறிப்பிடுவது அவசியமாகும். இதுதான் மனதார விமர்சனம் செய்யும் எளிய வழியாகும். இவ்வகையான விமர்சனங்கள், நீங்கள் யாரை விமர்சனம் செய்தீர்களோ அவர் தன்னுடைய வேலை மற்றும் தரத்தை மேம்படுத்த உதவும். எனவே, வெறும் எதிர்மறை கருத்துக்களை மட்டுமே கொண்டு விமர்சனம் செய்வதால் எந்தவொரு நல்ல பலனும் விளையப் போவதில்லை என்பதை உணர வேண்டிய நேரம் இது. விமர்சனம் மற்றும் பாராட்டு இரண்டும் சம அளவில் கலந்திருக்க வேண்டும்.

இவையெல்லாம் நல்ல மற்றும் ஆரோக்கியமான விமர்சனங்களை வெளியிட உதவும் சில குறிப்புகளே. விமர்சனம் செய்வதன் மூலம் நீங்கள் உதவவும், புரிந்து கொள்ளவும் செய்ய வேண்டும். விமர்சனத்தின் பணி என்பது மற்றவருடைய குறைகளை சுட்டிக் காட்டுவது மட்டுமே அல்ல. விமர்சனங்கள் என்பதை ஒருவர் தன்னுடைய தவறுகளை உணரச் செய்வதாகவும், அந்த தவறுகள் மீண்டும் ஏற்படாவண்ணம் திருத்திக் கொள்ளச் செய்வதாகவும் இருக்க வேண்டும். விமர்சனத்தின் மூலம் தேவையான முடிவுகளுடன் வேலைகள் முடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், தடை செய்யப்படுவதை அல்ல! யாராக இருந்தாலும் விமர்சனங்களை மனதாரவும், தாழ்மையுடனும் சொல்லப் பழகுங்கள்.

English summary

Simple Ways To Criticise Gracefully

To criticise you should first gracefully without hurting now the whole situation and then accordingly take actions. It is very difficult to become a good critic. here are many simple ways to criticise gracefully without hurting any sentiments or emotions. Some of such simple ways to criticise gracefully are discussed here.
Desktop Bottom Promotion