For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாண்டா கிளாஸ் பற்றிய கட்டுக்கதைகள்!!!

By Ashok CR
|

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே சந்தோஷம், மகிழ்ச்சி, குடும்ப குதூகலம், பரிசுகள் மற்றும் நம் அனைவருக்கும் விருப்பமான சாண்ட கிளாஸ் என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவரை பார்த்து குழந்தைகள் ஆனந்தப்படுவதும் ஒவ்வொரு வருடமும் அவரை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதும் வாடிக்கையான ஒன்றே. அனைவரையும் மகிழ்வித்து சிரித்த முகத்துடன் விரும்பாத குழந்தைகளே இருக்க முடியாது. அதே போல் அவர் அணிந்திருக்கும் சிகப்பு மற்றும் வெண்ணிறம் கலந்த ஆடை கிறிஸ்துமசுக்கு ஒரு அடையாளமாகவே மாறி விட்டது.

சரி, இந்த சாண்டா என்பவர் யார், எங்கிருந்து வந்தார் என்று யாருக்காவது தெரியுமா? நம்மில் பல பேருக்கு அவர் உண்மையா அல்லது கற்பனையா என்பதே தெரியாது. சரி சாண்ட கிளாஸை பற்றிய சில புகழ் பெற்ற கட்டுக்கதைகளை பற்றி இப்போது பார்க்கலாமா? மேலும் விண்ணில் மான்கள் பூட்டிய வாகனத்தில் அவர் எப்படி பயனிக்கிறார் என்பதையும் அறிந்து கொள்வோமா?

Myths about Santa Claus

துருக்கியிலிருந்து வந்தவர் தான் சாண்ட கிளாஸ்

உண்மையோ பொய்யோ, ஆனால் நம் சாண்டாவிற்கு மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த புனிதர் நிகோலஸின் உருவ ஒற்றுமை இருப்பதாக நம்பப்படுகிறது. மைராவை சேர்ந்த இந்த பிஷப் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் நல்ல மனதுடையவர் என்று அறியப்படுகிறது. இந்த பிஷப் இறந்த மூன்று குழந்தைகளை மீண்டும் உயிர் பெறச் செய்ததால் இவருக்கு அபூர்வ சக்தி இருந்ததாக நம்பப்படுகிறது.

சாண்டாவின் உடையை வடிவமைத்தது யார்?

சாண்டா கிளாஸ் அணிந்திருக்கும் சிகப்பு மற்றும் வெண்ணிற ஆடையை நாம் அனைவரும் விரும்பாமல் இருக்க முடியாது. இந்த உடையணிந்து அவர் அனைவருக்கும் ஒரு சிகப்பு மூட்டையிலிருந்து பரிசுகளை வாரி வழங்குவதையும் நாம் அறிவோம். ஒரு முன்னணி குளிப்பான நிறுவனம் தன்னுடைய விற்பனை துறை மூலம் இந்த சிகப்பு மற்றும் வெண்மை கலந்த ஆடையை விளம்பரப்படுத்தியது. இது பல பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வடக்கு துருவத்தில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து தான் சாண்டாவிற்கு இந்த உடை கிடைக்கிறது என்று இன்றும் நம்பப்படுகிறது.

சாண்டா கிளாசும்... அவருடைய பரிசுகளும்...

எல்ப் எனப்படும் தெய்வீக சக்தியுள்ள மனிதர்களுடன் சேர்ந்து வடக்கு துருவத்தில் இந்த பரிசுகளை தயார் செய்கிறார் சாண்டா கிளாஸ் என்று நாம் பல படங்களில் பார்த்தால் அதையே நம்பவும் தொடங்கி விட்டோம். அங்கே தான் இந்த பரிசு பொருட்களை தயாரித்து, வண்ணம் தீட்டி பேக் செய்யப்படுகிறது என்றும் நம்பப்படுகிறது. உண்மையை சொல்லப் போனால் 1890-ள் லூயிஸ் மோ என்ற எழுத்தாளர் சாண்டாவையும் எல்ப்களை பற்றியும் அவர்கள் பரிசுகள் தயாரிப்பதை பற்றியும் விவரித்துள்ளார். அது 'ஜூல்மண்டேன்ஸ் போக்' என்ற புத்தகமாகும்.

மான்களை கொண்டு பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தை பயன்படுத்தும் சாண்டா: உண்மையா கற்பனையா?

சிறப்பு வாய்ந்த பறக்கும் மான்களை கொண்டு பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தை பயன்படுத்தி தான் சாண்டா கிளாஸ் பரிசு பொருட்களை விநியோகம் செய்கிறார். மான்களால் பறக்க முடியும் என்று நிரூபிக்க பட முடியவில்லை. ஆனால் அவைகளால் அது முடியும் என்று கற்பனை செய்து கொள்ளப்பட்டது. சாண்டா இப்படி மான்களை கொண்டு பயணிப்பது ஆடுகளை வாகனமாக கொண்டு தார் ஓட்டிய கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது என்றும் சிலர் கூறுகின்றனர்.

சாண்டாவிற்கு உண்மையிலேயே கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் தொடர்பு உள்ளதா?

ஒவ்வொரு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போதும் சாண்டா கிளாசை சந்திப்பதற்கும் பரிசுகளை பெறுவதற்கும் குழந்தைகள் ஆவலுடன் காத்திருப்பார்கள். கிறிஸ்துமஸ் என்பது இயேசு பிரானின் பிறப்பை குறிக்கும் பண்டிகையாகும். சாண்டாவிற்கும் இயேசுவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. சாண்டாவுடைய பூர்வீகம் இன்னமும் கூட சரிவர தெரியவில்லை. புனிதர் நிகோலஸின் உருவ ஒற்றுமை மட்டுமே நமக்கு தெரிந்த ஒரே தகவல். மேலும் இயேசு வாழ்ந்த காலத்திற்கும் புனிதர் நிகோலஸ் வாழ்ந்த காலத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

English summary

Myths about Santa Claus

Do we really know who Santa is or from where does he come! Most of us are not even aware whether he is real or not. Here we discuss some of the popular myths about Santa Claus and know how he can fly in the sky with his reindeers.
Desktop Bottom Promotion