For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எதிர்மறையான மனப்பான்மை உள்ளவரா நீங்க? அதை அழிக்க இதோ சில எளிய வழிகள்!!!

By Super
|

உங்கள் மீது விழும் திறனாய்வுகளால் நீங்கள் அடிக்கடி வருத்தத்துக்கு உள்ளாகுறீர்களா? உங்களுக்கு எப்போதுமே திறனாய்வுகள் மட்டுமே மனதில் நிற்கிறதா? உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லையா? இந்த பிரச்சனைகள் அனைத்தும் உங்களுக்கு உள்ளதா? அப்படியானால் உங்களுக்கு எதிர்மறையான மனப்பான்மை ஏற்பட போவது இயற்கை தான். இப்படிப்பட்ட மனப்பான்மை ஏற்படும் போது இந்த உலகமே உங்களுக்கு எதிராக செயல்படுவதை போல் உங்களுக்கு தோன்றும். நீங்கள் தனிமை படுத்தப்பட்டதை போல் உணர்வீர்கள். இந்த மாதிரி வேளையில் தான் உங்கள் சிந்தனைகளின் மேல் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இந்த நிலை நீடித்தால் ஒரு நாள் நீங்கள் யாரை பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் காத்த தொடங்குவீர்கள். வெகு விரைவிலேயே வேலையில் இருந்து தூக்கி எறியப்படுவீர்கள். வாழ்க்கையே கந்தல் கோலமாகி விடும். அனைத்துமே எதிர்மறையாக நடக்கத் தொடங்கி விடும். வாழ்க்கையில் உள்ள அழகான விசயங்களை எல்லாம் இழக்கத் தொடங்குவீர்கள். இவையனைத்துமே உங்களின் எதிர்மறையான மனப்பான்மையாலேயே ஏற்படும். இருப்பினும் உங்களின் எண்ணம் மற்றும் செயல்களில் கவனம் செலுத்தினால் இவ்வகையான எதிர்மறையான மனப்பான்மையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். வாழ்க்கையில் நல்லதொரு மனப்பான்மையை வளர்க்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சமநிலையான எண்ணத்தோடு விளங்குவது மிகவும் அவசியம்.

எதிர்மறையான மனப்பான்மை பாதுகாப்பின்மை, பயம் மற்றும் எரிச்சல் என்ற வட்டத்திற்குள் உங்களை அடைத்து விடும். மேலும் அனைத்திலுமே தோல்வி என்ற உணர்வையும் உண்டாக்கும். இந்த மோசமான நிலையை தவிர்க்க உங்கள் மனதில் ஏற்படும் எதிர்மறையான சிந்தனைகளை தவிர்க்கவும். இங்கு எதிர்மறையான மனப்பான்மையை நீக்க உங்களுக்காக சில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்ணங்களில் கவனம் தேவை

எண்ணங்களில் கவனம் தேவை

எதிர்மறையான மனப்பான்மையை தவிர்க்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துவது. உங்கள் எண்ணங்களை கட்டுப்பாட்டில் வையுங்கள். உங்கள் சிந்தனைகளை சற்று விலகி சென்று பாருங்கள். உங்களுக்கு எது பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்பது அப்போது தான் உங்களுக்கு நன்றாக விளங்கும். சில நேரம் உங்கள் எண்ணங்கள் உங்களை அப்படியே அழைத்து சென்று விடும். இருப்பினும் அவற்றின் மேல் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்மறையான சிந்தனைகள் உங்கள் மனதில் நுழைந்தால், முதலில் அதனை தடுத்து நிறுத்துங்கள். இது தான் நீங்கள் எடுக்க வேண்டிய முதல் படி.

எழுத்து பழக்கம்

எழுத்து பழக்கம்

உங்கள் எதிர்மறையான மனப்பான்மையை கண்டுகொண்டு விட்டால், நீங்கள் அடுத்து செய்ய வேண்டியது அதனை கட்டுப்படுத்துவது. எழுத்து பழக்கத்தை மேற்கொள்வது அதற்கு ஒரு வழியாகும். உங்கள் மனதில் எழும் அனைத்து எண்ணங்களையும் எழுதுங்கள். உங்கள் உணர்வுகளை உண்மையாக எழுதுங்கள். பின் அதனை கொண்டு உங்கள் எண்ணங்களை பாகுபடுத்தி பாருங்கள்.

உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

உங்களை சுறுசுறுப்பாக வைத்திருங்கள்

எதிர்மறையான மனப்பான்மையை கட்டுப்படுத்த உங்களை நீங்கள் சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் ஒரு வழியாகும். எப்போதும் செயலற்று இருக்காதீர்கள். "செயலற்று கிடக்கும் மனது சாத்தானின் தொழிற்கூடம்" என்று ஒரு சொல் இருப்பது உங்களுக்கு தெரியும் தானே. அதனால் எப்போதுமே ஏதாவது செயலில் ஈடுபட்டு கொண்டிருங்கள். அயர்ச்சி ஏற்படும் வரை வேலை செய்து இரவு நன்றாக தூங்குங்கள்.

ஆர்வம் ஏற்படும் வகையில் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்

ஆர்வம் ஏற்படும் வகையில் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள்

உங்களுக்கு வேலை இல்லாமல் ஓய்வு நேரம் கிடைக்கிறதா? அப்படியானால் ஓய்வு நேரத்தை கழிக்க ஏதாவது பொழுது போக்கில் ஈடுபடுங்கள். ஓவியம், புத்தகம் படித்தல், தோட்டக்கலை, ஸ்வெட்டர் பின்னுதல் அல்லது புது வகை உணவுகளை சமைத்தல் போன்றவற்றை செய்து பாருங்கள்.

நடையுடன் உரையாடலில் ஈடுபடுங்கள்

நடையுடன் உரையாடலில் ஈடுபடுங்கள்

சாயங்கால வேளையில் நண்பர்கள் அல்லது மனைவி அல்லது நேர்மறையான மனப்பான்மையை கொண்ட வேறு யாருடனாவது நீண்ட தூர நடை கொடுங்கள். அவர்களுடன் உங்கள் பிரச்சனைகளை மனது விட்டு பேசுங்கள். முடிந்த வரை தனிமையை தவிர்க்கவும். வெளிப்படையாக இருக்கும் போது உங்கள் மன பாரம் நீங்கி உங்களுக்கு அமைதி கிடைக்கும். எதிர்மறையான மனப்பான்மையை போக்க இது ஒரு சிறந்த வழியாகும். இம்முறையை கையாண்டால் உங்களுக்கு மன அமைதியும் நிம்மதியும் கிட்டும்.

சந்தோஷம் ஏற்படுத்தும் கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்

சந்தோஷம் ஏற்படுத்தும் கலைகளை கற்றுக் கொள்ளுங்கள்

உங்களுக்கு எதிர்மறையான மனப்பான்மை உள்ளதா? அப்படியானால் புதிதாக ஏதாவது செய்து பாருங்கள். உங்கள் மனதில் நீண்ட காலமாக இருக்கும் ஆசைகளை செய்து பாருங்கள். இசை அல்லது நடனப் பயிற்சியில் ஈடுபடுங்கள். அது உங்கள் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.

நன்றி என்பதும் முக்கியமான ஒரு மந்திரம்

நன்றி என்பதும் முக்கியமான ஒரு மந்திரம்

எதிர்மறை மனப்பான்மையை தவிர்க்க இதோ இன்னொரு வழி. நன்றி என்ற கலையை பழகிக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதிர்மறை மனப்பான்மைகள் ஏற்படும் போது, ஒரு பேப்பரை எடுத்து உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை அனைத்தையும் எழுத ஆரம்பியுங்கள். அதற்கான நன்றி உணர்ச்சியை உணர்ந்திடுங்கள். அதனை ஒரு முறை அல்லது இரண்டு முறை அல்லது மூன்று முறை கூட படியுங்கள். எதிர்மறையான மனப்பான்மையை நீக்குங்கள். வாழ்க்கை நன்றாக தான் போகிறது என்று நம்புங்கள்.

சந்தோஷத்தை தேட முற்படுங்கள்

சந்தோஷத்தை தேட முற்படுங்கள்

உங்களுக்கு எது சந்தோஷத்தை ஏற்படுத்தும் என்பதை கண்டறியுங்கள். சில நேரம் அது ஒரு சில்லறை விஷயமாக கூட இருக்கலாம். ஒரு பூனையை பார்ப்பதோ அல்லது ஐஸ் க்ரீமை பார்ப்பதோ கூட உங்களுக்கு சந்தோஷத்தை தரலாம். எவையெல்லாம் சந்தோஷத்தை அளிக்கும் என்பதை கண்டு பிடித்து அதனை செய்திடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Kill That Negative Attitude?

A negative attitude locks you in a circle of insecurity, fear, and frustration. It may also bring about a feeling a failure. Here are a few ways through which you can kill that negative attitude.
Desktop Bottom Promotion