For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் உள்ள பிரபலமான சில காபி வகைகள்!!!

By Ashok CR
|

நமது நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் காபி அருந்தும் பழக்கம் உடையவராகவே இருக்கின்றனர். ஒரு சிலர் சற்று அதிகமாகவே உட்கொள்ளுகின்றனர். வேலையில் இருக்கும் மனஅழுத்தத்தை போக்குவதற்கும், தூக்கத்தை கட்டுபடுத்துவதற்கும் காபியை அதிக அளவில் உட்கொள்ளுகின்றனர். இதனால், அதில் இருக்கும் காப்ஃபைன் பொருளுக்கு எளிதில் அடிமையாகின்றனர்.

காபி என்பது நாம் தினமும் உட்கொள்ளும் காப்ஃபைன் அளவிலான இன்றியமையாத பழக்கப்பொருள் ஆகும். ஒருவர் மன அழுத்தம் அடைந்தாலோ, தளர்வடைந்தாலோ, அவ்வேளையில் அவருக்கு தேவைப்படுவது ஒரு கப் காபி மட்டுமே. காபி நமது மனநிலைகளை உயர்த்துவதால் எனர்ஜி பூஸ்டர்ஸ் என்றும் அழைக்கப்படுக்கின்றது. இதன் உற்பத்தி தொடக்கத்தை பற்றி கூறுகையில், காபியானது ரோஸ் நிறமுள்ள சிவப்பு பெர்ரி மரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது. வெவ்வேறு வகையான காபி கொட்டைகள் அந்தந்த இடங்களுக்கு தகுந்தாற்போல் பயிர் செய்யப்படுகின்றது.

ஒவ்வொரு வகையான காபி கொட்டைகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காபி வகைகளை தயாரிக்க உதவுகின்றது. காபியின் வகைகள் அதில் சேர்க்கும் பொருட்களாலும், அதன் வெவ்வேறு வேறுபாடுகளாலும் வேறுபட்டு இருக்கும். காபியின் மணத்தையும், சுவையையும் மிகைபடுத்துவதற்கு இந்த பொருட்கள் உபயோகிக்கப்படுகின்றது.

உலகளாவிய மிகவும் பிரபலமான பல காபி வகைகளைப் பற்றி படிக்கலாமா...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எஸ்ப்ரசோ (Espresso)

எஸ்ப்ரசோ (Espresso)

காபி கொட்டைகளை அதிக பிரஷர் நீராவியில் வைத்து இந்த கருப்பு காபியை தயாரிக்கின்றனர். இது மிகவும் அடிப்படையான காபி வகையாகும். இருப்பினும், பிரபலமான காபி வகையாகும். எஸ்ப்ரசோ காபியில் தண்ணீரும் சிறிதளவு சர்க்கரையும் இருக்கும். ஸ்ட்ராங் எஸ்ப்ரசோ காபியில் குறைவான தண்ணீரும் சர்க்கரை இல்லாமலும் இருக்கும். இது எல்லோரும் விரும்பும் காபி வகைகளில் ஒன்றாகும்.

எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato)

எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato)

எஸ்ப்ரசோ காபியில் சிறிது நீராவியில் வைத்த பாலை சேர்த்தால், இந்த பிரபலமான வகையான எஸ்ப்ரசோ மாச்சியாடோ தயாரிக்கலாம். மாச்சியாடோ என்பது எஸ்ப்ரசோ காபியில் சிறிதளவு மாற்றியமைக்கப்பட்ட வடிவமாகும். ஸ்ட்ராங் காபியை விரும்பாதவர்களுக்கு இது மிகவும் சிறந்த காபியாகும்.

காப்பசீனோ (Cappuccino)

காப்பசீனோ (Cappuccino)

காப்பசீனோ காபி மிகவும் பிரபலமான, எளிதாக கிடைக்கக்கூடிய உலகளாவிய காபி வகைகளில் ஒன்றாகும். இது எல்லா காபி கடைகளிலும் கிடைக்க கூடிய காபி வகையாகும். இது எஸ்ப்ரசோ, பால், பால் நுரை போன்றவற்றை சமமமான அளவில் சேர்த்து தயாரிக்கப்படுக்கின்றது. சாக்லேட் சிரப் அல்லது காபி பவுடர் கொண்டு அலங்கரிப்படுக்கின்றது.

காபி லட்டே (Cafe Latte)

காபி லட்டே (Cafe Latte)

இந்த காபியை எஸ்ப்ரசோவில் சேர்க்கும் பாலை விட மூன்று மடங்கு அதிக பால் சேர்த்து தயாரிக்கின்றனர். இந்த பால் காபியில் தேவையான அளவு சர்க்கரையும் சேர்த்து தயாரித்தால் குக்கீஸ் அல்லது பேஸ்டிரீஸ் போன்றவற்றோடு குடிப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும்.

மோக்கசினோ (Mocha chino)

மோக்கசினோ (Mocha chino)

காப்பசினோ காபியில் தேவையான அளவு கோகோ பவுடர் சேர்த்து இந்த வகை காபியை தயாரிக்கலாம். கோகோ பவுடர் அல்லது கோகோ சாறு இந்த காபிக்கு சாக்லேட் சுவையை அளிக்கும். உருட்டிய கிரீமை கொண்டு அலங்கரிக்கலாம்.

அமெரிக்கானோ (America-no)

அமெரிக்கானோ (America-no)

எஸ்ப்ரசோ காபியில் அரை கப் வெந்நீர், சிறிது பால் மற்றும் சர்க்கரை சேர்த்து இந்த காபியை தயாரிக்கலாம். அமெரிக்கர்கள் இந்த எஸ்ப்ரசோ காபியை நீர்ப்பதால் இதற்கு அமெரிக்கானோ என்ற பெயர் வந்தது. இது உலகம் முழுவதும் கிடைக்கக்கூடிய பிரபலமான காபி வகையாகும்.

ஐரிஷ் காபி (Irish coffee)

ஐரிஷ் காபி (Irish coffee)

இது எல்லா காபி கடைகளிலும் கிடைக்கக்கூடிய மற்றொரு காபி வகையாகும். சிறந்த ஐரிஷ் காபியை தயாரிப்பதற்கு விஸ்கி, எஸ்ப்ரசோ மற்றும் சர்க்கரையை சரியான அளவில் கலக்கவேண்டும்.

இந்தியன் பில்டர் காபி (Indian Filter coffee)

இந்தியன் பில்டர் காபி (Indian Filter coffee)

தென்னிந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த இந்தியன் பில்டர் காபி இப்பொழுது உலகளாவிய நிலையில் பிரபலம் அடைந்துள்ளது. காய்ந்த காபி பொடியில் கிடைக்கும் சாற்றை பால் மற்றும் தண்ணீருடன் கலந்து தயாரிக்கப்படுக்கின்றது. இது எல்லா வகை காபிக்களை காட்டிலும் இனிப்பாக இருக்கும்.

டர்கிஷ் காபி (Turkish coffee)

டர்கிஷ் காபி (Turkish coffee)

டர்கிஷ் கொட்டைகளை காயவைத்து நன்றாக பொடி செய்யவேண்டும். இதனை வெந்நீரில் சேர்த்து கரைக்கவும். இந்த காபி பவுடர் கலந்த தண்ணீரை நன்றாக கொதிக்க விட வேண்டும். காபியின் சுவை மெருகேறி தண்ணீரால் முழுவதுமாக ஈர்க்கப்பட வேண்டும். தேவையான சர்க்கரை சேர்த்து தயாரிக்கவும். சிறந்த டர்கிஷ் காபியில் நுரை படிவம் தடிமனாகவும் கிரீமியாகவும் இருக்கும்.

வெள்ளை காபி (White coffee)

வெள்ளை காபி (White coffee)

மலேசியாவில் தயாரிக்கப்பட்ட இந்த காபி பிரபலமான ஒன்றாகும். கடலை எண்ணையில் வறுத்த காபி கொட்டைகளை கொண்டு தயாரிக்கப்படுக்கின்றது. இந்த காபிக்கு சுவையூட்ட சுண்டிய பால் மற்றும் சர்க்கரை போன்றவற்றை உபயோகப்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Different Types Of Coffee Popular Worldwide

Every type of coffee bean is used to make similar types of coffee. Coffee types differ according to the ingredients used in them in different variations. These ingredients are used to enhance the coffee flavor and aroma. Some of the most famous coffee types worldwide are listed below.
Desktop Bottom Promotion