For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் மிகவும் குட்டியாக இருக்கும் 14 உயிரினங்கள்!!!

By Babu
|

இந்த பெரிய உலகில் வாழும் நாம், பெரியது முதல் சிறியது வரை நிறைய உயிரினங்களைப் பார்த்திருப்போம். அதிலும் ஒரு சாதாரண அளவில் இருக்க வேண்டிய உயிரினமானது அளவுக்கு அதிகமாக பெரிய உருவத்தில் காணப்பட்டால், உலகில் உள்ளோரால் அதிசயமாக பார்க்கப்படுகின்றனவோ, அதேப் போல் மிகவும் சிறிய அளவில் காணப்பட்டாலும் அதிசயிக்கத்தக்கவையே. ஆனால் ஒரு கொடுமையான விஷயம் என்னவென்றால், அப்படி சிறியதாக இருக்கும் உயிரினங்களின் வாழ்நாள் மிகவும் குறைவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி இப்படி ஒரு சாதாரண உயிரினமானது மிகச்சிறிய அளவில் இருப்பதற்கு காரணம் பிறப்பு குறைப்பாடுகள் தான்.

இங்கு தமிழ் போல்ட் ஸ்கை, வளர்ச்சி குறைபாடு மற்றும் பிறப்பு குறைபாட்டினால் மிகவும் சிறியதாக இருக்கும் சில உயிரினங்களை உங்கள் பார்வைக்காக கொடுத்துள்ளது. இவை அனைத்தையும் ஒரு கையினால் என்ன, ஒரே விரலால் கூட தூக்கலாம்.

இப்போது உலகில் இருக்கும் மிகச்சிறிய உயிரினங்களைப் பார்ப்போம். மேலும் இவை அனைத்தும் செல்லப் பிராணி போன்று சரியான பராமரிப்புடன் வளர்க்கப்படுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பான்டா

பான்டா

இந்த சிறிய பான்டா 51 கிராம் தான் உள்ளது. இது தற்போது சீனாவில் உள்ளது.

பூனை

பூனை

இந்த அழகான பூனையின் உயரம் 6.1 இன்ச் தான். இது தான் உலகிலேயே மிகவும் சிறிய பூனை. இந்த பூனைக்கு சுமார் 2 வயது இருக்கும்.

மறிமான் (Antelope)

மறிமான் (Antelope)

படத்தில் காட்டப்பட்ட இது ஒரு வகையான மான். இந்த மறிமான் 20 செ.மீ உயரதும், 1.3 கிலோ எடையும் கொண்டது.

மீன்

மீன்

படத்தில் காட்டப்பட்ட இந்த மீனானது 7.9 மி.மீ நீளத்தில் தான் இருக்கும். மேலும் இது மலேசியாவில் உள்ள அமில சதுப்பு நீரில் தான் நீந்தும்.

தவளை

தவளை

உலகிலேயே மிகச்சிறிய தவளை என்றால் அது பிரேசிலியன் கோல்டன் தவளை தான். இந்த குட்டித் தவளையின் நீளமே 9.8 மி.மீ. தான். இது ஆப்பிரிக்க காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

பறவை

பறவை

இந்த ரீங்கார பறவை தான் உலகிலேயே மிகவும் சிறிய மற்றும் க்யூட்டான உயிரினம்.

பாம்பு

பாம்பு

பாம்பு குடும்பத்திலேயே மிகவும் சிறிய பாம்பு தான் பார்படாஸ் நூல் பாம்பு. இதன் முழு வளர்ச்சியே 4 இன்ச் தான் இருக்கும்.

பல்லி

பல்லி

இந்த சிறிய பல்லி 16 மி.மீ. நீளம் தான் இருக்கும்.

குரங்கு

குரங்கு

பிக்மி மார்மோசெட் குரங்கு கூட உலகிலேயே மிகச்சிறிய உயிரினங்களில் ஒன்று தான். இந்த சிறிய குரங்கின் நீளம் சுமார் 16 செ.மீ. இருக்கும். இதன் பிரதான உணவு மரங்களில் இருந்து வெளிவரும் பசை தான்.

குதிரை

குதிரை

தம்பிலினா குதிரை தான் உலகிலேயே மிகவும் சிறியது. இது ஐரோப்பாவில் உள்ளது. இந்த குதிரையின் உயரம் 17.5 இன்ச் தான் இருக்கும்.

மாடு

மாடு

உலகில் உள்ள மிகச்சிறிய மாடு தான் வெச்சுர் மாடு. இந்த மாட்டின் சராசரி உயரம் 30-35 இன்ச் தான் இருக்கும்.

ஆமை

ஆமை

இது தான் உலகிலேயே மிகவும் சிறிய ஆமை. இது ஒரு நாணயம் அளவில் தான் இருக்கும்.

வௌவால்

வௌவால்

வௌவால் என்றால் பயப்படுவோம். ஆனால் இந்த வௌவாலை செல்லப்பிராணியாக வளர்க்கின்றனர். மேலும் இந்த வௌவாலின் நீளம் 20 மி.மீ. தான் இருக்கும்.

பச்சோந்தி

பச்சோந்தி

படத்தில் காட்டப்பட்ட இந்த பச்சோந்தி 1 இன்ச் தான் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Smallest Animals In The World

Boldsky, has put together some of the worlds smallest living creatures or animals which have walked on earth. You will be surprised to see how much they actually vary in size.
Desktop Bottom Promotion