ஏன் நிர்வாண படங்களை பகிரக் கூடாது? 7 பயங்கரமான காரணங்கள்!

இங்கு ஏன் நிர்வாண படங்களை பகிரக் கூடாது? மற்றும் அதற்கான 7 பயங்கரமான காரணங்கள் கூறப்பட்டுள்ளன.

Subscribe to Boldsky

தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு முறைகள் பின்பற்றப்பட்டன. புறா விடு தூது, கடிதங்கள், ஈமெயில், சமூக தளங்கள், அலைபேசி செயிலி என ஒரு பெரிய பரிணாம மாற்றங்களை நாம் கண்டுள்ளோம்.

இவற்றில் புறாவிடு தூது, கடிதங்கள் போன்ற காலக்கட்டத்தில் பெரிதாக யாரும் பாதிக்கப்படவில்லை. அந்த காலக்கட்டத்தில் அந்தரங்கங்கள் வெளியனுப்பப்படவுமில்லை. ஆனால், இன்று வாட்ஸ்-அப்பில் படங்கள், ஒலி / ஒளி கோப்பு போன்றவற்றை சாதாரணமாக அனுப்புகிறோம்.

Why You Should Definitely Not Send Naked Pics to Your Boyfriend

இதில் அந்தரங்கங்கள் அடங்கிய கோப்புகள் பகிரும் போது தான் பக்கவிளைவுகள் நம்மை பாதிப்படைய செய்கிறது. என்ன தான் காதலர்கள் இருவர் மத்தியில் பகிரப்பட்டதாக இருந்தாலும், அந்த படம் இந்த பிரபஞ்சத்தில் எப்போது வேண்டுமானாலும் ஒரு மூன்றாம் நபரின் பார்வையில் படலாம்.

திருமணத்திற்கு முன்பே உடலுறவில் ஈடுபட இன்றைய தலைமுறையினர் அதிகம் விரும்புவது ஏன்?

ஒரு பெண் தனது நிர்வானப் படத்தை பகிரும் போது இந்த 7 பயங்கரமான காரணங்களால் அவள் பாதிக்கப்படலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

காரணம் #1

அது எம்.எம்.எஸ், மின்னஞ்சல், வாட்ஸ்அப், ஃபப்புக் மெசேஜ் என எதுவாக இருந்தாலும் சரி, நீங்கள் அனுப்பிவிட்டு அழித்தாலும் சரி, பெற்றவர் பார்த்து விட்டு அழித்தாலும் சரி, நீங்கள் அனுப்பிய நிர்வாண படம் இந்த உலகில் அழியாமல் இருக்கும். ஏதோ ஒரு சர்வரில், எங்கோ ஒரு இடத்தில் சேமித்த நிலையில் அது தங்கியிருக்கும்.

காரணம் #2

நீங்கள் இன்று காதலிக்கும் நபர் தான் நாளை உங்களுடைய கணவராக போகிறார் என்பது நிச்சயமற்றது. எனவே, நிர்வாண படங்களை காதலனுக்கு கூட அனுப்ப வேண்டாம். காதலிக்கும் எந்த ஒரு ஆணும் நிர்வாண உடலுக்கு முக்கியத்துவம் அளிக்க மாட்டான்.

காரணம் #3

நீங்கள் அனுப்பும் நிர்வாண படம் காதலர் மட்டும் தான் பார்க்கிறார் என்று எப்படி நம்ப முடியும். அவரது நண்பர்கள் கூட பார்க்க வாய்ப்புகள் உண்டு.

காரணம் #4

நல்ல காதலனாகவே இருந்தாலும் கூட, அவருடைய மொபைலில் சேமிக்கப்பட்ட உங்களது நிர்வாண படத்தை யார் வேண்டுமானால் கண்டுவிட கூடும். ஏதோ ஒரு படத்தை பார்க்க மொபைலை கொடுத்தாலும் கூட அவர் ஸ்வைப் செய்து பார்க்க துவங்குகிறார் என்றால் அடுத்த ஸ்வைப்பில் உங்கள் நிர்வாண படம் கூட காட்சியளிக்க வாய்ப்புகள் உள்ளன.

காரணம் #5

உங்கள் பெற்றோர் இதை கண்டுபிடிக்க வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. அன்றே இல்லை எனிலும், என்றாவது ஒரு நாள். அன்று அவர்கள் மனது எவ்வளவு புண்படும் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

காரணம் #6

லீக் ஆன நிர்வாண படங்களால் பிரபலங்கள் பட்டப்பாட்டை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இதே நிலை உங்களுக்கும் கூட ஒருநாள் வரலாம். எனவே, ஜாக்கிரதையாக இருந்துக் கொள்ளுங்கள்.

காரணம் #7

நிர்வாண படத்தை தெரிந்தோ, தெரியாமலோ பகிர்வதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை இன்னும் தெளிவாக தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால் செக்ஸ் டேப் என்ற படத்தை பாருங்கள்.

தெரியாமல் தங்கள் அந்தரங்கங்களை சேமித்து வைத்து அது நெட்டில் பகிர்ந்து அதை அழிக்க ஒருத் தம்பதி என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை அந்த படத்தை பார்த்தல் புரிந்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why You Should Definitely Not Send Naked Pics to Your Boyfriend

Why You Should Definitely Not Send Naked Pics to Your Boyfriend
Please Wait while comments are loading...
Subscribe Newsletter