For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபடனும்னா ஏன் ஹனுமனை வழிபடனும்னு தெரியுமா?

சனியின் தாக்கத்திலிருந்து விடுபட ஹனுமனை எவ்வாறு வழிபடவேண்டும். அதனால் கிடைக்கக் கூடிய நன்மைகளையும் இங்கெ விவரிக்கப்பட்டுள்ளது.

By Bala Latha
|

நவ கிரஹங்களிலேயே சனி மிகவும் சக்தி வாய்ந்த கோளாகும். பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் சனியின் விளைவுகளை எதிர்க்கொள்ளும் ஒரு கால கட்டம் வரும். ஏழரை சனி, மற்றும் சனி மஹாதசை ஆகியவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி கிரகம் தீங்கு விளைவுக்கும் தாக்கங்களை சில முறை ஏற்படுத்தும் காலங்களாகும்.

சனியின் தாக்கங்கள் எப்பொழுதும் தொந்தரவுகளையும், மோசமான விளைவுகளையுமே ஏற்படுத்தும் என்று சொல்வது தவறான கருத்தாகும். அது நமது பிறந்த ஜாதக கட்டத்தின் பல்வேறு வீடுகளில் சனி கிரகத்தின் நிலையைப் பொருத்ததாகும். சனியின் மோசமான அமைப்பு, மனிதனை இன்னல்கள் நிறைந்த ஒரு உலகிற்குள் தள்ளும். ஆனால் ஒரு லாபகரமான அமைப்போ ஒரு மனிதனுக்கு முடிவில்லாத வளங்களையும் வெகுமதிகளையும் பெற்றுத் தரும்.

ஒரு மனிதனின் பிறந்த ஜாதக கட்டத்தில் சனியின் மோசமான தாக்கங்கள் இருந்தால், அவர் இறைவன் ஹனுமானை வணங்க வேண்டியது அவசியம் என்று பொதுவாக அறியப்படுகிறது. இறைவன் ஹனுமான் 'சங்கட மோச்சன்' என்று அழைக்கப்படுகிறார். ஏனென்றால் அவர் தன் பக்தர்களை அனைத்து விதமான சங்கடங்களிலிருந்தும் விடுவிக்கிறார். சங்கடம் என்பதன் மொழியாக்கம், தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் என்பதாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 இறைவன் ஹனுமானின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை ?

இறைவன் ஹனுமானின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை ?

இறைவன் ஹனுமான் குழந்தையாக இருந்த போது சூரியனைப் பார்த்து ஒரு கனிந்த சுவையானப் பழம் என்றுத் தவறாகக் கருதி, பிடித்து சாப்பிட முயற்சித்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சூரிய பகவான், தேவர்களின் தலைவனான இந்திரனை அணுகினார். இந்திரன் தன் வஜ்ஜிராஸ்த்திரத்தால் குழந்தை ஹனுமனைத் தாக்கினார். இதனால் குழந்தையின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இந்த காயமே ஹனுமான் என்ற பெயருக்குப் பின்னால் உள்ள காரணமாகும்.

இறைவன் ஹனுமான் மிகுந்த ஆற்றல் மிக்கவராக இருந்தாலும், எப்பொழுதும் பணிவானவர். அவர் சூரிய பகவானிடம் தன்னை மாணவராக ஏற்றுக் கொள்ளும் படி வேண்டினார். அதற்கு சூரிய பகவானோ, தான் நாள் முழுவதும் வானத்தில் பயணிக்க வேண்டி இருப்பதால், எப்பொழுதும் ஓய்வின்றி இருப்பதாகக் கூறினார். அதற்குத் தீர்வாக, இறைவன் ஹனுமான் சூரியன் பகவானின் தேரின் முன் பக்கம் அமர்ந்து, அது வானெங்கும் பறக்கும் போது, தானும் உடன் பயணிக்கத் தொடங்கினார். அவர் சூரிய பகவானுக்கு முதுகுப் புறத்தைக் காட்டியபடி பயணித்தார். மேலும் இறைவன் சூரியனிடமிருந்து சகல வித்தைகளையும் கற்றுக் கொண்டார்.

 இறைவன் ஹனுமானின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை ?

இறைவன் ஹனுமானின் பக்தர்களை சனி ஏன் தொந்தரவு செய்வதில்லை ?

ஒருவருக்கொருவர் வித்தியாசமான குணாதிசயங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் உறைந்த உறவு முறை இருந்தாலும், சனி பகவான், இறைவன் ஹனுமானுக்கு அவரது அனைத்து பக்தர்களையும் கிரகத்தின் தீய விளைவுகளிலிருந்து காக்கும் ஒரு வரத்தை அளித்தார்.

இறைவன் ஹனுமான் எப்படி இந்த வரத்தைப் பெற்றார் என்பதைப் பற்றி நமக்கும் சொல்லும் இரண்டு பிரசித்திப் பெற்ற கதைகளைப் பற்றி இப்போது படித்துத் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

இறைவன் ஹனுமான் சனி தேவனின் கர்வத்தை உடைத்தார் என்பது போல செல்கிறது இந்தக் கதை:

கதை 1:

கதை 1:

இறைவன் ஹனுமான் தனது கல்வியைக் கற்று முடித்த பிறகு, குருவான சூரிய பகவானிடம், குருதட்சணையாக அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். சூரிய பகவான் குருதட்சணை எதுவும் வேண்டாமென்றுக் கூறிவிட்டார். ஆனால் இறைவன் ஹனுமான் வற்புறுத்தவே, பின்னர் சூரிய பகவான் தன் மகனான சனி தேவனின் கர்வத்தை அழிக்குமாறு ஹனுமானைக் கேட்டுக் கொண்டார்.

எனவே ஹனுமான் சனி லோகத்திற்கு சென்று, சனி தேவனைப் பார்த்து அவரது வழிகளைத் திருத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் சனி தேவனோ கோபம் கொண்டு, இறைவன் ஹனுமானின் தோளின் மீது தாவி ஏறி, தனது முழு பலத்தையும் கொண்டு, ஹனுமானைத் தாக்க முயற்சித்தார்.

ஆனால் சனி தேவனின் எந்த ஒரு நடவடிக்கையும், இறைவன் ஹனுமானுக்கு எந்தவிதமான தொந்தரவையும் ஏற்படுத்தவில்லை. பிறகு, இறைவன் ஹனுமான் தனது உருவத்தை மிகப் பெரியதாக அதிகரித்துக் கொள்ளத் தொடங்கினார்.

அவர் மிகப்பெரிய உருவமாக ஆன பிறகு, தோளிலிருந்த சனி பகவான் மேற்கூரையில் இடித்துக் கொண்டு நசுங்கினார். அது அவருக்கு அளவில்லாத வலியை ஏற்படுத்தியது. யாராலும் தப்பிக்க முடியாததாகக் கருதப்பட்ட சனி தேவனின் கர்வம் உடைந்தது.

அவர் இறைவன் ஹனுமானிடம் மன்னிப்புக் கோரி, தனது சக்திகளால் ஹனுமனின் பக்தர்களை ஒருபோதும் பாதிப்பதில்லை என்ற வரத்தை அளித்தார்.

கதை 2:

கதை 2:

இராவணனின் மகன் மேகநாதன் பிறந்த போது, சனி தேவன் இறைவன் ஹனுமானால் காப்பாற்றப்பட்டார். இராவணன் தனது மகனின் பிறப்பு ஜாதகக் கட்டங்களில் எந்த துரதிருஷ்டமான கோள்களும் தோன்றக் கூடாது என்று விரும்பினான்.

அதற்காக அவன் எல்லா கோள்களையும் கடத்தி வந்து தனது கைதிகளாக்கி வைத்திருந்தான். சனி தேவன் ஜன்னல் கூட இல்லாத ஒரு சிறிய அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்தார்.

சனி தேவனின் மக்களின் முகத்தில் கூடப் படக்கூடாது என்பதை உறுதி செய்துக் கொள்வதற்காக அவ்வாறு அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு, இறைவன் ஹனுமான் சீதையைத் தேடி இலங்கைக்கு வந்தடைந்தார்.

இறைவன் ஹனுமான் அந்தத் தங்க நகரமான இலங்கையைக் கொளுத்திய போது, சனி தேவனும் மற்ற இதரக் கோள்களும் தப்பித்தனர். இறைவன் ஹனுமான் தன்னைக் காப்பாற்றியதற்காக சனி தேவன் நன்றியுடையவராக இருந்தார்.

கதை 2- தொடச்சி :

கதை 2- தொடச்சி :

ஆனாலும் ஹனுமனின் முகத்தை அவர் பார்த்து விட்டதால், ஹனுமான் வாழ்க்கையில் ஏராளமான தொந்தரவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினார். இறைவன் ஹனுமான் அந்தக் கஷ்டங்கள் என்னவாக இருக்கும் என்று கேட்டார். அதற்கு சனி பகவான் அவரது தாக்கத்தால், மனைவியையும் குடும்பத்தையும் பிரிந்திருக்க வேண்டி வரும் என்று பதிலளித்தார். இறைவன் ஹனுமானுக்கு மனைவியும் குடும்பமும் இல்லாததால் அவர் பாதிக்கப்படவில்லை. பின்பு சனி தேவன் இறைவன் ஹனுமானின் தலை மீது தாவி ஏறினார். ஆனால் இறைவன் ஹனுமனோ, தன் தலையைப் பயன்படுத்தி இலங்கையில் உள்ள அரக்கர்களடன் சண்டையிட்டார்.

அவர் தனது தலையால் பாறாங்கற்களை உடைத்தார் மேலும் பாறைகளை நொறுக்கினார். இவை அனைத்தும் சனி தேவனுக்குத் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தின. எனவே இறைவன் ஹனுமானின் தலையிலிருந்து கீழே இறங்கி, ஹனுமனின் பக்தர்களைத் தனது தோஷங்கள் பாதிக்காது என்று அவருக்கு வரமளித்து ஆசிர்வதித்தார்.

இந்த இரண்டு சம்பவங்களிலும், சனி தேவன் மிகுந்த உடல் வலியால் துன்புற்றார். இதனால் தான் மக்களுக்கு சனியின் தொந்தரவுகள் நேரும் போது, அவருக்கு சிறிது நல்லெண்ணையும் மற்றும் எள் விதைகளையும் படைக்க வேண்டுமென்று ஹிந்துக்கள் நம்புகிறார்கள். இந்தப் பொருட்களால் சனி தேவனின் வலிகள் தணிக்கப்படுகின்றது என நம்பப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why Worshipping Hanuman Prevents The Effects Of Shani,

Why Worshipping Hanuman Prevents The Effects Of Shani
Story first published: Monday, May 22, 2017, 14:26 [IST]
Desktop Bottom Promotion