For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

145 வயது வாழ்ந்த தாத்தாவின் நீண்ட ஆயுள் இரகசியம் இதுதானாம்!

இந்தோனேசியாவின் வயதான நபராக திகழ்ந்த ம்பாஹ் கோத்தோ தனது நீண்டநாள் ஆயுள் இரகசியம் குறித்து கூறியது என்ன தெரியுமா?

|

நூறு வயசு வாழ வேண்டும், சொர்கத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், யார் ஆரோக்கியமான வாழ்க்கை பின்பற்றுகிறார்கள்? யார் எல்லாம் சொர்க்கம் செல்ல இப்போது இறக்க ரெடியாக இருக்கிறார்கள்.

யாருமே இல்லை! இதோ, மரணத்தை தானாக அழைத்த கோத்தோ தாத்தா, தனது நீண்ட ஆயுள் பற்றிய இரகசியம் என என்ன கூறி இருக்கிறார் என பாருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோத்தோ (Mbah Gotho)

கோத்தோ (Mbah Gotho)

கோத்தோ 1870 டிசம்பர் 31 தேதி பிறந்தவர். இவர் ஒருசில நாட்களுக்கு முன்னர் தான் மரணம் அடைந்தார். இவர் இந்தோனேசியாவில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை இந்தோனேசியாவின் வயது மூத்த நபாராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் பழைய மனிதர்!

உலகின் பழைய மனிதர்!

இந்தோனேசியா மட்டுமின்றி, இவர் உலகின் பழைய நபர் பட்டியலிலும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்!

குடும்பம்!

இவருக்கு நான்கு மனைவி, பத்து குழந்தைகள். இவர்கள் எல்லாரும் இறந்துவிட்டனர். இவரது கடைசி மகன் கடந்த 1988-ல் மரணம் அடைந்தார். இவர் தனது கடைசி நாட்களை கொள்ளுப் பேர குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

நல்ல கவனிப்பு!

நல்ல கவனிப்பு!

எனது பேர பிள்ளைகள் யாரையும் சார்ந்து இன்றி வாழ்ந்து வருகிறார்கள், என்னையும் நல்லப்படி பார்த்துக் கொள்கிறார்கள் என இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் கோத்தோ.

கடைசி வரை ரேடியோ!

கடைசி வரை ரேடியோ!

கண் பார்வை குறைபாடு இருந்ததால் கோத்தோ டிவி பார்க்க மாட்டார். அதற்கு பதிலாக ரேடியோவில் நாள் முழுதும் செய்தி கேட்டு நாட்டு நடப்புகளை அறிந்துக் கொள்வாராம்,

மரணத்தை அழைத்தவர்!

மரணத்தை அழைத்தவர்!

தனது 146வது பிறந்தநாள் விழாவில் தான், தான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன், ஆனால், மரணம் தான் என்னை நெருங்க மறுக்கிறது என கோத்தோ கூறியிருந்தார். எந்த நேரத்தில் கூறினாரோ, கூறிய சில வாரங்களிலேயே மரணம் அடைந்துவிட்டார் கோத்தோ.

கல்லறை கட்டி வைத்த கோத்தோ!

கல்லறை கட்டி வைத்த கோத்தோ!

தனக்கான கல்லறையை 1992 லேயே கட்டி வைத்துவிட்டா தாத்தா கோத்தோ. தனது இறப்பிற்காக தான் காத்திருந்தார். அவர் கட்டி வைத்த கல்லறையிலேயே அவரை பேர குழந்தைகள் அடக்கம் செய்து வைத்தனர்.

இரகசியம்!

இரகசியம்!

இவர் இவ்வளவு நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்ததன் இரகசியம் என்னவென்று யார் கேட்டாலும், பொறுமை. பொறுமை தான் எல்லாவற்றுக்கும் தேவையானது என பதில் கூறி இருக்கிறார் கோத்தோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Longevity Secret of 145 YO Worlds Old Man!

The Longevity Secret of 145 YO Worlds Old Man!
Desktop Bottom Promotion