For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்சுவல் டார்ச்சர் காரணமாக தற்கொலை, ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்த பெண்!

செக்சுவல் டார்ச்சர் காரணமாக தற்கொலை செய்து கொண்ட பெண், அதை ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்ததால் பதட்டம் ஏற்பட்டது.

|

சில வாரங்களுக்கு முன்னர் தென் டெல்லி பகுதியை சேர்ந்த பூஜா எனும் 15 வயதுமிக்க இளம் பெண், தனது தோழியின் வீட்டில் நடக்கவிருந்த பார்ட்டிக்கு செல்ல அம்மா 500 ரூபாய் தராத காரணத்தால் தற்கொலை செய்துக் கொண்டார்.

சில நாட்களுக்கு முன்னர் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் 12 வயது சிறுமி பாலியல் வன்முறை காரணமாக ஃபேஸ்புக் லைவில் வீடியோ பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

இதை யார் தடுப்பது, எப்படி தடுப்பது, இந்த சூழல் உருவாக யார் காரணம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஃபேஸ்புக் லைவ்!

ஃபேஸ்புக் லைவ்!

சீடர்டவுன், ஜியார்ஜியா பகுதியை சேர்ந்தவர் கேட்லின் நிகோல் டேவிஸ் எனும் பெண். இவர் வயது 12. தன்னை உறவினர் பாலியல் ரீதியாக வன்முறைக்கு ஆளாக்கினார் என கூறி தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை ஃபேஸ்புக் லைவில் பதிவு செய்து பதட்ட நிலையை உண்டாக்கினார் இந்த சிறுமி.

தூக்கு!

தூக்கு!

ஃபேஸ்புக் லைவில் வந்த கேட்லின் தனக்கு நடந்த சம்பவத்தை கூறி தனது வீட்டின் முற்றத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பெருகி வருகிறது!

பெருகி வருகிறது!

அந்த காணொளிப்பதிவை ஃபேஸ்புக் நீக்கி வருகிறது. ஆயினும், இது பல தளங்களில் அதிகமாக பரவி வருகிறது. இதை தடுக்க முடியவில்லை என அப்பகுதி போலீஸ் கூறியுள்ளது.

போலீஸ் விசாரணை!

போலீஸ் விசாரணை!

கேட்லின் நிகோலின் தற்கொலை குறித்தும், பரவி வரும் வீடியோவை எப்படி தடுப்பது என்பது குறித்தும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

விழிப்புணர்வும், ஆலோசனையும் அவசியம்!

விழிப்புணர்வும், ஆலோசனையும் அவசியம்!

உலகம் முழுக்க இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் பாலியல் குறித்தும், மன தைரியம் குறித்தும் விழிப்புணர்வும், ஆலோசனையும் குறைவாக இருக்கிறது. இது தான் இவர்கள் பல சமயங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தவறான முடிவு எடுக்க காரணியாக அமைகிறது.

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி!

அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி!

அப்பா, அம்மா வேலையில் பிஸியாக இருக்கின்றனர். தாத்தா, பாட்டி என்ற உறவு பலருக்கு கிடைப்பதில்லை. இப்படி பெரியோரிடம் ஈர்ப்பும், பற்றும், உறவும் என எதுவும் இல்லாத காரணத்தால் வாழ்வில் மதிப்பும், எதை எதை எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய புரிதலும் குழந்தைகள் மத்தியில் இல்லாமல் போய்விடுகிறது.

பெற்றோர் விழிக்க வேண்டும்!

பெற்றோர் விழிக்க வேண்டும்!

எனவே, இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க பெற்றோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். உங்கள் குழந்தைகள் என்ன செய்கின்றனர், யாருடன் பழகுகின்றனர் என்பதை கண்காணிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக அவர்களுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும், அவர்களை பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sexually Abused Teen Girl Killed Herself and Streamed That Video in Facebook live

Sexually Abused Teen Girl Killed Herself and Streamed That Video in Facebook live
Story first published: Tuesday, January 17, 2017, 12:51 [IST]
Desktop Bottom Promotion