For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்ணாக பிறந்தது பாவமா? அல்ல மாதவிடாய் பாவ செய்யலா? - ஒரு உண்மை கதை!

"ஒவ்வொரு முறை ஏதேனும் முடிவெடுக்கும் போதும், மாதவிடாய் ஒரு அச்சுறுத்தலாகவே அமைகிறது. இதைவிட்டு தப்பிக்கவும் முடியவில்லை, இதை புரிந்துக் கொள்ளவும் முடியவில்லை." ஒரு உண்மை கதை!

|

பெண்களின் வாழ்க்கையில் மாதவிடாய் மாதங்களில் மட்டுமின்றி, அவர்களது இயல்பு வாழ்விலும், வேலை சார்ந்த விஷயங்களிலும் கூட அடிக்கடி தொந்தரவாக, ஒரு தடையாக அமைகிறது. ஒருபுறம் உடல் ரீதியாக, மறுபுறம் மன ரீதியாக வலியை உண்டாக்கும் இந்த மாதவிடாய் காலத்தில் தான், சமூகமும் பெண்களை ஒதுக்கி வலியை அதிகரிக்க செய்கிறது.

மாதவிடாய் ஒரு பெண்ணின் வாழ்வில் எப்படி எல்லாம் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பது பற்றிய ஒரு பெண்ணின் உண்மை பதிவு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தகப்பனற்ற பெண்...

தகப்பனற்ற பெண்...

"பட்டப்படிப்பை முடித்த பிறகு ஒரு நல்ல வேலைக்காக காத்திருந்தேன். எனது தாய்க்கு ஓய்வளிக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது. நான் சிறு குழந்தையாக இருந்த போதே தந்தை காலமாகிவிட்டார். அதன் பிறகு எனது தாய் என்னை மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தார். அவரது அயராத உழைப்பின் காரணமாக தான் நான் நல்ல மதிப்பெண் பெற்றேன்."

அயராத உழைப்பின் மறுவுருவம் தாய்!

அயராத உழைப்பின் மறுவுருவம் தாய்!

"தேர்வு நாட்களில் எனக்கு உறுதுணையாக இருந்தார் எனது தாய். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் வேலை இருந்தாலும். எனக்கான அனைத்து உதவிகள் செய்து கொடுத்து, உணவு சமைத்து வைத்துவிட்டு தான் செல்வார். வீட்டு வேலைகளையும் அவரே முழுவதுமாக செய்வார். என் கவனம் முழுக்க படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார். கஷ்டத்திலும் நான் ஒரு வசதியான வாழ்க்கையை தான் வாழ்ந்தேன். ஏனெனில் எனது தாய் எனக்கான அனைத்தையும் ஏற்படுத்தி கொடுத்தார்."

நல்ல வேலை!

நல்ல வேலை!

"ஒரு நல்ல, அனைவருக்கும் தெரிந்த நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைத்தது. மின்னஞ்சலில் நான் வேலைக்கு சேர வேண்டிய நாளை கண்ணுற்றேன். அன்று தான் எனது அந்த மூன்று நாட்களும் தற்செயலாக அமைந்திருந்தது. வேலை கிடைத்த மகிழ்ச்சி, எனது தாய்க்கு ஓய்வளிக்க போகிறேன் என்ற சந்தோஷம் என அனைத்தும் நொறுங்கியது போல உணர்தேன்."

பெரிய தாக்கம்!

பெரிய தாக்கம்!

"என் வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளின் போது இந்த மாதவிடாய் ஒரு அச்சுறுத்தலாக அமைகிறது. இதை விட்டு ஓடவும் முடியாது. இதன் தாக்கத்தை தடுக்கவும் முடியாது. எனது மாதவிடாய் ஒரு சித்திரவதை போன்றது."

சிலர் கொடுத்து வைத்தவர்கள்!

சிலர் கொடுத்து வைத்தவர்கள்!

"சில பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களுக்கு மாதவிடாய் எளிதாக அமைந்துவிடும். வலி மிகுந்ததாக இருக்காது. ஆனால் சிலருக்கு அது சற்று வலி மிகுந்ததாக இருக்கும். முதல் இரண்டு நாட்கள் நாப்கின் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். ஆனால், என்னை போன்ற சிலருக்கு அது கொடுமையானது. மிகுந்த வலி, அசௌகரியங்களை அளிக்கும்."

"சில முறை குடும்பத்தோடு பயணங்கள் மேற்கொள்ளும் போது இந்த மாதவிடாய் ஏற்படும். ஒரு அடி கூட நகர முடியாது."

மரணம் கேட்டேன்!

மரணம் கேட்டேன்!

சில சமயங்களில் முதல் நாள் அன்றே நான் இறந்துவிட வேண்டும் என வேண்டியுள்ளேன். மிகுந்த வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி என வரும். எந்த சாக்லேட்டும், சுடுநீர் பையும் பயனளிக்காது. சரியாக தூங்க முடியாது. உடல் முழுக்க வலி எடுக்கும். இதற்காக வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டேன். ஆனால் அதுவும் பயன் தரவில்லை.

மன வேதனை!

மன வேதனை!

"ஒவ்வொரு முறையும், சில முக்கிய தருணங்களின் போது இந்த மாதவிடாய் ஏற்படும். அப்போது எனது நண்பர்களிடமும்,உறவினர்களிடமும் எதை சொல்லி தப்பிப்பது என முடியாமல் மிகுந்த மன வேதனைக்கு உள்ளகியுள்ளேன். சிலர் வலிநிவாரணி எடுத்துக் கொண்டால் கருவளம் குறைந்துவிடும் என கூறினார். ஆனால், எனக்கு வேறு வழியில்லை."

திட்டிய முன்னாள் காதலன்!

திட்டிய முன்னாள் காதலன்!

"பி.சி.ஒ.டி (Polycystic Ovarian Disorder) காரணமாக 21 வயதிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டேன். இதன் விளைவாக ஐந்தே மாதத்தில் பத்து கிலோ எடை ஏறியது. பருக்கள் வந்தன. இந்த திடீர் மாற்றங்களை கண்டு எனது முன்னாள் காதலன் என்னை திட்டினான்.

பலரும் எனது சருமம் மோசமாக மாறியதை பற்றி கருத்துக்கள் கூறினார். இடைவிடாமல் சரும நல நிபுணரிடம் சிகிச்சைகளுக்கு சென்றேன். மருத்துவர்கள், ஜிம் என எதுவும் எனக்கு பயனளிக்கவில்லை. எனது சருமம் மேலும் மோசமானது தான் மிச்சம்."

மூன்று மாதங்கள்!

மூன்று மாதங்கள்!

"இடையில் மூன்று மாதங்கள் மாதவிடாய் ஏற்படாமல் போனது. பிறகு மருத்துவர் கொடுத்த மருந்தின் பேரில் அதிக இரத்தப்போக்கு உண்டானது.. இடைவிடாமல் இரத்தப்போக்கு போய்க் கொண்டே இருந்தது. மனதளவில் சோர்வுற்று போனேன். என்னை நானே வெறுத்தேன். எனது தாய்க்கு நான் உதவ முடியவில்லை. எனது தோள்களிலும் அதிக எடை கூடியது"

ஆணாக பிறந்திருக்கலாம்!

ஆணாக பிறந்திருக்கலாம்!

"இந்த கொடுமையான மாதவிடாயின் போது எனது பள்ளி நண்பன் ரீயூனியன் பற்றி பேச அழைத்தான். நண்பர்கள் மீண்டும் பார்க்க திட்டமிட்டுள்ளதாக கூறினான். அப்போது தான் உணர்தேன் ஒரு ஆணாக வாழ்வது எவ்வளவு எளிது என. நான் ஒரு ஆணாக பிறந்திருக்க வேண்டும். இப்படி கூற நான் ஒருபோதும் வெட்கப்படவில்லை."

ஒரு பெண்ணாக நான்...

ஒரு பெண்ணாக நான்...

"எந்த பெண்ணும் அவர்களது மாதவிடாய் வலிகளை பெற்றி வெளியே கூறுவது இல்லை. எனது காதலன் கூட நான் பொய்யாக நடிப்பதாக அவ்வப்போது கூறியுள்ளான். மாதவிடாய் பற்றி பேசுவது குற்றமாக காணப்படுகிறது. அவமானமாக கருதுகின்றனர். மாதவிடாய் காரணம் காட்டி வெளிப்படையாக விடுமுறை கேட்க யாரும் இங்கு தயாராக இல்லை. ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மாதவிடாய் எவ்வளவு வலி மிகுந்தது என்பது யாருக்கும் தெரியாது."

அனுதாபம் வேண்டாம்!

அனுதாபம் வேண்டாம்!

"யாரும் மாதவிடாய் காரணம் காட்டி அனுதாப பட வேண்டாம். என் மீது பரிதாபம் காட்ட வேண்டாம். அதே போல பெண்களும் மாதவிடாய் வலிகளை பொறுத்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டாம். மக்கள் ஆண், பெண் இருவரையும் சமமாக பார்த்தாலே போதும்."

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Period Is Not a Sin.

It's unnerving how my period date still affects the big decisions in my life. I can't run away from the things just because of my period
Desktop Bottom Promotion