For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலையில் குண்டடிப்பட்டு மயிரிழையில் உயிர் தப்பி பிழைத்த அசாத்திய மனிதர்கள்!

இங்கு தலையில் குண்டடிப்பட்டு மரணத்தின் வாயிலைத் தொட்டு உயிருடன் திரும்பிய அசாத்திய மனிதர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.

|

தலையில் குண்டடிப்பட்டால் மறுநொடியே இறந்துவிடுவார்கள் என்பது எழுதப்படாத சட்டம். அப்படி சம்பவத்தை கண்டால் அவர் இறந்துதான் இருப்பார் என்றே நாம் எண்ணுவோம்.

People Who Survived Being Shot In The Head!

ஆனால், தலையில் பலத்த குண்டடிப்பட்டு மரணத்தை வென்று திரும்பியர்வர்களும் சிலர் இருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலாலா யூசுப்சாய்!

மலாலா யூசுப்சாய்!

பாகிஸ்தானில் பெண் கல்வி பற்றி பேசியதற்காக தலையில் சுடப்பட்ட நபர் மலாலா. இவரது மண்டை ஓட்டில் இருந்து தண்டுவடம் நோக்கி பாய்ந்தது பதோட்டா. மரணத்தை கட்டித்தழுவி திருப்பி அனுப்பிவிட்டு, பெண் கல்விக்காக மீண்டும் குரல் கொடுக்க ஆரம்பித்தார் மலாலா. இதற்காக இவர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பேட்ரிக் அயர்லாந்து!

பேட்ரிக் அயர்லாந்து!

இவருக்கு குண்டடிப்பட்டு தோட்டாவின் உலோகத்துண்டு மூளையை பதம்பார்த்து. அமெரிக்காவில் நடந்த ஒரு கொடூரமான துப்பாக்கிச்சூடு நிகழ்வை கண்ட சாட்சி இவர். இந்நிகழ்வை கொலாம்பியன் ஷூட்டிங் என குறிப்பிட்டு கூறுகின்றனர். துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்தது மட்டுமின்றி, முழுமையாக குணமடைந்தார் இவர்.

Image Source

டேமி செக்ஸ்டனின்!

டேமி செக்ஸ்டனின்!

இந்த பெண்மணியின் கதை ஒரு கனவு போன்றது. இவரது கணவரே இவரை சுட்டார். அதிசயிக்கத்தக்க வகையில் இவர் முழுமையாக குணமடைந்து வந்தார்.

Image Source

ரிச்சர்ட் நோரிஸ்

ரிச்சர்ட் நோரிஸ்

துப்பாக்கிச் சூட்டில் தனது பாதி முகத்தை இழந்தவர் ரிச்சர்ட் நோரிஸ். பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மனித வரலாற்றிலேயே முதல் முறையாக முக மறு உருவ அமைப்பு சிகிச்சை பெற்றார் இவர். 2012-ல் இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 36 மணிநேரங்கள் நீடித்தன.

Image Source

எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர்!

ஒரு வாக்குவாதத்தில் எம்.ஆர். ராதா எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டார். தலைக்கு குறிவைத்த

அந்த தோட்டா அவரது தொண்டையில் பாய்ந்தது. தோட்டா வெற்றிகரமாக நீக்கப்பட்டது.இதன் பிறகே எம்.ஜி.ஆர்-ன் குரல்வளம் மாறியது.

சும்மா உலலாச்சுக்கும்!

சும்மா உலலாச்சுக்கும்!

இதுவரை பார்த்தது சீரியஸ் மேட்டர். இது சும்மா உலலாச்சுக்கும்! உலகிலேயே தலையில் குண்டடிபட்டு, மலையில் உச்சியில் இருந்து கீழே விழுந்து உயிர் தப்பித்தது ஒருவர் மட்டுமே. வேற யாரு நம்ம இருமுகன் நயன்தாரா தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People Who Survived Being Shot In The Head!

People Who Survived Being Shot In The Head!
Desktop Bottom Promotion