For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வித்தியாசமான பெயரால் 40 கம்பெனிகளால் நிராகரிக்கப்பட்ட நபர்!

சதாம் உசேன் எனும் பெயரால் படித்த வேலைக்கு செல்ல முடியாமல் பரிதவித்து வரும் நபர்.

|

அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய நபர்களில் இவரும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. ஐயம் தி ஹீரோ, ஐயம் தி வில்லன் என்பது போல், பலர் இவரை சர்வாதிகாரி என்றும், அதே அளவிற்கு பலர் இவரை நல்லவர் என்றும் கூறினர். அவர் தான் சதாம் உசேன்.

சதாம் உசேன் மீது பேரன்பு கொண்ட ஜாம்ஷெட்பூர் சேர்ந்த தாத்தா ஒருவர் தனது பேரனுக்கு சதான் உசேன் என பெயர் வைத்தார். அது தான் இப்போது அவரது தலைவிதியை முற்றிலுமாக புரட்டிப் போட்டு வாட்டி எடுக்கிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
புத்திசாலி!

புத்திசாலி!

படிப்பில் படு சுட்டி சதாம் உசேன். எப்போதும் வகுப்பில் முதன்மை ரேங் வாங்கும் மாணவரும் கூட. இவர் தனது மேற்படிப்பை தமிழகத்தில் பயின்றார். நுருல் இஸ்லாம் பல்கலைகழகத்தில் மரைன் பொறியியல் படிப்பு படித்தவர். தனது வகுப்பில் இரண்டாவது அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தார் சதாம் உசேன்.

வேலை தேடுதல்!

வேலை தேடுதல்!

நல்ல புத்திசாலி, நல்ல மார்க் வேறு எடுத்திருக்கிறார். கண்டிப்பாக கப்பல் துறையில் சீக்கிரம் நல்ல வேலை கிடைத்து வாழ்வில் செட்டில் ஆகிவிடலாம் என எண்ணி பல கனவுகளுடன் காத்திருந்தார் சதாம் உசேன். ஆனால், கனவுகள் எல்லாம் தனது பெயரால் பகல் கனவாகும் என சதாம் எந்நாளும் நினைத்திருக்க மாட்டார்.

தொடர்ந்து நிராகரிப்பு!

தொடர்ந்து நிராகரிப்பு!

சீக்கிரம் தனக்கு வேலை கிடைத்து விடும் என்ற சதாமின் எண்ணத்திற்கு மாறாக தொடர்ந்து இவர் வேலை தேடி சென்ற இடத்தில் எல்லாம் காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டார். ஆரம்பத்தில் இவருக்கு ஏதும் புலப்படவில்லை.

பெயர் தான் வில்லங்கம்!

பெயர் தான் வில்லங்கம்!

பிறகு தான் வேலை தேடி சென்ற எச்.ஆர் துறையை சேர்ந்த நபர்களிடம் அழைத்து பேசிய போதுதான், சதாம் உசேன் எனும் பெயர் தான் தனது வேலைக்கு தடையாக இருப்பதை அறிந்து அதிர்ந்து போனார் சதாம் உசேன்.

ஒன்றல்ல, இரண்டல்ல...

ஒன்றல்ல, இரண்டல்ல...

சதாம் உசேன் எனும் பெயரால் ஒன்றல்ல, இரண்டல்ல... ஏறத்தாழ நாற்பது நிறுவங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளார் சதாம் உசேன். மரைன் இன்ஜினியரிங் என்பதால் பல நாடுகள் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் சதாம் உசேன் எனும் பெயர் கொஞ்சம் தடையாக இருக்கும் என்ற அச்சத்தால் நிறுவனங்கள் இவரை நிராகரித்துள்ளன.

பெயர் மாற்றம்!

பெயர் மாற்றம்!

இது தான் தடை என அறிந்த சதாம் உசேன் தனது பெயரை சாஜித் என மாற்றி கொடுக்க பல்கலைகழகத்தை அணுகினார். ஆனால், அது உதவவில்லை. பிறகு சி.பி.எஸ்.இ பள்ளியில் பயின்ற சதாம் அங்கே முயற்சித்தார். அவர்களும் உதவவில்லை.

நீதிமன்ற படியேறியுள்ளார்...

நீதிமன்ற படியேறியுள்ளார்...

இப்போது ஜார்கண்ட் மாநில நீதிமன்ற படியை ஏறியுள்ளார் சதாம் உசேன். இதன்படி தனது பள்ளி, பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, பல்கலைகழக சான்றிதழ் போன்றவற்றில் பெயர் மாற்றம் செய்து தர கோரியுள்ளார். இதற்கான் விசாரணை வரும் மே - 5ம் தேதி தொடங்கவுள்ளது.

வேதனைக்குள்ளான சதாம்!

வேதனைக்குள்ளான சதாம்!

எண்ணற்ற கனவுகள் கொண்டிருந்தும், புத்திசாலியாக இருந்தும் நினைத்த வேலை கிடைக்கவில்லை என வேதனைக்குள்ளாகி யுள்ளார் சதாம் உசேன். பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானும் தன் பெயரால் சில நாடுகளில் உள்நுழைய தடைகளை கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி - விகடன் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Meet The Man who Rejected by Companies Only Because of his Name

Meet The Man who Rejected by Companies Only Because of his Name
Story first published: Tuesday, March 21, 2017, 15:09 [IST]
Desktop Bottom Promotion