For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

12 ஜோதிலிங்கத்தில் மிகப் பழமையான மல்லிகார்ஜுனாவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? அது எங்க இருக்கு

12 ஜோதிலிங்கத்தில் மிகப் பழமையான கோவிலாந மல்லிகார்ஜுனா கோவிலைப் பற்றிய ஸ்தல வரலாறு மற்றும் அதன் கதையும் தெரிந்து கொள்ள இந்த கட்டுரை உதவும்

By Divyalakshmi Soundarrajan
|

இந்தியாவில் மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் உள்ளன. பல்வேறு மாநிலங்களில் அவை அமைந்துள்ளன. அப்படி ஆந்திராவில் அமைந்துள்ள ஜோதிர்லிங்கம் தான் இந்த மல்லிகார்ஜூனர் கோவில்.

இது ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது ஆந்திர தலைநகரம் ஹைதெராபாதில் இருந்து 212 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

Mallikarjuna: The Story Of The Second Jyotirlinga

மல்லிகார்ஜூனர் கோவிலானது 12 ஜோதிர்லிங்களில் மிக பழமையான கோவிலாகும். இங்கு சிவ பெருமான் மற்றும் பார்வதி தேவி இருவருமே லிங்க வடிவில் இருப்பது தான் தனித்துவம் வாய்ந்தது. மல்லிகார்ஜூனா எனும் பேரில் "மல்லிகா" என்பது பார்வதி தேவியையும் "அர்ஜூனா" என்பது சிவ பெருமானின் பேரையும் குறிக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிறப்புத்தன்மை :

சிறப்புத்தன்மை :

இந்த கோவிலின் அடுத்த சிறப்புத்தன்மை என்னவென்றால், 275 பாடல் பெற்ற ஸ்தலங்களில் இந்த கோவிலும் ஒன்று. பாடல் பெற்ற ஸ்தலங்கள் என்றால் சிவ பெருமானுக்கு உரிய சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலங்கள் ஆகும். சைவ நாயன்மார்களின் சிறப்பு வாய்ந்த வழிபாட்டு தலமாக இந்த கோவில் 6வது மற்றும் 7வது நூற்றாண்டுகளில் விளங்கியது.

 சக்தி பீடமாக மல்லிகார்ஜூனர் கோவில்

சக்தி பீடமாக மல்லிகார்ஜூனர் கோவில்

52 சக்தி பீடங்களில் மல்லிகாரஜூனர் கோவில் ஒன்றாக திகழ்கிறது. சிவ பெருமான் தனது மனைவி சதி தேவியுடன் அழிவு நடனம் ஆடிக்கொண்டிருக்கும் போது, விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தால் சதி தேவியின் எரிந்த உடலை துண்டுகளாக வெட்டி விடுகிறார்.

அவ்வாறு வெட்டப்பட்ட துண்டுகள் பூமியில் விழுந்த ஒவ்வொரு இடமும் சதி தேவியின் கோவில்களாக சிறந்து போற்றப்பட்டு வருகின்றது. அவைகள் தான் இன்று சக்தி பீடங்களாக திகழ்கின்றன.

விஷ்ணுவால் வெட்டப்பட்ட பாகங்களில் சதி தேவியின் உதடு விழுந்த இடம் தான் இந்த மல்லிகார்ஜூனர் கோவில். எனவே, இந்த கோவில் இந்துக்களின் புன்னிய ஸ்தலமாக போற்றப்படுகிறது.

புராணக்கதை

புராணக்கதை

மல்லிகார்ஜூனர் கோவிலைப் பொறுத்தவரை பல்வேறு வகையான புராணக்கதைகள் பக்தர்களால் கூறப்படுகின்றது. இங்கு நாம் இப்போது 2 கதைகளைப் பற்றி பார்ப்போம்.

கதை-1 :

கதை-1 :

சிவ பெருமானும் பார்வதி தேவியும் அவர்களது மகன்களான விநாயகப் பெருமானுக்கும் முருக பெருமானுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் அவர்களுள் யாருக்கு முதலில் திருமணம் செய்து வைப்பதென்ற வாக்குவாதம் தொடங்கியது. பின்னர் சிவ பெருமான் இருவருக்கும் ஒரு போட்டி வைக்க முடிவு செய்தார். இருவரில் யார் முதலில் இந்த உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத் தான் முதலில் திருமணம் என்று கூறிவிட்டார்.

கதை-1 :

கதை-1 :

முருகப் பெருமான் அவரது வாகனமான மயில் மீது ஏறி உலகை சுற்ற ஆரம்பித்தார். ஆனால், விநாயகர் அவரது பெற்றோரான சிவன் மற்றும் பார்வதியை 7 முறை வலம் வந்து அவர்களே தன் உலகம் என்று கூறி போட்டியில் வெற்றி பெற்று விட்டார்.

விநாயகர் வெற்றி பெற்றதால் அவருக்கு ரித்தி மற்றும் சித்தி ஆகிய இருவரை மணம் முடித்து வைத்தனர். உலகை சுற்றிவிட்டு திரும்பிய முருகப் பெருமான் இதை பார்த்து கோபம் கொண்டார். பின் கைலாய மலையை விட்டு கிரவுஞ்ச மலையில் குமாரபிரம்மசாரியாக நின்றார்.

கதை-1 :

கதை-1 :

இந்த சம்பவம் சிவ பெருமானையும் பார்வதி தேவியையும் கவலையில் ஆழ்த்தியது. பின்னர் முருகப் பொருமானைப் பார்க்க அவர் இருக்கும் கிரவுஞ்ச மலைக்கு சென்றனர். இவர்கள் வருவதை அறிந்த முருகப் பெருமான் அங்கு இருந்து வேறு மலைக்கு போய்விட்டார்.

சிவ பெருமானும் பார்வதி தேவியும் காத்திருந்த இடம் தான் இப்போது ஸ்ரீசைலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், சிவ பெருமான் அங்கு அமாவாசை நாள் அன்றும், பார்வதி தேவி பௌர்ணமி நாள் அன்றும் வந்ததாக கூறப்படுகிறது.

கதை-2 :

கதை-2 :

இரண்டாவது கதை இளவரசி சந்திராவதி பற்றியது. இந்த கதையானது மல்லிகார்ஜூனர் கோவில் சுவற்றில் செதுக்கப் பட்டிருப்பதை காணலாம்.

சந்திராவதி அவர்கள் பிறந்தது இளவரசியாக, ஆனால் அவர் அவரது வாழ்நாளை தவம் செய்வதிலேயே கழித்து வந்தார். ஒரு நாள் அவர் கதலி காட்டில் ஆழ்ந்த தவத்தில் மூழ்கி இருந்த போது ஒரு கபில பசுவை வில்வ மரத்தின் கீழ் பார்த்தார். அந்த பசு தனது மடியில் இருந்து தானாக தரையில் பாலை ஊற்றி கொண்டு இருந்தது. இதே போல் தினமும் நடந்துக் கொண்டு இருந்தது.

கதை-2 :

கதை-2 :

இதை அடுத்து இளவரசி சந்திராவதி அந்த மரத்தின் கீழே தோண்டிப் பார்த்தார். அங்கு அவர்க்கு ஒரு சுயம்பு சிவ லிங்கம் கிடைத்தது. அந்த சிவ லிங்கம் நெருப்பு போன்று பிரகாசமாக இருந்தது. இளவரசி சந்திராவதி சுயம்பு லிங்கத்திற்கு வழிபாடு நடத்தி இந்த ஜோதிர்லிங்கத்திற்கு ஒரு பெரிய கோவிலை கட்டுனார்.

இதுவே அவர் மிகப் பெரிய சிவ பக்தை என்பதற்கு அடையாளம். சந்திராவதிக்கான நேரம் வந்தவுடன் அவர் கைலாசத்திற்கு காற்றின் மூலமாக சென்று சிவனின் பாதங்களில் சரணடைந்து முக்தி அடைந்தார்.

மல்லிகார்ஜூனரை வழிபடுவதன் முக்கியத்துவம் :

மல்லிகார்ஜூனரை வழிபடுவதன் முக்கியத்துவம் :

மல்லிகார்ஜூனரை மனதார வழிபடுவதால் அனைத்து செல்வ வளமும் கிடைக்கப் பெற்று செல்வாக்கோடும் மன நிம்மதியுடனும் வாழலாம். உண்மையான பக்தியுடன் சிவனை தொழுதால் எல்லா வேண்டுதல்களும் ஆசைகளும் நிச்சயம் கிடைக்கப் பெறுவீர்கள்.

திருவிழாக்கள்

திருவிழாக்கள்

ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மல்லிகார்ஜூனர் கோவிலில் மகா சிவராத்திரி தான் மிக மிக முக்கியமான திருவிழவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த திருவிழா மிகவும் ஆடம்பரமாகவும் மற்றும் நேர்த்தியாகவும் கொண்டாடப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mallikarjuna: The Story Of The Second Jyotirlinga

Mallikarjuna: The Story Of The Second Jyotirlinga
Desktop Bottom Promotion