2017-ல் உங்கள் ராசிக்கு சனி பகவானின் தாக்கம் எப்படி இருக்கிறது?

இங்கு 2017-ல் உங்கள் ராசிக்கு சனி பகவானின் தாக்கம் எப்படி இருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

Subscribe to Boldsky

ஜோதிடத்தில் மிகவும் அச்சம் கொண்டு காணப்படும் பலன் என்றால் அது சனி பலன் / சனியின் தாக்கம் தான். ஒருவரது ஜாதகத்தில் காணப்படும் நல்லது, கெட்டதற்கான பலனாக தான் சனி காணப்படுகிறது.

இந்த வருடம் சனியின் பலன்கள் யார் யாருக்கு நன்மை விளைவிக்கும், யார் யாருக்கு தீமை விளைவிக்கும் என்பது பற்றி இங்கு காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மேஷம்!

இந்த வருடம் சனி உங்களுக்கு சிறப்பான பயனளிக்கும். அஷ்டம சனியில் இருந்து வெளிவந்துள்ள உங்களுக்கு, சனி அதிர்ஷ்டத்தை அளிக்கும். துன்பங்கள் கழியும், பொருளாதாரம் மற்றும் தொழில் சார்ந்து உயர்வுகள் காண்பீர்கள்.

ரிஷபம்!

உங்களுக்கு அஷ்டம சனி. இதை எண்ணி நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். ரிஷப ராசிக்கு சனி யோகம். கெடுதல், தீமைகள் என பெரிதாக தாக்கம் இருக்காது. மேலும், இந்த வருடம் சனி தாக்கத்தால் குடும்ப பிரச்சனைகள் தீரும், திருமண தடை நீங்கும், குழந்தை செல்வம் கிட்டும் வாய்ப்புகள் உண்டு, வெற்றியும், புகழும் தேடி வரும்.

மிதுனம்!

மிதுன ராசிக் காரர்களுக்கு இது சப்தம சனி. கடன் தீரும், கல்வி மூலம் நன்மை அடைவீர்கள், திட்டமிட்டவை எல்லாம் சிறப்பாக அமையும். புதிய தொழில், வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. திருமணம் ஆனவர்களுக்கு மனைவியால் நன்மைகள் கைக்கூடும்.

கடகம்!

இவ்வருடம் சனியின் தாக்கம் உங்களுக்கு நல்லதாகவே உள்ளது. திட்டமிட்டு செய்தால் வெற்றிகள் குவியும். வீண் செலவுகள் குறையும். பண வரவு அதிகரிக்கும். பயணங்கள் மேற்கொள்ளும் நிலை ஏற்படும். புது நட்புகளும், அவர்கள் மூலம் நன்மைகளும் அமையலாம். செலவில் மட்டும் சற்று ஜாக்கிரதை அவசியம்.

சிம்மம்!

இதுநாள் வரை இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். அர்தாஷ்டம சனி விலகியுள்ளது. கவலைகள் விலகும், பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். நல்லவர்கள் உதவ முன்வருவார்கள். குடும்ப குழப்பங்கள் முடிவுக்கு வரும், கனவுகள் நிறைவேறும்.

கன்னி!

கன்னி ராசிக்காரர்களுக்கு இது அர்தாஷ்டம சனி காலம். இது கொடுமைகள் விளைவிக்கும் என சிலர் அச்சுறுத்தலாம். ஆனால், பயப்பட தேவையில்லை. ஜென்ம ராசியில் சனி பகவன் பார்வை செய்வதால் ஆரோக்கிய பிரச்சனைகள், கடன் பிரச்சனைகள் தீரும். புதிய வேலை கிடைக்கும், மந்தமான தொழில் சிறக்கும், கையில் காசு தங்கும்.

துலாம்!

இத்தனை நாள் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த சனி, இனிமேல் நிம்மதி அளிக்கும். எதிர்பாராத செலவும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். சொந்த வீடு வாங்கும் நேரம் வரும், பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்!

ஜென்ம ராசியில் இருந்த சனி உங்களை விட்டு விலகுகிறார். ஆரோக்கியம் மேம்படும், கல்வி சிறக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் வரும், வேலையில் மேலதிகாரிகளுடன் கவனமாக பழகுங்கள்.

தனுசு!

ஏழரை சனியுடன், ஜென்ம சனியும் சேருகிறது. சுக்கிரன் உடன் இருப்பதால் நன்மை விளைவும் அச்சம் வேண்டாம். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு நல்ல யோகம். தொழில், வேலையில் லாபம் கிடைக்கும், வெற்றிகள் அமையும். வரா கடன் வரும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சனைகள் உண்டாகலாம்.

மகரம்!

மகர ராசிக்காரர்களுக்கும் ஏழரை சனி. நன்மைகள் சிறிதளவு அமையும். கடன் தொல்லை நீங்கும், நீண்டநாள் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். இல்லறத்தில் சுப நிகழ்சிகள் அமையும்.

கும்பம்!

உங்களுக்கு லாபகரமாக அமையும் இந்த வருட சனி பலன். யோகாமயமாக எல்லாம் அமையும், தொட்டவை எல்லாம் வெற்றி அடையும். ராஜ வாழ்க்கை அமையலாம். கஷ்டமும், நஷ்டமும் தீரும். எதிலும் சற்று பொறுமையாக செயல்பட வேண்டும்.

மீனம்!

நோய்நொடி தீரும், மன சங்கடங்கள் விலகும், மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் சுக நிகழ்வுகள் நடக்கும், கையில், வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலையவேண்டாம். வீண் குழப்பங்களை எண்ண வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: astrology, ஜோதிடம்
English summary

Lord Shani in 2017: Is your Zodiac Sign in trouble?

Lord Shani in 2017: Is your Zodiac Sign in trouble?
Please Wait while comments are loading...
Subscribe Newsletter