For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நரம்பு புடைப்பு என நினைத்து சிகிச்சை அளித்த மருத்துவரது கையில் சிக்கிய கொக்கிப்புழு!

42 வயதுடைய முதியவர் ஒருவர், தனது பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தான் அனுபவித்த ஓர் மோசமான சம்பவத்தை, நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.

|

கற்பனை செய்து கொள்ளுங்கள், ஒரு நாள் தூங்கி எழும் போது, காலின் ஒரு பகுதியில் சிறியதாக நரம்பு புடைத்து இருந்தது. பின் நாளாக அது நீளமாகிறது. நீங்கள் அப்போது என்ன நினைப்பீர்கள்? அப்படி தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருவரின் கதையும்.

42 வயதுடைய முதியவர் ஒருவர், தனது பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தான் அனுபவித்த ஓர் மோசமான சம்பவத்தை, அதாவது பாதத்தில் சுருள்சிரை நரம்பு என நினைத்து, அதை மருத்துவரிடம் சோதிக்கும் போது, கொக்கிப் புழு இருந்த கதையை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அது என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மருத்துவ சிகிச்சை

மருத்துவ சிகிச்சை

42 வயது முதியவர் தனது பாதத்தில் சுருள்சிரை நரம்பு நாளுக்கு நாள் தீவிரமாவதைக் கண்டு அஞ்சி, மருத்துவரிடம் சென்றார். அதுவும் ஒவ்வொரு நாளும் அது 2 செ.மீ நீளத்திற்கு வளர்ச்சி பெறுகிறதாம். அப்படியெனில் எவ்வளவு பயந்திருப்பார் என்று பாருங்கள்.

மருத்துவருக்கே அதிர்ச்சி

மருத்துவருக்கே அதிர்ச்சி

அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், சோதித்தப் பின் அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏனெனில் அவரது பாதத்தில் இருப்பது சுருள்சிரை நரம்பு இல்லை, அது ஒரு கொக்கிப்புழு என்பதால். அதுவும் அந்த கொக்கிப்புழு அவரது சருமத்துடன் உட்பொதிக்கப்பட்டிருந்தது.

தோலிற்குரிய லார்வா மிக்ரன்ஸ்

தோலிற்குரிய லார்வா மிக்ரன்ஸ்

அறிவியலின் படி, இம்மாதிரியான கொக்கிப் புழுக்கள் தோலிற்குரிய லார்வா மிக்ரன்ஸ்களாகும். இந்த புழுக்கள் விலங்குகளின் மலத்தை மனிதர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் போது, மனித உடலைத் தாக்கி சருமத்தின் வழியாக உள்ளே நுழையும்.

வெறும் காலில் நடந்ததால் நேர்ந்தது

வெறும் காலில் நடந்ததால் நேர்ந்தது

மருத்துவர்களின் படி, இந்த முதியவர் கடற்கரை ஓரத்தில் வெறும் காலில் நடக்கும் போது, விலங்குகளின் மலத்தை தெரியாமல் மிதித்தால், இந்த வகையான புழுக்கள் அவரது பாதங்களைத் தாக்கி உடலினுள் நுழைந்திருக்கும் என்கின்றனர்.

வெற்றிகரமாக நீக்கப்பட்டது

வெற்றிகரமாக நீக்கப்பட்டது

எப்படியோ, மருத்துவர் அந்த முதியவரின் பாதத்தில் இருந்த கொக்கிப் புழுவை வெற்றிகரமாக நீக்கிவிட்டார். இது அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்த அந்த முதியவரின் பாத புகைப்படம்.

எனவே வெளியே செல்லும் போது, தவறாமல் காலணியை அணிந்து கொள்ளுங்கள். அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி, காலணி அணியாமல் வீட்டு வாசற்படியை விட்டு இறங்காதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Doctor Thought It Was A Varicose Vein, But…

This looked like a varicose vein at first to the doctor, but on a closer look it showed that it was infact a hookworm! Check out the bizarre story!
Story first published: Monday, April 10, 2017, 12:25 [IST]
Desktop Bottom Promotion