For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாயின் உயிரை காக்க தன்னையே ஏலமிட்ட மகள்!

புற்றுநோயால் அவதிப்படும் தாயை காப்பாற்ற தன்னையே 3,50,000 யான்-க்கு (சீன பணம்) விற்க முன்வந்துள்ள சீன பெண்.

|

கற்பனை செய்து பார்க்கவே சற்று கடினமாக தான் இருக்கும். யாருக்கும் இந்த நிலை வரக் கூடாது என்பது தான் நாம் அனைவரும் பிரார்த்தனை செய்யும் விஷயம்.

Teenage Girl Offers To Sell Her Body For 40K Pounds

Image Courtesy

இன்று யாருக்கு இந்த மனம் வரும், புற்று நோயால் பாதிக்கப்பட்ட தாயை காப்பாற்ற வேண்டும் என தன்னையே விற்க துணிந்துள்ளார் இந்த சீன பெண்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

பதின் வயது பெண்!

19 வயதே நிரம்பிய இந்த சீனத்து பெண், தாயை புற்றுநோயில் இருந்து காப்பாற்ற சீன பணத்தில் 3,50,000 யான் தேவைப்படுவதால், அதை திரட்ட, தன்னை தானே விற்க முன்வந்த செய்தி பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

தவறான வழிநடத்தப்பட்ட பெண்!

புற்று நோய் சிகிச்சைக்கு அதிகளவில் பணம் அவசரமாக தேவைப்படுவதால், தவறாக வழிநடத்தப்பட்ட சாவோ மெங்கியான் எனும் இந்த சீன பெண், தன்னை தானே விற்க முன்வந்துள்ளார்.

ஆன்லைன் ஏலம்!

ஆன்லைன் ஏலம்!

தன்னை யார் வேண்டுமானால் 40 ஆயிரம் பவுண்டுகள் கொடுத்து ஏலத்தில் எடுத்துக் கொள்ளலாம். தனது தாயின் மருத்துவ செலவிற்காக என்னை நான் விற்கிறேன் என இவர் ஆன்லைன் ஏலத்தில் விற்க முனைந்தார்.

பரிதாபம்!

பரிதாபம்!

"என்னை நல்ல உள்ளம் கொண்டவர்கள் ஏலத்தில் எடுக்கவும். இதனால் என் தாய் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும்."

"நீங்கள் பணத்தை கொடுத்த அடுத்து, நாம் உங்களுக்காக எந்த வேலையும் செய்ய தயாராக உள்ளேன்."

"என்னை வாங்கும் நபர் என்ன வேலை செய்ய கூறினாலும், நான் மறுக்காமல் செய்வேன், என் வாக்கை நான் ஏமாற்ற மாட்டேன்."

என பரிதாபமாக கூறியுள்ளார்.

தாராள மனம்!

தாராள மனம்!

சமூக ஊடகங்களில் இது பரவியது. இதை கண்ட பலரும் பரிதாபமும், விரக்தியும் அடைந்தனர். கடைசியில், ஒரு தாராள மனம் கொண்ட நபர் ஒருவர், அந்த பெண்ணின் தாயின் மருத்துவ செலவுகளை முழுவதும் ஏற்று மருத்துவமனை பில்களை செலுத்தியதா கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Teenage Girl Offers To Sell Her Body For 40K Pounds

Young woman, 19, sells her body on social media for £41,000 to save her cancer-stricken mother
Desktop Bottom Promotion