For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்!

கற்பழிப்பே கொடுமையானது, இதில் மெடிக்கல் எக்ஸாமினேஷன் என்ற பெயரில் அவர்கள் உடலையும, மனதையும் மென்மேலும் காயப்படுத்தும் கொடுமைகள்!

|

கற்பழிப்பு தான் ஒரு நபரை சம்பவத்தின் போது, அந்த சம்பவத்திற்கு பிறகும் பெரிதும் கவலை அடைய செய்யும் குற்றம். ஏன் குற்றவாளியை விட, பாதிப்பு அடைந்த நபரை சமூக கூனிக்குறுகி போக செய்யும் குற்றமும் கற்பழிப்பு தான்.

Raped? The Actual Pain Starts After That...

இதற்கு முழுக்கு முழுக்க காரணம் சமூகம் தான். அரவணைக்க வேண்டிய நபரை தூற்றி பேசி, உதைத்து தள்ளுகிறது. கற்பழிக்கப்பட்ட அந்த நபர் அந்த சம்பவத்தின் போது மட்டுமல்ல, மருத்துவம் மற்றும் மருத்துவ பரிசொதனைகளின் போதிலும் கூட பல கொடுமைகளை அனுபவிக்கிறார்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடை!

உடை!

மருத்துவர் முன்பு அனைத்து உடைகளையும் கழற்ற வேண்டும்..

ஒரு பேப்பர் ஷீட் மீது கற்பழிக்கப்பட்ட நபர் நிற்க வேண்டும். ஒவ்வொரு உடையாக கழற்ற வேண்டும். அவர் உடையை கழற்றும் போது அதிலிருந்து கீழே விழும் பொருட்களை சேகரிப்பார்கள். அவை லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பப்படும்.

இரத்த கறை, விந்தணு அல்லது சேறு, கிரீஸ் போன்ற எதுவாக இருந்தாலும், அந்த குற்றம் நடந்த இடத்தை கண்டறிய இவை யாவும் சேகரிக்கப்படுகின்றன.

பொது மருத்துவ பரிசோதனை!

பொது மருத்துவ பரிசோதனை!

கற்பழிக்கப்பட்ட பெண், உடைகளை முழுவதுமாக கழற்றி, நிர்வாணமாக அல்ட்ரா-வைல்ட் லைட் முன்பு நிறுத்தப்பட்டு பரிசோதனை செய்யப்படுவார்.

காயங்கள், கீறல்கள் போன்றவை மிக நுட்பமாக காண, இந்த பரிசோதனை செய்யப்படுகிறது.

காயங்களை மிக அருகாமையில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வார்கள். அது உடலின் எந்த பாகமாக இருப்பினும் சரி.

Most Read:பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 12 தமிழ் நடிகைகள்!

முடி!

முடி!

கற்பழிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பு பகுதியின் முடிகளையும் சேகரித்து பரிசோதனை செய்கின்றனர். இந்த பரிசோதனைக்காக 15 -20 பிறப்புறுப்பு பகுதி முடிகள் சேகரிக்கப்படுகின்றன.

விந்து!

விந்து!

கற்பழிக்கப்பட்ட நபருக்கு முடி அதிகமாக இருந்தால், அதை முடிந்த வரை நெருக்கமாக அகற்றிய பிறகு, விந்தணு சார்ந்த பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

விந்தணு சேகரித்து அந்த நபர் யாரென கண்டறியலாம் என்பதற்காக, கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பிறப்புறுப்பு முழுவதுமாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.

மென்மேலும் காயம்...

மென்மேலும் காயம்...

கற்பழிப்பு வழக்குகளில் மட்டும் தான். பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே மீண்டும், மீண்டும் காயத்திற்கு ஆளாகிறார். சம்பவத்தின் போதும், மீண்டும் மருத்துவத்தின் போது, பரிசோதனைகளின் போதென. உடல் மட்டுமின்றி, அவரது மனமும் கற்பழிக்கப்படுகிறது.

மருத்துவ ரீதியாகவும், குற்றவாளியை கண்டறிவதற்கும் எனிலும், இதுப் போன்ற மருத்துவ பரிசோதனைகள் அந்த நபரை கூனிக்குறுகி போக செய்கிறது என்பது தான் உண்மை.

Most Read: 700 நாட்கள் சுய இன்பம் காணாமல் இருந்த ஆண், உடல் மற்றும் மனதளவில் கண்ட மாற்றங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Raped? The Actual Pain Starts After That...

If You Thought Rape Is The Worst Thing A Person Goes Through, You Should Know What Happens In The Examination
Desktop Bottom Promotion