தங்கள் மரண செய்தியை பதிவு செய்து வரும் சிரியர்கள், அச்சத்தில் உறையும் உலக மக்கள்!

போர் நிலை அதிகரித்து வருவதன் தொடர்ச்சியாக அழிவின் அருகாமையில் அச்சத்தின் பிடியில் சிக்கி தவிக்கும் சிரியர்கள். ட்விட்டரில் தங்கள் மரண செய்திகளை பதிவு செய்து வருகிறார்கள்.

Posted By:
Subscribe to Boldsky

பொன்னாசையும், மண்ணாசையும் எப்போது அதிகமானதோ அப்போது தான் அடிமை படுத்தும் எண்ணம் பிறந்தது, தான் அரசனாக வேண்டும் என்ற கர்வம் முளைத்தது. அதே நேரத்தில் தான் மனிதர்களின் மனதில் மனித நேயம் நோய்வாய்ப்பட்டும் போனது.

இன்று வளர்ச்சி கண்டு வரும் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி என ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் அதை சார்ந்து முதுகெலும்பாய் இயங்கி வரும் பெரும் வர்த்தகமும் இருக்கிறது.

People From Aleppo Are Saying Their Goodbyes On Twitter

தக்காளி, வெங்காயம் போல விலைக்கு ஏற்ற தரத்தில் தான் கல்வியும், மருத்துவமும் கிடைக்கிறது. முன்பு மிருகங்களிடம் இருந்து காத்துக்கொள்ள சண்டையிட்டோம். இன்று மனிதர்களை கொல்ல மிருகங்களாய் மாறி போரிட்டுக் கொண்டிருக்கிறோம்.

இரு நாடுகளுக்கு மத்தியில், இரு மனிதர்கள் மத்தியில் எழும் பகைமை பல ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரை பலிவாங்கிவிடுகிறது.

இதோ சிரியர்கள் ட்விட்டரில் பதிவு செய்து வரும், அவர்களது கடைசி மரண செய்தி....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

என் பெயர் பானா!

என் பெயர் பானா. என் வயது 7. நான் கிழக்கு அலெப்போ பகுதியில் இருந்து பேசி வருகிறேன். வாழ்வா சாவா போராட்டத்தின் கடைசி தருணத்தில் இருக்கிறேன்.

அழுதுக் கொண்டிருக்கிறேன்!

என் அப்பாவிற்கு அடிப்பட்டுவிட்டது. நான் அழுதுக் கொண்டிருக்கிறேன்.

நன்றி!

எங்களுக்காக மனித நேயத்துடன் துணை இருந்த அனைவருக்கும் நன்றி. உங்களை மறக்கமாட்டோம்.

என் அழுகை கேட்கிறதா?

தன் கடைசி வீடியோ பதிவில். சிரியர்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் கொடுமையை பகிரங்கமாக பகிர்ந்துள்ளார் லினா ஷாமி என்பவர்.

ஈவிரக்கமற்ற செயல்!

குழந்தைகள் மருத்துவமனைகள் கூட அழிக்கப்பட்டு வருகின்றன. மக்கள் வீதிகளில் ஒதுங்க இடமின்றி உயிரை இழந்து வருகிறார்கள்.

தாக்குதல்!

தொடர் தாக்குதல் நடந்து வருகிறது. இதுவே எங்களது கடைசி செய்தியாக இருக்கலாம். என தாக்குதல் குறித்து பிலால் அப்துல்லா கரீம் என்பவர் பதிவு செய்துள்ள வீடியோ.

அங்கும், இங்கும் ஓடுகிறார்கள்!

எல்லா பக்கமும் குண்டுகள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் எல்லா பக்கமும் சிதறி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

எங்களிடம் எதுவும் இல்லை!

பசி, பட்டினியோடு இருக்கிறோம். எங்களிடம் எதுவும் இல்லை. எங்களை படுகொலை செய்துக் கொண்டிருக்கின்றனர் என்று முதியவர் கூறும் காணொளிப்பதிவு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

People From Aleppo Are Saying Their Goodbyes On Twitter

People From Aleppo Are Saying Their Goodbyes On Twitter
Story first published: Wednesday, December 14, 2016, 18:10 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter