ஓவர் நைட்டில் உலகைக் கலக்கிய பாகிஸ்தான் டீக்கடை பையன், விஷயம் தெரிஞ்சா வாயைப் பொளந்து போவீங்க!

யார், யாரோ எதைஎதையோ செய்து உலக அளவில் பாப்புலர் ஆனது அந்த காலம். தற்போதைய சமூக வலைத்தளம் நீங்கள் சின்ன விஷயம் செய்தால் கூட, அட ஏன் சும்மா ஒரு போஸ்ட் பதிவு செய்தால் கூட உங்களை உலக பிரபலம் ஆக்கிவிடும்.

Posted By:
Subscribe to Boldsky

நீங்கள் ஒரு உண்மையான நெட்டிசனாக இருந்தால் இதை படறி முன்பே கேள்விப் பட்டிருக்க வேண்டும். ஆம், பாகிஸ்தான் டீக்கடை பையன் ஒருவர் திடீரென இன்டர்நெட் சென்சேஷனல் ஆகியிருக்கிறார்.

Pakistani Chaiwala Becomes The New Internet Sensation

ஆனால், அவர் ஏன், எப்படி, எதற்கு பிரபலம் ஆனார் என்றெல்லாம் தெரிந்தால் சிறியளவில் ஷாக் ஏற்படலாம். சிலருக்கு கோபம் கூட வரலாம். புகழ் ஒருவரை எப்படி தேடி வரும் என சொல்ல முடியாது.

பார்க்க அழகாக சமத்து பையன் மாதிரி தான் இருக்கிறார் அந்த பாகிஸ்தான் டீக்கடைக் காரர். ஆனால் அவரது விஷேசமே அவரது கண்கள் தான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

அர்ஷத் கான்!

அர்ஷத் கான் பாக்கிஸ்தானில் டீக்கடையில் வேலை செய்கிறார். அதுவும் கடந்த ஒருசில மாதங்களாக தான். இதற்கு முன்பு அவர் பழம் விற்று வந்ததாக கூறப்படுகிறது.

18 வயது!

அர்ஷத் கானின் வயது வெறும் 18 தான்.ஆனால், இவருக்கே தெரியாமல் சமூக தலத்தில் பகிரப்பட்ட இவரது புகைப்படம் காரணமாக இவர் இன்று உலக பிரபலம்.

நீலநிறக் கண்ணன்!

அர்ஷத் கானின் தனித்துவமே அவரது நீலநிறக் கண்கள் தான். நீலநிறக் கண்களும், அர்ஷத் கானின் இளம் வயது அழகும், உலக பெண்களை வசீகரித்து விட்டது. அதனாலே இவரது படங்களை இன்ஸ்டா உலகில் அதிக ஷேர் செய்கிறார்கள்.

சினிமா வாய்ப்புகள்?

இப்படியே போனால் இவருக்கு சினிமா வாய்ப்புகள் கூட குவியலாம். ஆனால், எளிமையான அர்ஷத் கான் அதில் எல்லாம் விருப்பமில்லை, தானுண்டு தன் வேலை உண்டு என இருக்கிறார்.

எப்படி கசிந்தது?

திடீரென இவரை பேட்டிக் காண டிவியில் இருந்து நிருபர்கள் எல்லாம் வருகிறார்கள், கேமராக்கள் கண்முன் மொய்க்கின்றன. ஆனால், இவரது படம் எப்படி இணையத்தில் கசிந்தது என இவருக்கே தெரியாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Pakistani Chaiwala Becomes The New Internet Sensation

Pakistani Chaiwala Becomes The New Internet Sensation
Story first published: Thursday, October 20, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter