For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உண்மை சம்பவங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் சினிமாக்கள்!

|

எந்த ஒரு கவியும், ஓவியமும், கதையும், திரைப்படமும் முழுக்க, முழுக்க கற்பனையானது அல்ல. கற்பனையாகவே இருப்பினும் கூட அதன் கரு, ஓர் உண்மை சம்பவத்தை தழுவியதாக தான் இருந்திருக்க கூடும். ஓர் சதவீதம் கூட உண்மை இல்லாத கவியோ, கதையோ, ஓவியமோ, திரைப்படமோ சாத்தியமற்றவை.

ஆனால், நாம் கண்டு ரசித்த சில திரைப்படங்கள் இந்தியாவில், தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவங்கள் என சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். பாம்பே, நாயகன் போன்ற படங்கள் உண்மை சம்பவம் என பெரும்பாலானோர் அறிவார்கள் ஆனால், ஹரிதாஸ், விண்மீன்கள், சத்தம் போடாதே, டார்லிங் 2 போன்றவை கூட உண்மை சம்பவங்கள் என நீங்கள் அறிவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 போலீஸ்காரர்கள் சம்மந்தப்பட்ட கதைகள்!

போலீஸ்காரர்கள் சம்மந்தப்பட்ட கதைகள்!

விசாரணை லாக் அப் எனும் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இது ஓர் உண்மை சம்பவமும் கூட. ரத்த சரித்திரம் ஆந்திராவில் இருக்கும் அனந்தபூர் மாவட்டத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவம் ஆகும். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய கதகளி, இவரது நண்பரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம்.

 உடல் ஊனம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்களின் கதைகள்!

உடல் ஊனம் சார்ந்து பாதிக்கப்பட்டவர்களின் கதைகள்!

ஹர்தாஸ், ஓர் போலிஸ் தந்தை மற்றும் ஆட்டிஸ்ட்டிக் குழந்தை மத்தியிலான உறவு பிணைப்பு. இது, இப்படத்தின் இயக்குனர். குமாரவேலன் அவர்களுக்கு தெரிந்த ஓர் சிறுவனின் உண்மை கதை. விண்மீன்கள் எனும் படம் பெருமூளை வாதம் (cerebral palsy) எனும் பாதிப்புடன் வாழ்ந்த நபரின் உண்மை கதை. நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம். அந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் எனும் நபரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம்.

 சாதாரண நபர்களின் கதைகள்!

சாதாரண நபர்களின் கதைகள்!

சுதந்திரத்திற்கு முன்பு, மதராஸ் மாகாணத்தில் தேயிலை எஸ்டேட்டில் நடந்த அடிமைத்தனம், கொடுமைகளை பற்றிய உண்மை கதை தான் பரதேசி. இந்த வருடம் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படமும் ஓர் உண்மை சம்பவம் தான். ஊட்டியில் நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் தான் கழுகு எனும் திரைப்படம்.

 காதல் தடைகள் பற்றிய உண்மை கதைகள்!

காதல் தடைகள் பற்றிய உண்மை கதைகள்!

காதல் திரைப்படம் ஓர் ரயில் பயணத்தில் இயக்குனரிடம் ஓர் கணவர் தன் வாழ்க்கையை பற்றி விவரித்த உண்மை சம்பவம். சத்தம் போடாதே ஆந்திராவில் 90-களில் நடந்த ஓர் உன் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். வழக்கு எண் 18/9 ஆசிட் அட்டாக் பற்றிய உண்மை சம்பவம் ஆகும்.

 சைக்கோ த்ரில்லர் உண்மை கதைகள்

சைக்கோ த்ரில்லர் உண்மை கதைகள்

யாகாவாராயினும் நா காக்க, சென்னையில் ஓர் இளைஞனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் ஆகும். அதிர்ச்சியான குழந்தை பருவம் கொண்டிருந்த ஓர் சிறுவனின் வாழ்க்கை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட உண்மை கதை தான் நடுநிசி நாய்கள். இது அமெரிக்காவில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. டார்லிங் 2, ஓர் நண்பர் கூட்டத்தில், ஓர் நண்பனின் இறப்பின் பிறகு நடந்த அமானுஷ்ய சம்பவங்கள் தான் இந்த திரைப்படம்.

 மணிரத்னம் ஸ்பெஷல்!

மணிரத்னம் ஸ்பெஷல்!

மணிரத்னம் உண்மை சம்பவங்களை புராண கதைகளை படங்களாக எடுப்பதில் வல்லவர். இவர் எடுத்த உண்மை சம்பவ திரைப்படங்கள். நாயகன் - வரதராஜ முதலியார்; குரு - திருபாய் அம்பானி; இருவர் எம்.ஜி.ஆர், கருணாநிதி.

 வகுப்புவாத பிரச்சனைகள் உண்மை கதைகள்!

வகுப்புவாத பிரச்சனைகள் உண்மை கதைகள்!

மும்பையில் 1992-93 ஆண்டி நடந்த வகுப்புவாத கலவரம் தான் பாம்பே திரைப்படம். தர்மபுரியில் பேருந்தில் வைத்து எரிக்கப்பட்ட மூன்று பெண்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் கல்லூரி. இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி-யின் கொலை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் குப்பி.

 போராளிகளின் உண்மை கதைகள்!

போராளிகளின் உண்மை கதைகள்!

ககாதியா வம்சம் மகாராணி ருத்ரமாதேவியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ருத்ரமாதேவி. கோவில்பட்டி வீரலட்சுமி ஓர் உண்மையான நபர். அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தொகுப்பாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. அரவான் , 18 நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவம். இது காவல் கோட்டம் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது.

 உண்மையான ராபின் ஹூட்களின் கதைகள்!

உண்மையான ராபின் ஹூட்களின் கதைகள்!

தென்னிந்தியா மாநிலங்களின் எல்லை பகுதியில் வாழ்ந்து வந்த வீரப்பனின் வாழ்க்கையை தழுவி வனயுத்தம் திரைப்படம். சீவலப்பேரி பாண்டி 60களில் திருநெல்வேலியில் சீவலப்பேரி எனும் கிராமத்தில் வாழ்ந்த உண்மை நபரின் கதை. மம்பட்டியான் மலையூர் எனும் தென் மாவட்ட கிராமத்தில் வாழ்ந்த உண்மையான நபரின் கதை.

 சுயசரிதை!

சுயசரிதை!

பாரதி, காமராஜர், பெரியார், ராமானுஜன் போன்றவை தமிழில் எடுக்கப்பட்ட சுயசரிதை படங்கள் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Movies That Inspired From Real Life Characters And Events

Movies That Inspired From Real Life Characters And Events, read here in tamil.
Desktop Bottom Promotion