For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசை மகள் மட்டுமல்ல, அவள் வாழும் தலைமுறையும் நலமுடன் இருக்க 20,000 கோடி: மார்க் தம்பதி!

|

ஒவ்வொருவரும் ஒரு நல்ல காரியத்தை செய்ய முற்படுகிறார்கள் எனில், அந்த காரியத்தின் பால் அவர்கள் எதையாவது இழந்திருப்பார்கள், சொந்த வாழ்வில், நெருங்கிய வட்டத்தில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏதாவது நடந்திருக்கும்.

அதனால் தான், கருணை / தொண்டு வீட்டில் துவங்குகிறது என்ற பிரபல பழமொழி இருந்து வருகிறது. அப்படி ஒரு விஷயம் தான் ஃபேஷ்புக் நிறுவனர் மார்க் தனது காதல் துணையுடன், பெற்றோர் என்ற பொறுப்புணர்வுடன் ஒரு நல்ல காரியத்தில் இறங்கியிருக்கிறார்.

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதியினர் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் "சான் ஜுக்கர்பெர்க்" என்ற தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்தனர். இதற்கு காரணம் தங்கள் ஆசை மகள் மேக்சிமா.

தங்கள் மகள் மட்டுமில்லாது, தங்கள் மகள் வாழப்போகும் நூற்றாண்டில் யாரும் நோய்நொடிகள் இன்றி இருக்க வேண்டும் என்று இந்த தம்பதி எண்ணுகின்றனர்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
99% தானம் தர்மம்!

99% தானம் தர்மம்!

மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதியினர் தங்கள் நிறுவனமாக ஃபேஸ்புக் மூலம் ஈட்டும் வருமானத்தில் 99% தங்கள் தொண்டு நிறுவனத்திற்கு அளிக்கின்றனர்.

20,000 கோடி!

20,000 கோடி!

மூன்று பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய பண மதிப்பில் 20,000 கோடிகளை அடுத்த பத்தாண்டுகளுக்கு ஒதுக்கியுள்ளனர். இந்த பணத்தை வைத்து நடப்பு நூற்றாண்டின் முடிவுக்குள் உலகில் உள்ள அனைத்து நோய்களையும் குணப்படுத்திவிட வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கின்றனர்.

மேம்பாடு குறித்த வேலைகள்!

மேம்பாடு குறித்த வேலைகள்!

இப்போது மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதியினர், தாங்கள் தங்கள் மகளின் தலைமுறையினர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம் என கூறியிருக்கின்றனர்.

குறித்து வைத்துக் கொள்ளுங்கள், எந்த ஒரு உயிரையும் நாம் இழக்க விட மாட்டோம் என சபதம் செய்கின்றனர் இந்த அற்புத தம்பதியினர்.

வாழ்நாள்!

வாழ்நாள்!

தங்கள் குழந்தை வாழும் வாழ்நாளுக்குள் ஆராய்ச்சியாளர்களின் உதவியோடு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம் என்கிறார்கள் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான்.

குழந்தை மருத்துவம்!

குழந்தை மருத்துவம்!

மார்க் ஜுக்கர்பெர்க்-ன் காதல் மனைவியான பிரிசில்லா சான் குழந்தை மருத்துவத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் 100!

மீண்டும் 100!

மனிதர்களின் வாழ்நாள் நடப்பு நூற்றாண்டில் நூறில் இருந்து 60க்கு குறைந்துவிட்டது. இதை மீண்டும் நூறுக்கு எடுத்து செல்வதே எங்களது இந்த முயற்சியின் கரு என்கிறார் மார்க்.

காப்பாற்ற முடியும்!

காப்பாற்ற முடியும்!

எங்கள் முயற்சியினால் யாரும் நோய்வாய்ப்பட்டு போகாமல் இருப்பார்கள் என நான் கூறவில்லை, எந்த நோயாக இருந்தாலும், அதை கட்டுப்படுத்தி குணப்படுத்த முடியும் என்ற நிலைக்கு கொண்டுவருவோம் என்கிறார் மார்க்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Mark Zuckerberg And Priscilla Chan To Spend $3 Billion To Cure Diseases

Mark Zuckerberg And Priscilla Chan To Spend $3 Billion To Cure Diseases
Desktop Bottom Promotion