இறந்த காதலி நினைவாக, பாம்புடன் குடித்தனம் நடத்தி வரும் இளைஞர்!

தனது இறந்த காதலி தான், பாம்பாக வந்திருக்கிறார் என நம்பி, பாம்புடன் குடித்தனும் நடத்தி வரும் இளைஞர் பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.

Posted By:
Subscribe to Boldsky

80-களில் ஒருசில தமிழ் சினிமாக்களில் இதை நாம் திரையில் கண்டுள்ளோம். பாம்பு காதலர்களை ஹீரோ கூட்டம் பிரித்துவிடும். அதற்காக பழிவாங்க பெண் பாம்பு அல்லது ஆண் பாம்பு மனித உருவெடுத்து ஏதோ ஒரு பௌர்ணமி, அமாவாசைக்காக காத்திருந்து வரும்.

Man Married Pet Snake He Believes is his Dead Girlfriend Reincarnated

Image Source

ஆனால் இங்கே, ஒரு இளைஞர் இறந்த தனது காதலியே பாம்பு உருவத்தில் வந்திருக்கிறார் என நம்பி பாம்புடன் குடித்தனம் நடத்தி வருகிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஐந்து வருடங்கள்!

ஐந்து வருடங்கள்!

ஐந்து வருடங்களுக்கு முன்னர் இவரது காதலி இறந்துவிட்டார். இது இவரது வாழ்வில் பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

ஒற்றுமை!

ஒற்றுமை!

பிறகு ஒரு நாள், இந்த இளைஞர் இந்த பாம்பை, ஒரு இடத்தில் கண்டுள்ளார். பாம்பு பார்க்க தன் காதலியுடன் ஒற்றுமை உள்ளது போன்று காட்சியளிக்க, இறந்த காதலி தான் பாம்பு ரூபத்தில் வந்திருக்கிறது என நம்பி வாழ்ந்து வருகிறார்.

பத்து அடி பாம்பு!

பத்து அடி பாம்பு!

பத்து அடி நீளம் உள்ள பாம்பை தன் காதலி என நம்பி இவர் ஒன்றாக வாழ்ந்து வருகிறார். புத்த மதத்தில் இறந்தவர்கள் விலங்குகள் உருவில் வருவார்கள் என கூறுவதை இவர் பின்பற்றி வருகிறாராம்.

செயல்கள்!

செயல்கள்!

பாம்புடன் விளையாடுகிறார், டின்னர் சாப்பிடுகிறார், விளையாடுகிறார், ஏன் இருவரும் ஒன்றாக தான் உறங்குகிறார்கள் என்றால் பாருங்களேன். அந்த பாம்பும் இவரை ஒன்றும் செய்யாமல், இவருடன் வாழ்ந்து வருகிறது என்பது தான் வியப்பை அளிக்கிறது.

காதலுக்கு கண்ணில்லை!

காதலுக்கு கண்ணில்லை!

காதலுக்கு கண்ணில்லை என்பார்கள். இந்த இளைஞர் விஷயத்தில் காதலுக்கு அச்சம், பயம் கூட இல்லை என்பது நிரூபணம் ஆகியிருக்கிறது. பாம்பை எட்டி நின்று பார்க்கவே அஞ்சும் மக்களிடம், காதலியின் நினைவுகள் கொண்டு, ஒன்றாக வாழ்ந்து வருகிறார் இந்த இளைஞர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Married Pet Snake He Believes is his Dead Girlfriend Reincarnated

Man Married Pet Snake He Believes is his Dead Girlfriend Reincarnated
Please Wait while comments are loading...
Subscribe Newsletter